17 மொழிகளை பயன்படுத்தி; விஜய் படத்துக்காக மதன் கார்க்கி எழுதிய ஹிட் பாடல் பற்றி தெரியுமா?

First Published Oct 3, 2024, 3:00 PM IST

கவிஞர் வைரமுத்துவின் மகனான மதன் கார்க்கி, நடிகர் விஜய்க்கு எழுதிய பாடல் ஒன்றில் 17 வெவ்வேறு மொழிகளை பயன்படுத்தி அசத்தி இருக்கிறார்.

Lyricist Madhan Karky

தமிழ் சினிமாவில் பல்வேறு வெற்றிப்பாடல்களை எழுதி முன்னணி பாடலாசிரியராக வலம் வருபவர் வைரமுத்து. இவரைப் போலவே இவரது மகன்களான மதன் கார்க்கி மற்றும் கபிலன் வைரமுத்து ஆகியோரும் தமிழ் சினிமாவில் பாடலாசிரியராக பணியாற்றி இருக்கின்றனர். இதில் மதன் கார்க்கி தற்போதைய காலகட்டத்திற்கு ஏற்றார் போல் நிறைய ஆராய்ச்சிகளை செய்து அதை தான் எழுதும் பாடல்களில் பயன்படுத்துவது உண்டு. அப்படி அவர் எழுதிய ஒரு தனித்துவமான பாடல் பற்றி பார்க்கலாம்.

Vairamuthu son Madhan karky

பிரம்மாண்ட இயக்குனர் ஷங்கர் என்றாலே அவரது படங்களில் பாடல்களுக்கு நிச்சயம் முக்கிய பங்கு இருக்கும். பாடல்களுக்கே அதிக செலவிடும் ஷங்கர் பல புது முயற்சிகளையும் தன்னுடைய பட பாடல்களில் செய்ய தவறியதில்லை. அந்த வகையில் விஜய் நடிப்பில் கடந்த 2012-ம் ஆண்டு வெளிவந்த நண்பன் திரைப்படத்தில் இடம்பெறும் அஸ்கு லஸ்கா பாடலில் பல ஆச்சர்யங்கள் ஒளிந்திருக்கும்.

இதையும் படியுங்கள்... கோட் முதல் போட் வரை; ஓடிடியில் இந்த வாரம் ஸ்பெஷல் ரிலீஸ் என்னென்ன? முழு லிஸ்ட் இதோ

Latest Videos


Vijay, Madhan Karky

இயக்குனர் ஷங்கர் தன்னுடைய முதல் படத்தில் இருந்தே நாலு ஜானர் பாடல்கள் இல்லாமல் படம் எடுத்ததில்லை. அதில் ஒன்று ராஜா பாட்டு, மற்றொன்று ஃபாரின் பாட்டு, மூன்றாவது மாடர்ன் பாட்டு, நான்காவது குத்துப் பாட்டு. இந்த கான்செப்டை அவர் ஒரே பாடலில் பயன்படுத்திய படம் தான் நண்பன். அப்படத்தில் இடம்பெறும் அஸ்க் லஸ்கா பாடலில் இந்த நான்கு ஜானரிலும் பாடலை படமாக்கி இருப்பார் இயக்குனர் ஷங்கர்.

Asku Laska song

இந்த பாடல் படமாக்கப்பட்டது மட்டுமின்றி இந்த பாடல் வரிகளும் தனக்கு வித்தியாசமாக இருக்க வேண்டும் என மதன் கார்க்கியிடம் கேட்டு வாங்கி இருக்கிறார் ஷங்கர். இது காதல் பாட்டு என்பதால், வழக்கமான லவ் சாங் போல் இல்லாமல், கிட்டத்தட்ட 17 மொழிகளில் காதலை சொல்லும்படியாக இப்பாடல் வரிகளை எழுதி இருக்கிறார் மதன் கார்க்கி.

Madhan Karky

இப்பாடலில் இடம்பெறும் முதல் வரியிலேயே 17 மொழிகளையும் பயன்படுத்தி இருப்பார் மதன் கார்க்கி. அதன்படி Asku என்பது டர்கிஷ் மொழி, laska என்பது ஸ்லொவேகியா மொழி, Lamour என்பது பிரெஞ்ச், amour என்பது ஸ்பேனிஷ், Aii என்பது சைனீஸ், asth என்பது ஐஸ்லேண்டிக், leibe என்பது ஜெர்மன், Ahaava என்பது ஹெப்ரூ, bolingo என்பது லிங்காலா, cintha என்பது இந்தோனேசியன், Ishq என்பது அரபிக், meile என்பது லித்துவேனியன், Love என்பது ஆங்கிலம், ishtam என்பது தெலுங்கு, premam என்பது மலையாளம், Pyar என்பது இந்தி, kaadhal என்பது தமிழ் மொழியாகும். அவர் பயன்படுத்திய இந்த 17 மொழி வார்த்தைகளுக்கும் காதல் என்பது தான் அர்த்தம்.

இதையும் படியுங்கள்... மங்களகரமா மஞ்சள்ல ஆரம்பித்த அனிதா விஜயகுமார்! கண்ணைகவரும் நவராத்திரி கிளிக்ஸ் இதோ

click me!