எதிர்நீச்சல் சீரியல் நடிகை மதுமிதா, எதிர்நீச்சல் 2-ம் பாகத்தில் இருந்து வெளியேறுவதாக கூறியுள்ளதை தொடர்ந்து, இவருக்கு விரைவில் திருமணம் நடக்க உள்ளதா? என ரசிகர்கள் கேள்வி எழுப்பி வருகின்றனர்.
'கோலங்கள்' சீரியலை இயக்கியதன் மூலம், சின்னத்திரை ரசிகர்கள் மத்தியில் மிகவும் பிரபலமானவர் இயக்குனர் திருச்செல்வம். இவர் கடைசியாக சன் டிவியில் கடந்த 2022 ஆம் ஆண்டு முதல், 2024 வரை ஒளிபரப்பான எதிர்நீச்சல் சீரியலை இயக்கியதோடு ஜீவானந்தம், என்கிற முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்.
25
Ethirneechal serial
பெண்களை அடிமைப்படுத்தி, வீட்டுக்குள்ளேயே பூட்ட நினைக்கும் ஆணாதிக்க வர்க்கத்திற்கு எதிராக ஒளிபரப்பான இந்த சீரியலில், கன்னட சீரியல் நடிகை மதுமிதா ஹீரோயினாக நடித்திருந்தார். ஜனனி என்கிற வெயிட்டான ரோலில் நடித்திருந்த இவரது நடிப்பு பட்டி தொட்டி எங்கும் ரசிக்கப்பட்டது. இவரை தவிர கனிகா, பிரியதர்ஷினி நீலகண்டன், ஹரிபிரியா இசை, ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தனர்.
இந்த சீரியலில் மறைந்த நடிகர் மாரிமுத்து கதாபாத்திரம், எதிர்மறை கதாபாத்திரம் என்றாலும் ரசிகர்கள் மத்தியில் அதிக வரவேற்பை பெற்ற கதாபாத்திரமாக இருந்தது. இதனை பல பேட்டிகளில் அவரை கூறி இருந்தார். அதே போல் ஒரு சீரியலில் எதிர்மறை கதாபாத்திரத்திற்கு அதிக ரசிகர்கள் உண்டு என்றால் அது மாரிமுத்து நடித்த ஆதி குணசேகரன் கதாபாத்திரமாகவே இருந்தது. மேலும் சீரியலில் இவர் பேசும் சில வார்த்தைகள் மீன்ஸ் கிரியேட்டர்களுக்கு கன்டென்ட் ஆக மாறின. அந்த அளவுக்கு தன்னுடைய எதார்த்தமான நடிப்பால் ரசிகர்கள் மனதை கொள்ளை கொண்டார் மாரிமுத்து. இந்த சீரியலின் வாய்ப்புக்கு பின்னர் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் உடன் ஜெயிலர், உள்ளிட்ட பல படங்களில் நடிக்கும் வாய்ப்பு இவருக்கு கிடைத்தது.
45
Vela Ramamoorthy
சின்னத்திரையில் மளமளவென வளர்ந்து வந்த போது, கடந்த 2023 ஆம் ஆண்டு ஏற்பட்ட மாரடைப்பு காரணமாக உயிரிழந்தார் மாரிமுத்து. இவருடைய மறைவுக்கு பின்னர், அவருக்கு பதில் வேல ராமமூர்த்தி ஆதி முத்து குணசேகரன் கதாபாத்திரத்தில் நடித்தார். ஆரம்பத்தில் இவருடைய கதாபாத்திரம் சில விமர்சனங்களுக்கு ஆளானாலும், பின்னர் ரசிகர்களால் ஏற்றுக் கொள்ளப்பட்டது.
இந்த சீரியலை வேறு கோணத்தில் கொண்டு செல்லும் விதமாக, இந்த ஆண்டு இயக்குனர் திருச்செல்வம் அதிரடியாக எதிர்நீச்சல் தொடருக்கு எண்டு கார்டு போட்ட நிலையில், இந்த தொடரின் இரண்டாம் பாகம் தற்போது எடுக்கப்பட்டு வருகிறது. இந்த தொடரிலும் நடிகை மதுமிதா தான் ஹீரோயினாக நடிப்பார் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் தன்னுடைய புதிய அத்தியாயம் தொடங்க உள்ளதால், எதிர்நீச்சல் 2 தொடரில் இருந்து ஒரு சில காரணங்களால் விலகுவதாக மதுமிதா தன்னுடைய சமூக வலைதள பக்கத்தில் தெரிவித்துள்ளார். அதேபோல் தனக்கு ஆதரவளித்த ரசிகர்களுக்கு தன்னுடைய நன்றிகளையும் மதுமிதா தெரிவித்துள்ளார்.
மதுமிதா புதிய அத்தியாயம் என கூறி உள்ளதால், இவர் திருமணம் செய்து கொள்ள உள்ளாரா? என ரசிகர்கள் தொடர்ந்து கேள்வி எழுப்பி வருகிறார்கள். எதிர்நீச்சல் 2 தொடரில் இருந்து மதுமிதா விலகுவது கொஞ்சம் சோகமான விஷயம் என்றாலும், திருமணத்திற்காக இப்படி ஒரு முடிவை எடுத்திருந்தால்... மகிழ்ச்சி தான் என கூறி தங்களின் வாழ்த்துக்களை தெரிவித்து வருகிறார்கள்.