மங்களகரமா மஞ்சள்ல ஆரம்பித்த அனிதா விஜயகுமார்! கண்ணைகவரும் நவராத்திரி கிளிக்ஸ் இதோ

First Published | Oct 3, 2024, 12:06 PM IST

நடிகர் விஜயகுமாரின் மகள் அனிதா விஜயகுமார் நவராத்திரி பண்டிகையின் முதல் நாளையொட்டி மஞ்சள் நிற புடவையில் நடத்திய போட்டோஷூட் வைரலாகிறது.

Anitha Vijayakumar

நடிகர் விஜயகுமாருக்கு மொத்தம் 5 மகள்கள். இதில் அவரது முதல் மகள் கவிதா திருமணமாகி அமெரிக்காவில் செட்டில் ஆகிவிட்டார். இரண்டாவது மகள் அனிதா விஜயகுமார், டாக்டருக்கு படித்து மருத்துவராக பணியாற்றி வருகிறார். இதுதவிர இதர மூன்று மகள்களும் சினிமாவில் ஹீரோயின்களாக நடித்துள்ளனர். அதில் வனிதா தவிர மற்ற இரண்டு மகள்களும் திருமணத்துக்கு பின்னர் சினிமாவில் இருந்து டோட்டலாக விலகிவிட்டனர்.

Vijayakumar Daughter Anitha

விஜயகுமார் குடும்பத்தின் சினிமா வாடையே படாதவர் என்றால் அது அனிதா தான். இவரையும் ஹீரோயினாக்க பாரதிராஜா எவ்வளவோ முயற்சித்து இருக்கிறார். தன்னுடைய கருத்தம்மா படத்தில் டாக்டர் ரோலில் நடிக்க அனிதாவை வீடுதேடி சென்று அழைத்தும் அனிதா நடிக்க மறுத்துவிட்டாராம். பின்னர் எம்பிபிஎஸ் படித்து டாக்டராகிவிட்டார் அனிதா. இதையடுத்து காதல் திருமணம் செய்துகொண்டார் அனிதா விஜயகுமார். இவரது கணவரும் மருத்துவர் தான்.

இதையும் படியுங்கள்... அதிகபட்சமே 70 லட்சம் தான்! லப்பர் பந்து படத்தில் நடிக்க நடிகர், நடிகைகள் வாங்கிய சம்பளம் இவ்வளவுதானா!

Tap to resize

Arun Vijay Sister Anitha Vijayakumar

அனிதா விஜயகுமாருக்கு தியா என்கிற மகளும், ஸ்ரீஜெய் என்கிற மகனும் உள்ளனர். இவர்களும் மருத்துவம் படித்து டாக்டர் ஆகிவிட்டனர். அனிதா விஜயகுமாரின் மகள் தியா தற்போது லண்டனில் மருத்துவராக பணியாற்றி வருகிறார். இவருக்கு கடந்த பிப்ரவரி மாதம் திருமணம் ஆனது. இவரும் குடும்பத்தினர் சம்மதத்துடன் காதல் திருமணம் தான் செய்துகொண்டார். மகளின் திருமணத்துக்கு முன்னர் வரை தோஹாவில் இருந்த அனிதா, அதன்பின்னர் சென்னையிலேயே புதுவீடு கட்டி செட்டில் ஆகிவிட்டார்.

Anitha Vijayakumar Photoshoot

அனிதா விஜயகுமார் சினிமாவில் நடித்ததில்லை என்றாலும் சினிமா ஹீரோயின்களுக்கு நிகராக விதவிதமான போட்டோஷூட்கள் நடத்துவதை வழக்கமாக வைத்திருக்கிறார். அவர் நடத்தும் போட்டோஷூட் புகைப்படங்களை இன்ஸ்டாகிராமில் பதிவிட்டு லட்சக்கணக்கில் லைக்குகளையும் அள்ளி வருகிறார் அனிதா.

Anitha Vijayakumar Navaratri Special Photos

அந்த வகையில் கடந்த ஆண்டை போல் இந்த ஆண்டு நவராத்திரி ஸ்பெஷல் போட்டோஷூட் நடத்தி உள்ளார் அனிதா. அதன்படி நவராத்திரியின் முதல் நாளான இன்று மஞ்சள் நிற சேலையில் மங்களகரமாக போஸ் கொடுத்தபடி போட்டோஷூட் நடித்தி இருக்கிறார். அந்த புகைப்படங்களுக்கு லைக்குகள் குவிந்து வருவதோடு, போட்டோஸ் பிரமாதமாக இருப்பதாக கமெண்டுகளும் வந்த வண்ணம் உள்ளன.

இதையும் படியுங்கள்... இளையராஜாவை அழவைத்த வாலி; எல்லாத்துக்கும் காரணம் ரஜினியின் இந்த சூப்பர்ஹிட் பாட்டு தான்!!

Latest Videos

click me!