அதிகபட்சமே 70 லட்சம் தான்! லப்பர் பந்து படத்தில் நடிக்க நடிகர், நடிகைகள் வாங்கிய சம்பளம் இவ்வளவுதானா!

Published : Oct 03, 2024, 11:03 AM IST

லப்பர் பந்து திரைப்படம் திரையரங்குகளில் சக்கைப்போடு போட்டு வரும் நிலையில், அப்படத்தில் நடித்த நடிகர் நடிகைகளின் சம்பள விவரம் பற்றி பார்க்கலாம்.

PREV
14
அதிகபட்சமே 70 லட்சம் தான்! லப்பர் பந்து படத்தில் நடிக்க நடிகர், நடிகைகள் வாங்கிய சம்பளம் இவ்வளவுதானா!
Lubber Pandhu

தமிழரசன் பச்சைமுத்து இயக்கத்தில் உருவான திரைப்படம் தான் லப்பர் பந்து. இப்படத்தில் ஹரிஷ் கல்யாண் மற்றும் அட்டகத்தி தினேஷ் ஆகியோர் முதன்மை கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். அவர்களுக்கு ஜோடியாக சஞ்சனா மற்றும் சுவாசிகா நடிக்க, பால சரவணன், காளி வெங்கட், தேவதர்ஷினி ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருக்கின்றனர். இப்படத்திற்கு ஷான் ரோல்டன் இசையமைத்துள்ளார். இப்படம் செப்டம்பர் 20-ந் தேதி திரைக்கு வந்தது.

24
Lubber Pandhu Movie

தமிழ் சினிமாவில் எப்போது தரமான படங்களுக்கு தனி மவுசு உண்டு. அந்த வரிசையில் லப்பர் பந்து படமும் தரமான கதையம்சத்துடன் ரிலீஸ் ஆகி உள்ளதால் இப்படத்தை ரசிகர்கள் தலையில் தூக்கிவைத்து கொண்டாடி வருகின்றனர். இந்த ஆண்டு வெளியான படங்களிலேயே லப்பர் பந்து தான் சிறந்த படம் என சொல்லும் அளவுக்கு இப்படத்திற்கு அமோக வரவேற்பு கிடைத்து வருகிறது. திரைப்பிரபலங்களும் இப்படத்தை பார்த்து வியந்து பாராட்டி வருகின்றனர்.

இதையும் படியுங்கள்... இளையராஜாவை அழவைத்த வாலி; எல்லாத்துக்கும் காரணம் ரஜினியின் இந்த சூப்பர்ஹிட் பாட்டு தான்!!

34
Lubber Pandhu Movie Box Office

லப்பர் பந்து திரைப்படத்தை பிரின்ஸ் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்திருந்தது. இப்படம் வெளியாகி மூன்று வாரங்களை கடந்து வெற்றிநடை போட்டு வரும் நிலையில், பாக்ஸ் ஆபிஸிலும் தொடர்ந்து வசூல் வேட்டை நடத்தி வருகிறது. அதன்படி லப்பர் பந்து திரைப்படம் வெளியான 13 நாட்களில் ரூ.21.32 கோடி வசூலித்து உள்ளது. அதில் நேற்று காந்தி ஜெயந்தி விடுமுறை என்பதால் ஒரே நாளில் ரூ.3.25 கோடி வசூலை வாரிக்குவித்திருக்கிறது லப்பர் பந்து திரைப்படம்.

44
Lubber Pandhu Movie Cast and Crew Salary

இப்படி திரையரங்குகளில் சக்கைப்போடு போட்டு வரும் லப்பர் பந்து திரைப்படத்தில் நடித்த நடிகர், நடிகைகளின் சம்பளம் குறித்து இந்த தொகுப்பில் பார்க்கலாம். அதன்படி லப்பர் பந்து படத்தின் நாயகன் ஹரிஷ் கல்யாண் ரூ.70 லட்சம் சம்பளமாக வாங்கி இருக்கிறார். மற்றொரு ஹீரோவான அட்டகத்தி தினேஷ் 40 லட்சமும், ஹீரோயின் சஞ்சனா மற்றும் சுவாசிகா தலா ரூ.20 லட்சமும், நகைச்சுவை நடிகர்கள் பால சரவணன், காளி வெங்கட் ஆகியோர் தலா ரூ.15 லட்சமும் சம்பளமாக வாங்கி இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

இதையும் படியுங்கள்... என்னது இந்தியன் 3 தியேட்டரில் ரிலீஸ் ஆகாதா? கமல் படத்தை வைத்து கபடி ஆடும் லைகா!!

click me!

Recommended Stories