இளையராஜாவை அழவைத்த வாலி; எல்லாத்துக்கும் காரணம் ரஜினியின் இந்த சூப்பர்ஹிட் பாட்டு தான்!!

First Published | Oct 3, 2024, 10:05 AM IST

ரஜினிகாந்த் படத்திற்காக வாலி எழுதிய பாடல் வரிகளை பார்த்ததும் இசைஞானி இளையராஜா கண்கலங்கி அழுதுவிட்டாராம் அது என்ன பாடல் என்பதை பார்க்கலாம்.

vaali, Ilaiyaraaja

தமிழ் சினிமாவில் காலம் கடந்து கொண்டாடப்படும் காவியக் கவிஞர்களில் வாலியும் ஒருவர். இவர் மறைந்தாலும் இவர் எழுதிய பாடல் வரிகள் மக்கள் மனதில் நீங்கா இடம்பிடித்து உள்ளன. தமிழ் சினிமா வரலாற்றில் அதிக பாடல்கள் எழுதிய கவிஞரும் வாலி தான். இவர் ஒட்டுமொத்தமாக 17 ஆயிரம் பாடல்களை எழுதி இருக்கிறார். அதுமட்டுமின்றி எம்.எஸ்.விஸ்வநாதன் தொடங்கி இளையராஜா, ஹாரிஸ் ஜெயராஜ், ஏ.ஆர்.ரகுமான், அனிருத் என பல தலைமுறை இசையமைப்பாளர்களுடன் வாலி பணியாற்றி இருக்கிறார்.

Ilaiyaraaja

இதில் வாலி அதிக ஹிட் பாடல்களை எழுதியது இசையமைப்பாளர் இளையராஜாவுக்கு தான். இவர்கள் காம்போ என்றாலே கன்பார்ம் பாட்டு ஹிட் என சொல்லும் அளவுக்கு கில்லி போல் சொல்லி அடிக்கும் கூட்டணியாக வாலியும் இளையராஜாவும் இருந்து வந்தனர். இளையராஜா மீது கொண்ட பாசத்தால் அவரைப் பாராட்டியே பல வெற்றிப் பாடல்களை எழுதி இருக்கிறார் வாலி. அப்படி தன் வாழ்க்கையோடு ஒப்பிட்டு வாலி எழுதிய பாடல் வரிகளை கேட்டு இளையராஜா கண்கலங்கி அழுத சம்பவமும் அரங்கேறி இருக்கிறது.

இதையும் படியுங்கள்... என்னது இந்தியன் 3 தியேட்டரில் ரிலீஸ் ஆகாதா? கமல் படத்தை வைத்து கபடி ஆடும் லைகா!!

Tap to resize

Vaali

மணிரத்னம் இயக்கிய மாஸ்டர் பீஸ் திரைப்படங்களில் ஒன்று தளபதி. இப்படத்தில் ரஜினிகாந்த், மம்முட்டு, ஷோபனா, அரவிந்த் சாமி என மிகப்பெரிய நட்சத்திர பட்டாளமே நடித்திருந்தது. இப்படத்திற்கு இளையராஜா தான் இசையமைத்து இருந்தார். தளபதி படத்தின் வெற்றிக்கு இளையராஜாவின் இசைக்கும் பங்கு உண்டு. அப்படத்திற்காக ராஜா இசையமைத்த பாடல்கள் அனைத்துமே பட்டிதொட்டியெங்கும் ஹிட் அடித்தன.

Lyricist Vaali

அந்த வகையில் தளபதி படத்தில் இடம்பெறும் சின்னத்தாய் அவள் என்கிற எமோஷனல் பாடலை வாலி தான் எழுதி இருந்தார். இந்த பாடல் வரிகளை பார்த்து தான் இளையராஜா கண்கலங்கி இருக்கிறார். அதற்கு காரணம் இளையராஜாவை போற்றி அதில் இடம்பெற்ற வரிகள் தான். 

இளையராஜாவின் அம்மா பெயர் சின்னத்தாய். அவர் தந்த ராசாவே என இளையராஜாவை குறிப்பிட்டு வாலி அந்த வரிகளை எழுதி இருந்தார். இதுமட்டுமின்றி ராஜாவின் புகழ் பாடும் விதமாக ‘ராஜா கையவச்சா அது ராங்கா போனதில்லே’, ‘ராஜா ராஜாதி ராஜன் இந்த ராஜா’, ‘ராஜாவுக்கு ராஜா நான் தான்’ என பல சூப்பர்ஹிட் பாடல்களையும் இளையராஜாவுக்காக எழுதி இருக்கிறார் வாலி என்பது குறிப்பிடத்தக்கது. 

இதையும் படியுங்கள்... விவாகரத்தை வில்லங்கமாக்கிய அமைச்சர்; லெப்ட் ரைட் வாங்கிய சமந்தா; சப்போர்ட்டுக்கு வந்த நாக சைதன்யா!

Latest Videos

click me!