என்னது இந்தியன் 3 தியேட்டரில் ரிலீஸ் ஆகாதா? கமல் படத்தை வைத்து கபடி ஆடும் லைகா!!

Published : Oct 03, 2024, 07:42 AM IST

ஷங்கர் இயக்கத்தில் கமல்ஹாசன் நடித்துள்ள இந்தியன் 3 திரைப்படம் தியேட்டரில் ரிலீஸ் ஆகாது என இணையத்தில் தகவல் வெளியாகி உள்ளது.

PREV
15
என்னது இந்தியன் 3 தியேட்டரில் ரிலீஸ் ஆகாதா? கமல் படத்தை வைத்து கபடி ஆடும் லைகா!!
Kamalhaasan

பிரம்மாண்ட இயக்குனர் ஷங்கர் இயக்கத்தில் கடந்த 1996-ம் ஆண்டு திரைக்கு வந்த படம் இந்தியன். இப்படத்தில் கமல்ஹாசன் ஹீரோவாக நடித்திருந்தார். அவருக்கு ஜோடியாக மனிஷா கொய்ராலா நடித்திருந்த இப்படம் பான் இந்தியா அளவில் மாஸ் ஹிட் அடித்தது. இந்தியன் படத்தின் அதிரி புதிரியான வெற்றியை தொடர்ந்து அப்படத்தின் இரண்டாம் பாகத்தை கடந்த 2017-ம் ஆண்டு தொடங்கினார் இயக்குனர் ஷங்கர். பல்வேறு தடைகளுக்கு பின்னர் 2024-ம் ஆண்டு இந்தியன் 2 படம் ரிலீஸ் ஆனது.

25
Indian 2

இந்தியன் 2 படத்தில் கமல்ஹாசன் உடன் சித்தார்த், பாபி சிம்ஹா, சமுத்திரக்கனி, பிரியா பவானி சங்கர், ரகுல் ப்ரீத் சிங், விவேக் என மிகப்பெரிய நட்சத்திர பட்டாளமே நடித்திருந்தது. இப்படத்திற்கு அனிருத் இசையமைத்து இருந்தார். லைகா நிறுவனமும், ரெட் ஜெயண்ட் மூவீஸ் நிறுவனமும் இணைந்து தயாரித்திருந்த இப்படம் தமிழ், தெலுங்கு, இந்தி, கன்னடம், மலையாளம் ஆகிய மொழிகளில் கடந்த ஜூலை மாதம் திரைக்கு வந்தது.

35
Shankar, Kamal

மிகப்பெரிய எதிர்பார்ப்புக்கு மத்தியில் ரிலீஸ் ஆன இந்தியன் 2 திரைப்படம் அட்டர் பிளாப் ஆனது. கிரிஞ்சான காட்சிகள், லாஜிக் இல்லாத கதை என இணையத்தில் மிகப்பெரிய ட்ரோல் மெட்டீரியலாகவும் இப்படம் மாறியது. இந்தியன் 2 படத்தின் தோல்வியால் அப்செட்டில் உள்ள இயக்குனர் ஷங்கர், அடுத்ததாக ராம்சரணை வைத்து இயக்கி உள்ள கேம் சேஞ்சர் படம் மூலம் தரமான கம்பேக் கொடுக்க காத்திருக்கிறார். அப்படம் வருகிற டிசம்பர் மாதம் திரைக்கு வருகிறது.

இதையும் படியுங்கள்... 'பெருமைப்படுகிறேன் தியா' மகளின் திறமையை கண்டு மெய் சிலிர்க்கும் சூர்யா, ஜோதிகா ஜோடி

45
Indian 3

கேம் சேஞ்சர் படத்தின் ரிலீசுக்கு பின்னர் இந்தியன் 3 படத்தை திரையரங்குகளில் ரிலீஸ் செய்வார்கள் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், தற்போது அதில் புது ட்விஸ்ட் ஒன்றை வைத்துள்ளனர். இந்தியன் 3 படத்தை நேரடியாக ஓடிடியில் ரிலீஸ் செய்ய பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறதாம். இந்தியன் 2 படத்தின் ரிசல்ட் காரணமாக இந்தியன் 3 படத்தை தியேட்டரில் வெளியிட்டால் அதன் பிசினஸ் எதிர்பார்த்தபடி இருக்காது என்கிற காரணத்தால் படக்குழு இந்த முடிவுக்கு வந்துள்ளதாக கூறப்படுகிறது.

55
Indian 3 OTT Release

அதுமட்டுமின்றி இந்தியன் 2 படத்தை வெளியிட்ட விநியோகஸ்தர்கள் நஷ்டமடைந்து உள்ளதால், இந்தியன் 3 படத்தை அவர்கள் நஷ்டத்துக்கு ஈடுகட்டும் விதமாக ஃப்ரீயாக கேட்கக் கூடும் என்கிற பயமும் படக்குழுவுக்கு உள்ளதாம். இதனால் உஷாராக ஓடிடியில் அப்படத்தை வெளியிட பிளான் போட்டு வருகிறார்கள்.

மேலும் இந்தியன் 2 படத்தை வாங்கிய நெட்பிளிக்ஸ் நிறுவனம் தான் இந்தியன் 3 படத்தின் ஓடிடி உரிமையையும் கைப்பற்றி இருக்கிறது. இந்தியன் 2 படத்தை 125 கோடிக்கு வாங்கியிருந்த அந்நிறுவனத்திடம் இருந்து இந்தியன் 3 படத்துக்காக பெரும் தொகையை எதிர்பார்க்கிறதாம் லைகா. ஒரு வேளை நெட்பிளிக்ஸ் நிறுவனம் கேட்ட தொகையை கொடுக்காமல் கைவிரித்தால், மீண்டும் தியேட்டரில் தான் இந்தியன் 3 படத்தை வெளியிடுவார்கள் என கூறப்படுகிறது.

இதையும் படியுங்கள்... T J Gnanavel: ஏன் ரஜினிகாந்த் வேட்டையனுக்கு கால்ஷீட் கொடுத்தார்? டி ஜே ஞானவேல் என்ன மாஸ் இயக்குநரா?

Read more Photos on
click me!

Recommended Stories