தமிழ் சினிமாவின் ஸ்டார் ஜோடியான சூர்யா, ஜோதிகா இணை இன்றளவும் தங்களை பிசியாக வைத்துக்கொண்டு உள்ளனர். தனிப்பட்ட வாழ்க்கை முறை மற்றும் தொழில் வாழ்க்கையிலும் இருவரும் இன்றளவும் ஜொலித்துக் கொண்டு தான் இருக்கின்றனர். இவர்களுக்கு தியா என்ற மகளும், தேவ் என்ற மகனும் உள்ளனர். மகன் தேவ் பள்ளி அளவில் நடைபெற்ற தற்காப்பு கலைக்கான போட்டி ஒன்றில் வெற்றி பெற்றதை அண்மையில் இணையதளத்தில் பகிர்ந்து தந்தை சூர்யா பாராட்டி இருந்தார்.