'சமந்தாவின் விவாகரத்துக்கு இந்த அமைச்சர்தான் காரணம்; கொளுத்தி போட்ட அமைச்சர்!!

Published : Oct 02, 2024, 08:01 PM ISTUpdated : Oct 03, 2024, 09:27 AM IST

நாக சைதன்யா, சமந்தா விவாகரத்து தொடர்பாக விமர்சனம் செய்த தெலங்கானா அமைச்சருக்கு நடிகர் நாகசைதன்யா கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.

PREV
14
'சமந்தாவின் விவாகரத்துக்கு இந்த அமைச்சர்தான் காரணம்; கொளுத்தி போட்ட அமைச்சர்!!
Nagarjuna Akkineni

தெலுங்கு திரையுலகின் முன்னணி நடிகர் நாக சைதன்யா, சமந்தா ஜோடி விவகாரத்து பெற்ற நிலையில் நாக சைதன்யாவுக்கு கடந்த சில மாதங்களுக்கு முன்பு வேறொரு நிச்சயதார்த்தம் நடைபெற்றது. இந்நிலையில், தெலங்கானா வனத்துறை அமைச்சர் கொண்டா சுரேகா தெரிவித்துள்ள கருத்து ஆந்திரா திரையுலகில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

24
Samantha

இது தொடர்பாக அமைச்சர் கொண்டா சுரேகா கூறியதாவது, “தெலுங்கு திரையுலக நடிகைகளை முன்னாள் முதல்வர் சந்திரசேகர வாவின் மகன் கேடிஆர் மிரட்டினார். நடிகைகளை போதைப் பொருள் பழக்கத்திற்கு அடிமையாக்கும் அவர் தான் நடிகரும் நாகர்ஜூனாவின் மகனுமான நாக சைதன்யா மற்றும் சமந்தாவின் விவாகரத்திற்கு காரணம்.

34
Konda Surekha

நாகார்ஜூனா அண்மையில் இடித்து தரைமட்டமாக்கப்பட்ட தன்னுடைய வணிக வளாகத்தை முந்தைய அரசு எதுவும் செய்யாமல் இருக்க கேடிஆர் நிபந்தனைக்கு ஒப்புக் கொண்டார். இந்த விவகாரம் சமந்தாவை உள்ளடக்கியது. ஆனால் இதனை விரும்பாமலேயே சமந்தா தனது கணவர் நாக சைதன்யாவை பிரிந்தார். மேலும் நடிகை ரகுல் பிரீத் சிங்கின் அவசர திருமணத்திற்கும் சந்திரசேகர ராவின் மகன் கே.டி.ஆர். தான் காரணம்” என்று தொடர் குற்றச்சாட்டுகளை முன்வைத்தார்.

44
Samantha

அமைச்சரின் தொடர் சர்ச்சை கருத்துகளால் ஆவேசமடைந்த நடிகர் நாகார்ஜூனா கடும் கண்டனத்தை தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில், “அரசியலில் இருந்து ஒதுங்கி உள்ள திலை பிரபலங்களின் வாழ்க்கையை உங்களின் தனிப்பட்ட எதிரிகளை விமர்சிப்பதற்காக பயன்படுத்தாதீர்கள். பிறரின் தனியுரிமையை தயவு செய்து மதியுங்கள். அமைச்சர் என்ற பொறுப்பான பதவியில் உள்ள ஒரு பெண்ணான உங்களின் கருத்துகள் மற்றும் குற்றச்சாட்டுகள் எங்கள் குடும்பத்திற்கு முற்றிலும் பொருத்தம் அற்றவை மேலும் தவறானவை” என்று குறிப்பிட்டுள்ளார்.

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

Read more Photos on
click me!

Recommended Stories