Vettaiyan Trailer: வேட்டையன் டிரைலரில் மறைந்திருக்கும் ஆச்சரியங்கள் - இதையெல்லாம் கவனிச்சீங்களா?

First Published Oct 2, 2024, 5:51 PM IST

Rajinikath Vettaiyan Trailer: ரஜினிகாந்த் நடிப்பில் உருவாகியுள்ள வேட்டையன் படத்தின் டிரைலர் வெளியாகியுள்ளது. கன்னியாகுமரி மற்றும் நாகர்கோயில் பகுதிகளை மையமாகக் கொண்ட கதைக்களத்தில், பெண்களுக்கு எதிரான குற்றங்களை எதிர்க்கும் காவல் அதிகாரியாக ரஜினி நடித்துள்ளார்.

Vettaiyan Trailer

இயக்குநர் டி ஜே ஞானவேல் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடிப்பில் உருவாகியுள்ள அதிக பட்ஜெட் படம் வேட்டையன். ஆக்‌ஷன் கதையை மையப்படுத்திய வேட்டையன் படத்தில் ரஜினிகாந்த் காவல் கண்காணிப்பாளராக அஜித் என்ற கதாபாத்திரமாக நடித்திருக்கிறார். அவருக்கு பக்க பலமாக துணை காவல் கண்காணிப்பாளாராக ரித்திகா சிங் நடித்திருக்கிறார். ரூ.160 கோடி பட்ஜெட்டில் உருவாக்கப்பட்ட இந்த படத்தை லைகா புரோடக்‌ஷன்ஸ் நிறுவனம் தயாரித்துள்ளது. வழக்கம் போல் இந்தப் படத்திற்கும் அனிருத் இசையமைத்திருக்கிறார்.

Rajinikanth

ரஜினிகாந்த் மற்றும் அனிருத் காம்போவில் வரும் எல்லா பாடல்களுமே ஹிட் பாடல்களாக வந்துள்ள நிலையில், வேட்டையன் படத்தில் இடம் பெற்ற மனசிலாயோ என்ற பாடலும் ரசிகர்களிடையே அமோக வரவேற்பு பெற்றிருக்கிறது. ரஜினிகாந்த் உடன் இணைந்து பகத் பாசில், ராணா டகுபதி, மஞ்சு வாரியர், ரித்திகா சிங், துஷாரா விஜயன், ரோகினி, ரமேஷ் திலக், கிஷோர், அபிராமி ஆகியோர் பலர் நடித்துள்ளனர். பாலிவுட் சூப்பர் ஸ்டார் அமிதாப் பச்சன் இந்த படத்தின் மூலமாக தமிழ் சினிமாவில் தன்னை அறிமுகம் செய்துள்ளார்.

Latest Videos


Rajinikanth Vettaiyan Trailer

2 மணி நேரமும் 45 நிமிடம் நீளம் கொண்ட இந்தப் படம் ரசிகர்களுக்கு விருந்தாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. வரும் 10 ஆம் தேதி திரைக்கு வர இருக்கும் வேட்டையன் படத்தின் டிரைலர் தற்போது வெளியாகியுள்ளது. மாலை 5 மணிக்கு வெளியாகும் என்று அறிவிக்கப்பட்ட நிலையில் கிட்டத்தட்ட 15 நிமிடங்கள் தாமதமாக வெளியாகியுள்ளது. இந்த டிரைலரை வைத்து பார்க்கும் போது கன்னியாகுமரி மற்றும் நாகர்கோயில் பகுதிகளை சுற்றிலும் நடக்கும் சம்பவங்களை வைத்து படம் நகர்கிறது.

Vettaiyan Trailer Released

குறிப்பாக கல்லூரி பெண்களுக்கு எதிராக நடக்கும் சம்பங்களை இந்த டிரைலர் பிரதிபலிக்கிறது. தேவையில்லை சார், ஒருவாரம் ரொம்ப அதிகம், 3 நாட்களில் டிபார்ட்மெண்டுக்கு நல்ல பேரு வரும் என்று ரஜினிகாந்தின் டயலாக் ஆரம்பமாகிறது. அதன் பிறகு அவருடைய ஆக்‌ஷன் காட்சிகள் தான் முழுக்க முழுக்க வேட்டையன் டிரைலரில் காட்டப்பட்டுள்ளது. மேலும், ஜெயிலர் படத்தில் ரஜினிகாந்த் பயன்படுத்திய காஸ்டியூம் போன்று வேட்டையன் படத்திலும் ரஜினிகாந்த் அணிந்திருக்கிறார். தர்பார், ஜெயிலர் இரண்டு படங்களின் கலவையாக வேட்டையன் வருகிறார் என்று தோன்றுகிறது.

தாமதமான நீதி மறுக்கப்பட்ட நீதி என்றும், அநீதியை நீதியால் மட்டுமே வெல்ல முடியும், இன்னொரு அநீதியால் அல்ல என்று அமிதாப் பச்சன் வசனம் பேசுகிறார். அவர் ஒரு வழக்கறிஞராக நடித்துள்ளார். பகத் பாசில் திருடனாக வருவார் என்று தெரிகிறது. துஷாரா மற்றும் பகத் பாசில் இருவரும் லவ்வர்ஸாக இருக்கலாம்.

Hidden Details in Vettaiyan Trailer

போலீஸ் பவர், போர்ஸ், வெப்பன்ஸ் எல்லாம் இருந்தும் ஒரு கிரிமினல் அட்டூழியம் செய்கிறான் என்று சொன்னால் போலீஸ் சரியாக வேலை செய்யவில்லை என்று அர்த்தம் என்று கூறி ரஜினிகாந்த் தனது வேட்டையை தொடர்கிறார். ஒவ்வொரு குற்றவாளிகளாக வேட்டையாடுகிறார். டிரைலர் ஸ்லோவாக சென்றாலும் படம் ஆக்‌ஷன் காட்சிக்கும், விறுவிறுப்புக்கும் பஞ்சம் வைக்காது என்று தெரிகிறது. வேட்டையன் படத்தில் நடித்துள்ள அமிதாப் பச்சன் தனக்கு தானே குரல் கொடுத்துள்ளார்.

அதனை AI மூலமாக தமிழில் கொண்டு வரப்பட்டுள்ளது. அது இந்த டிரைலரில் தெளிவாக தெரிகிறது. இதற்கு முன்னதாக டீசரில் அமிதாப் பச்சனுக்கு பிரகாஷ் ராஜ் குரல் கொடுத்திருந்தார். அது சர்ச்சையை ஏற்படுத்திய நிலையில் தற்போது AI மூலமாக அமிதாப் பச்சன் தனக்கு தானே வாய்ஸ் கொடுத்துள்ளார்.

click me!