ஒரு படம் கூட ஹிட் கொடுக்காத நாயகியை ‘தளபதி 69’ல் விஜய்க்கு ஜோடியாக்கிய எச்.வினோத்!!

Published : Oct 02, 2024, 01:43 PM IST

Thalapathy 69 movie Heroine : நடிகர் விஜய்யின் கடைசி திரைப்படமான தளபதி 69 படத்தில் நடிகர் விஜய்க்கு ஜோடியாக நடிக்க உள்ள நடிகை பற்றிய அப்டேட்டை படக்குழு வெளியிட்டுள்ளது.

PREV
14
ஒரு படம் கூட ஹிட் கொடுக்காத நாயகியை ‘தளபதி 69’ல் விஜய்க்கு ஜோடியாக்கிய எச்.வினோத்!!
Thalapathy 69 movie Heroine

தமிழ் திரையுலகில் முன்னணி மாஸ் நடிகராக வலம் வருபவர் விஜய். இவரும் தமிழ்நாடு மட்டுமின்றி ஆந்திரா, கர்நாடகா, கேரளா போன்ற பிற மாநிலங்களிலும் ஏராளமான ரசிகர்கள் உள்ளனர். இத்தகைய ரசிகர் படையை கொண்டுள்ள விஜய் தான் தற்போது தமிழ் சினிமாவில் அதிக சம்பளம் வாங்கும் நடிகராகவும் திகழ்ந்து வருகிறார். அவருக்கு ஒரு படத்துக்கு ரூ.275 கோடி சம்பளமாக வழங்கப்பட்டு வருகிறது. இப்படி பெயரும் புகழோடும் இருக்கும் விஜய் தற்போது சினிமாவை விட்டு விலக முடிவெடுத்துள்ளார்.

24
Vijay, Pooja Hegde

அவர் தமிழக வெற்றிக் கழகம் என்கிற அரசியல் கட்சியை தொடங்கி, வருகிற 2026-ம் ஆண்டு நடைபெற உள்ள சட்டமன்ற தேர்தலில் போட்டியிட முடிவு செய்துள்ளார். அக்கட்சிக்கான முதல் மாநாடு வருகிற அக்டோபர் 27-ந் தேதி விக்கிரவாண்டியில் நடைபெற உள்ளது. அதற்கான வேலைகள் ஒருபுறம் முழுவீச்சில் நடக்க, நடிகர் விஜய் நடிக்க உள்ள கடைசி படத்திற்கான அறிவிப்பும் வெளிவந்த வண்ணம் உள்ளது. அதன்படி இப்படத்தை எச்.வினோத் இயக்க உள்ளார்.

இதையும் படியுங்கள்... OTT யில் அதிகம் பார்க்கப்பட்ட டாப் 10 படங்கள் & வெப் தொடர்கள் லிஸ்ட் இதோ

34
Thalapathy 69 Heroine

யாஷின் பான் இந்தியா படமான டாஸிக் படத்தை தயாரிக்கும் கேவிஎன் நிறுவனம் தான் விஜய்யின் கடைசி படமான தளபதி 69-ஐயும் தயாரிக்க உள்ளது. இப்படத்திற்கு ராக்ஸ்டார் அனிருத் தான் இசையமைக்க உள்ளார். இப்படத்திற்கான படப்பிடிப்பு வருகிற அக்டோபர் 4-ந் தேதி பூஜையுடன் தொடங்க உள்ளது. இதையொட்டி தளபதி 69 படத்தில் நடிக்கும் நடிகர், நடிகைகள் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பை ஒவ்வொன்றாக வெளியிட்டு வருகிறது படக்குழு.

44
Thalapathy 69 Heroine Pooja Hegde

தளபதி 69 பட ஹீரோயின்

அந்த வகையில் தற்போது தளபதி 69 பட ஹீரோயின் குறித்த அப்டேட் வெளியிடப்பட்டு உள்ளது. அதன்படி நடிகர் விஜய்யுடன் ஏற்கனவே பீஸ்ட் படத்தில் ஜோடியாக நடித்த பூஜா ஹெக்டே தான் இப்படத்தில் விஜய்க்கு ஜோடியாக நடிக்க உள்ளாராம். இதுவரை தமிழில் பூஜா ஹெக்டே நடித்த இரண்டு படங்களுமே பிளாப் ஆன நிலையில், அவருடன் விஜய் ஜோடி சேர்ந்துள்ளது பேசு பொருள் ஆகி உள்ளது. இதுதவிர நடிகைகள் மமிதா பைஜு, பிரியாமணி, நடிகர்கள் பிரகாஷ் ராஜ், பாபி தியோல் ஆகியோரும் தளபதி 69 படத்தில் நடிக்க உள்ளனர். அவர்கள் பற்றிய அறிவிப்பும் விரைவில் வெளிவர உள்ளது.

இதையும் படியுங்கள்... வாலியின் பாடல் வரிகளால் இம்பிரஸ் ஆகி... விஸ்கியை பரிசாக கொடுத்த கண்ணதாசன்!!

Read more Photos on
click me!

Recommended Stories