MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Cinema
  • OTT யில் அதிகம் பார்க்கப்பட்ட டாப் 10 படங்கள் & வெப் தொடர்கள் லிஸ்ட் இதோ

OTT யில் அதிகம் பார்க்கப்பட்ட டாப் 10 படங்கள் & வெப் தொடர்கள் லிஸ்ட் இதோ

இந்த வாரம் ஜியோ சினிமா, டிஸ்னி+ ஹாட்ஸ்டார், அமேசான் பிரைம் வீடியோ மற்றும் நெட்ஃபிளிக்ஸ் இல் அதிகம் பார்க்கப்பட்ட வெப் தொடர் மற்றும் படங்களின் பட்டியலை பார்க்கலாம்.

2 Min read
Ganesh A
Published : Oct 02 2024, 12:52 PM IST| Updated : Oct 02 2024, 01:00 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
111
Most Watched Movies and Web Series on OTT

Most Watched Movies and Web Series on OTT

கொரோனா காலகட்டத்திற்கு பின்னர் ஓடிடி தளங்கள் அசுர வளர்ச்சி கண்டுள்ளன. அதனால் வாரந்தோறும் ஓடிடியில் படங்களும் வெப் தொடர்களும் வெளிவந்த வண்ணம் உள்ளன. அந்த வகையில் கடந்த வாரம் ஓடிடியில் வெளிவந்த படங்கள் மற்றும் வெப் தொடர்களில் அதிக பார்வைகளை பெற்ற டாப் 10 வெப் தொடர்கள் மற்றும் படங்கள் பற்றி ஓர்மேக்ஸ் வெளியிட்டுள்ள பட்டியலை பார்க்கலாம்.

211
Honeymoon Photographer

Honeymoon Photographer

ஜியோ சினிமாவில் ஆஷா நெகியின் ஹனிமூன் போட்டோகிராஃபர் என்கிற வெப் தொடர் தான் அதிகம் பார்க்கப்பட்ட வெப் தொடர்களின் பட்டியலில் 10ம் இடத்தை பிடித்துள்ளது. ஜியோ சினிமாவில் வெளிவந்த இந்த வெப் தொடர் 14 லட்சம் பார்வைகளை பெற்றுள்ளது.

311
Only Murders

Only Murders

9. செலினா கோமஸின் ஒன்லி மர்டர் வெப் தொடர் இந்த பட்டியலில் 9வது இடத்தில் உள்ளது. டிஸ்னி ப்ளஸ் ஹாட்ஸ்டாரில் வெளியான இந்த வெப் தொடர் 16 லட்சம் பார்வைகளை பெற்றுள்ளது.

411
Ishq In The Air

Ishq In The Air

8. அமேசான் எம்.எக்ஸ் பிளேயரில் ஷாந்தனு மகேஸ்வரியின் வெப் தொடரான இஷ்க் இன் தி ஏர் 2 (Ishq In The Air) நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. இந்தத் வெப் தொடர் 17 லட்சம் பார்வைகளுடன் 8ம் இடத்தை பிடித்துள்ளது.

511
Jo Tera Hai Woh Mera Hai

Jo Tera Hai Woh Mera Hai

7. பரேஷ் ராவலின் காமெடித் திரைப்படம் Jo Tera Hai Woh Mera Hai ஜியோ சினிமா ஓடிடி தளத்தில் ஸ்டிரீம் ஆகி வருகிறது. இதுவரை 19 லட்சம் பார்வைகளை பெற்றுள்ள இந்த வெப் தொடர் 7ம் இடத்தில் உள்ளது.

611
School Friends Season 2

School Friends Season 2

6. அமேசான் எம்.எக்ஸ் பிளேயரில் ஸ்ட்ரீம் ஆகும் School Friends வெப் தொடரின் இரண்டாவது சீசன் ரசிகர்களிடம் அமோக வரவேற்பை பெற்று வருகிறது. அதிகம் பார்க்கப்பட்ட வெப் தொடர்களின் பட்டியலில் ஆறாவது இடத்தில் உள்ள இந்த வெப் தொடரை 20 லட்சம் பேர் பார்த்துள்ளனர்.

711
Thalaivettiyaan paalayam

Thalaivettiyaan paalayam

5. அமேசான் பிரைம் வீடியோவில் வெளியாகி சக்கைப்போடு போட்டு வரும் வெப் தொடர் தான் தலைவெட்டியான் பாளையம். வித்தியாசமான கதையம்சம் கொண்ட இந்த தமிழ் வெப்தொடர் அதிக பார்க்கப்பட்ட வெப் தொடர் பட்டியலில் ஐந்தாம் இடத்தில் உள்ளது. இந்த வெப் தொடரை 21 லட்சம் பேர் பார்த்துள்ளனர்.

811
Sector 36

Sector 36

4. விக்ராந்த் மேஸியின் கிரைம் த்ரில்லர் திரைப்படமான Sector 36 நெட்ஃபிளிக்ஸ் ஓடிடி தளத்தில் ஸ்ட்ரீம் ஆகி வருகிறது. அதிகம் பார்க்கப்பட்ட திரைப்படங்களின் பட்டியலில் இது நான்காவது இடத்தில் உள்ளது. இதை 31 லட்சம் பேர் பார்த்துள்ளனர்.

911
The Rings of Power Season 2

The Rings of Power Season 2

3. The Rings of Power Season 2 என்கிற ஹாலிவுட் வெப் தொடர் தான் இந்த பட்டியலில் மூன்றாவது இடத்தில் உள்ளது. இந்த வெப் தொடர் 37 லட்சம் பார்வைகளை பெற்றுள்ளது. இந்த வெப் தொடர் அமேசான் பிரைம் ஓடிடி தளத்தில் ஸ்டிரீம் ஆகி வருகிறது.

1011
Taaza Khabar season 2

Taaza Khabar season 2

2. பூவன் பாமின் வெப் தொடரான Taaza Khabar season 2 டிஸ்னி ப்ளஸ் ஹாட்ஸ்டாரில் ஸ்டிரீம் ஆகி வருகிறது. அதிகம் பார்க்கப்பட்ட வெப் தொடர்களின் பட்டியலில் இது இரண்டாவது இடத்தில் உள்ளது. இதுவரை 4 லட்சம் பார்வைகளை இந்த வெப் தொடர் பெற்றுள்ளது.

1111
The Great Indian Kapil Sharma Show

The Great Indian Kapil Sharma Show

1. கபில் ஷர்மாவின் The Great Indian Kapil Sharma Show நிகழ்ச்சி தான் இந்த பட்டியலில் முதலிடத்தில் உள்ளது. இதுவரை 43 லட்சம் பார்வைகளை பெற்றுள்ள கபில் ஷர்மாவின் இந்த நிகழ்ச்சியை நெட்ஃபிளிக்ஸ் இல் ஸ்டிரீம் ஆகி வருகிறது.

About the Author

GA
Ganesh A
இவர் பொறியியல் பட்டதாரி. செய்தி எழுதுவதில் 7 ஆண்டுகளுக்கும் மேலான அனுபவம் உள்ளவர். இவர் கடந்த 3 ஆண்டுகளாக ஏசியாநெட் நியூஸ் தமிழில் சப்-எடிட்டராக பணியாற்றி வருகிறார். டிஜிட்டல் மீடியா பற்றி நன்கு அறிந்தவர் மற்றும் அதில் அனுபவமும் பெற்றவர். சினிமா மற்றும் பொழுதுபோக்கு செய்திகளை எழுதுவதில் ஆர்வம் கொண்டவர்.

Latest Videos
Recommended Stories
Related Stories
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2025 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved