ஜெனிலியா முதல் நஸ்ரியா வரை; முதல் பட ஹீரோவையே கரெக்ட் பண்ணி காதல் கல்யாணம் செய்த நடிகைகள் லிஸ்ட் இதோ

First Published | Oct 2, 2024, 11:37 AM IST

தமிழ் சினிமாவில் காதலித்து திருமணம் செய்த நடிகைகள் ஏராளம், அந்த வரிசையில் தன்னுடைய முதல் பட ஹீரோவை காதலித்து கரம்பிடித்த நடிகைகள் பற்றி பார்க்கலாம்.

Actress who married their first movie hero

காதல் திருமணம் என்பது சினிமாவில் ஒரு டிரெண்டாக மாறிவிட்டது. படங்களில் ரீல் ஜோடியாக நடித்த நடிகர், நடிகைகள் பின்னர் காதலித்து திருமணம் செய்துகொண்டு ரியல் ஜோடிகள் ஆனதை பார்த்திருக்கிறோம். அதில், தன்னுடைய முதல் படத்தில் ஹீரோவாக நடித்த நடிகரையே காதலித்து திருமணம் செய்துகொண்டு செட்டில் ஆன நடிகைகள் பற்றி இந்த தொகுப்பில் பார்க்கலாம்.

Genelia

ஜெனிலியா

நடிகை ஜெனிலியா, ரித்தேஷ் தேஷ்முக் என்கிற பாலிவுட் நடிகரை காதலித்து கரம்பிடித்தார். இவர்கள் இருவரும் முதன்முதலில் ஜோடியாக நடித்த படம் துஷ்மேரே கஷம். 2003-ல் ரிலீஸ் ஆன இப்படத்தில் தான் ஜெனிலியா ஹீரோயினாக அறிமுகம் ஆனார். அப்போது இவர்கள் இருவருக்கும் இடையே காதல் மலர்ந்தது. பின்னர் 2012-ம் ஆண்டு இவர்கள் இருவரும் திருமணம் செய்துகொண்டனர். இந்த ஜோடிக்கு 2 குழந்தைகளும் உள்ளன.

Tap to resize

Nazriya

நஸ்ரியா

நடிகை நஸ்ரியாவும் நடிகர் பகத் பாசிலும் காதலித்து திருமணம் செய்துகொண்டனர். இதில் நஸ்ரியா முதன்முதலில் நாயகியாக நடித்த படம் பகத் பாசிலின் பிராமணி. இதையடுத்து பெங்களூரு டேஸ் படத்தில் ஜோடியாக நடித்தபோது தான் நஸ்ரியாவுக்கும் பகத்துக்கும் இடையே காதல் மலர்ந்தது. பின்னர் 2014-ம் ஆண்டு இருவரும் திருமணம் செய்துகொண்டனர். இதில் நஸ்ரியாவை விட பகத் பாசில் 11 வயது மூத்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.

இதையும் படியுங்கள்... வாலியின் பாடல் வரிகளால் இம்பிரஸ் ஆகி... விஸ்கியை பரிசாக கொடுத்த கண்ணதாசன்!!

Radhika Yash

ராதிகா யாஷ்

கேஜிஎப் படம் மூலம் பான் இந்தியா ஸ்டாராக உயர்ந்தவர் யஷ். இவர் நடிகை ராதிகா பண்டிட்டை காதலித்து திருமணம் செய்துகொண்டார். இதில் ராதிகா ஹீரோயினாக அறிமுகமான மோகின மனசு படத்தில் யாஷ் தான் ஹீரோவாக நடித்திருந்தார். அப்போதிலிருந்தே காதலிக்க தொடங்கிய இவர்கள் இருவரும் கடந்த 2016-ம் ஆண்டு திருமணம் செய்துகொண்டனர். இந்த ஜோடிக்கு 2 அழகான குழந்தைகளும் உள்ளன.

Nikki Galrani

நிக்கி கல்ராணி

நடிகை நிக்கி கல்ராணி டார்லிங் படம் மூலம் அறிமுகம் ஆனாலும் அவர் முதன்முதலில் ஹீரோயினாக நடித்த படம் யாகாவாராயினும் நா காக்க. இப்படத்தில் ஆதிக்கு ஜோடியாக நடித்திருந்தார் நிக்கி கல்ராணி. இதையடுத்து மரகதநாணயம் திரைப்படத்திலும் இவர்கள் ஜோடியாக நடித்தபோது தான் இவர்கள் இருவருக்கிடையே காதல் மலர்ந்தது. இதையடுத்து 2022-ம் ஆண்டு ஆதியும் நிக்கி கல்ராணியும் திருமணம் செய்துகொண்டனர்.

Amala Nagarjuna

அமலா நாகார்ஜுனா

நடிகை அமலா முதன்முதலில் தெலுங்கில் அறிமுகமான படம் கிராவி தாதா. அப்படத்தில் நாகார்ஜுனாவுக்கு ஜோடியாக நடித்திருந்தார் அமலா. அப்போது அவர்கள் இருவருக்கும் இடையே காதல் மலர்ந்ததை அடுத்து 1992-ல் அமலாவை திருமணம் செய்துகொண்டார் நாகார்ஜுனார். இவர்கள் இருவரும் 7 படங்களில் ஜோடியாக நடித்துள்ளனர். இவர்களுக்கு நிகில் என்கிற மகனும் உள்ளார். அவரும் சினிமாவில் ஹீரோவாக நடித்து வருகிறார்.

இதையும் படியுங்கள்... குக் வித் கோமாளியை இழுத்து மூடிவிட்டு விஜய் டிவி தொடங்கும் புது குக்கிங் ஷோ

Latest Videos

click me!