குக் வித் கோமாளியை இழுத்து மூடிவிட்டு விஜய் டிவி தொடங்கும் புது குக்கிங் ஷோ

First Published | Oct 2, 2024, 9:32 AM IST

குக் வித் கோமாளி நிகழ்ச்சியின் ஐந்தாவது சீசன் முடிவடைந்த நிலையில், தற்போது அதற்கு பதிலாக புது சமையல் நிகழ்ச்சியை தொடங்க உள்ளார்களாம்.

Madhampatti Rangaraj, Dhamu

விஜய் டிவி சக்கைப்போடு போட்டு வந்த ரியாலிட்டி ஷோ என்றால் அது குக் வித் கோமாளி தான். கடந்த 2019-ம் ஆண்டு தொடங்கப்பட்ட இந்நிகழ்ச்சி இதுவரை 5 சீசன்கள் முடிவடைந்துள்ளது. இதில் முதல் சீசனில் வனிதா விஜயகுமாரும், இரண்டாவது சீசனில் கனியும், மூன்றாவது சீசனில் ஸ்ருதிகாவும், நான்காவது சீசனில் மைம் கோபியும் டைட்டில் வின்னர்களாக ஆகினர். இந்நிகழ்ச்சியின் ஐந்தாவது சீசன் கடந்த வாரத்தோடு முடிவுக்கு வந்தது.

Priyanka

குக் வித் கோமாளி நிகழ்ச்சியின் ஐந்தாவது சீசன் பைனலில் பிரியங்கா தேஷ்பாண்டே, விடிவி கணேஷ், ஷாலின் சோயா, சுஜிதா, இர்பான், பூஜா ஆகியோர் பங்கேற்றனர். இதில் சிறப்பாக சமைத்த பிரியங்கா தேஷ்பாண்டே குக் வித் கோமாளி நிகழ்ச்சியின் டைட்டிலை வென்றார். இதற்கு அடுத்தபடியாக சுஜிதாவுக்கு இரண்டாவது இடம் கிடைத்தது. இதில் டைட்டில் வென்ற பிரியங்காவுக்கு ரூ.5 லட்சம் பரிசுத்தொகையும் வழங்கப்பட்டது.

இதையும் படியுங்கள்... கோடி கோடியாய் காசு இருந்தும் விமானத்தில் செல்ல முடியாது... ரிஸ்க் எடுத்து மகனின் கனவை நிறைவேற்றிய நெப்போலியன்


Vijay TV New Cooking Show

குக் வித் கோமாளி நிகழ்ச்சி முடிந்த கையோடு தற்போது மேலும் ஒரு சமையல் நிகழ்ச்சியை விஜய் டிவியில் தொடங்க உள்ளனர். இந்நிகழ்ச்சியிலும் குக் வித் கோமாளி நடுவர்களான மாதம்பட்டி ரங்கராஜ் மற்றும் செஃப் தாமு ஆகியோர் தான் நடுவர்களாக பங்கேற்க உள்ளார்களாம். அதுமட்டுமின்றி இந்நிகழ்ச்சியை ரக்‌ஷன் தான் தொகுத்து வழங்க உள்ளாராம். அவருடன் குக் வித் கோமாளியில் பணியாற்றிய மணிமேகலை விஜய் டிவியை விட்டு விலகியதால் அவருக்கு பதில் மற்றொரு பெண் தொகுப்பாளரை களமிறக்கி உள்ளனர்.

Rakshan, Jacquiline

அதன்படி மணிமேகலைக்கு பதிலாக ஜாக்குலின் இந்நிகழ்ச்சியை ரக்‌ஷன் உடன் சேர்ந்து தொகுத்து வழங்க உள்ளாராம். ஜாக்குலின் ஏற்கனவே ரக்‌ஷன் உடன் இணைந்து கலக்கப்போவது யாரு நிகழ்ச்சியை தொகுத்து வழங்கி இருந்தார். தற்போது அவர்கள் மீண்டும் இணைந்துள்ளனர். மேலும் இந்நிகழ்ச்சியில் விஜய் டிவி நட்சத்திரங்கள் தான் சமையல் செய்ய உள்ளார்களாம். குக்கிங் வித் விஜய் ஸ்டார் என்கிற பெயரில் இந்த ஷோ விரைவில் ஒளிபரப்பாக உள்ளதாம்.

இதையும் படியுங்கள்... "ஹீரோ எவ்வளவு சொல்லியும் கேட்கல" மிஷ்கினின் ஓவர் கான்ஃபிடன்சால் பிளாப் ஆனா படம் - வருந்திய பிரபலம்!

Latest Videos

click me!