அந்த திரைப்படத்திலும் ஒரு சிறு கதாபாத்திரம் தான் அவர் ஏற்று நடித்தார் என்றாலும், மக்கள் மத்தியில் அவருக்கு ஒரு அங்கீகாரம் கிடைத்தது. அதை தொடர்ந்து வெளியான "மனசெல்லாம்", "சாமி", "லேசா லேசா", "அலை" மற்றும் "எனக்கு 20 உனக்கு 18" ஆகிய திரைப்படங்கள் தமிழ் ரசிகர்கள் மத்தியில் திரிஷாவிற்கு நல்ல ஒரு பெயரை பெற்று கொடுத்தது. இதற்கு இடையில் ஒரு தெலுங்கு திரைப்படத்திலும் அவர் நடித்திருந்தார். தொடர்ச்சியாக தனக்கு கிடைத்த சிறப்பான வாய்ப்புகளை பயன்படுத்திக் கொண்ட நடிகை திரிஷாவிற்கு, பிரேக்கிங் பாய்ண்டாக அமைந்த திரைப்படம் என்றால், கடந்த 2004 ஆம் ஆண்டு பிரபல இயக்குனர் தரணி இயக்கத்தில், தளபதி விஜய் நடிப்பில் வெளியான "கில்லி" திரைப்படம் தான் என்றால், அது கொஞ்சம் கூட மிகை ஆகாது.