இதைத் தொடர்ந்து, இயக்குனர் பி.மாதவன் 1968-ஆம் ஆண்டு இயக்கிய திரைப்படம் 'எங்க ஊர் ராஜா'. இந்த படத்தில் சிவாஜி கணேசன், ஜெயலலிதா, சவுகார் ஜானகி, எம்.என்.நம்பியார் உள்ளிட்ட பலர் பலர் நடித்திருந்தனர். கதாநாயகன் சிவாஜி கணேசன், ஜெயலலிதாவை சமாதானம் செய்து... உன் வீட்டுக்கு பெண் பார்க்க வருவேன் என்பதை கிண்டலாக ஜெயலலிதாவிடம் பாடல் மூலம் கூறுவார்.
இந்த படத்தில் ஜெயலலிதா நடிக்கும் போது குண்டாக இருக்கிறார் என விமர்சனங்கள் எழுந்ததால், லிட்ரலாக ஜெயலலிதாவை கலாய்த்து இந்த பாடலை கண்ணதாசன் எழுதி இருந்தார். அந்த பாடல் தான் "மண்டோதரி.. குண்டோதரி.. வாடாமணி.. சூடாமணி.. பெண்பார்க்க வருவேனடி என சிவாஜி கணேசன் பாடுவது போல் இருக்கும் பாடல் வரிகள். ஜெயலலிதாவுக்கு படத்தில் நடிக்கும் போது சரியாக புரியவில்லை என்றாலும், படத்தின் ரிலீஸுக்கு பிறகு இந்த பாடல் தன்னுடைய பெண்ணை கிண்டல் செய்து எழுதப்பட்ட பாடல் என்பதை அறிந்து, ஜெயலலிதாவின் தாயார் சந்தியா படத்தின் இயக்குனர் மாதவனிடம் சண்டைக்கு போனாராம். இப்படி ஒரு பாடலை வைத்து தன்னை அசிங்கப்படுத்தி விட்டதாக எண்ணி, இனி மாதவன் இயக்கத்தில் நடிக்கவே கூடாது என ஜெயலலிதா முடிவு செய்தாராம்.