ஆனால் இவர்கள் அனைவருக்கும் முன்பாகவே சுதந்திரத்திற்கு முன்னதாகவே வெளியான திரைப்படங்களில் ஆக்ஷன் நாயகியாக நடித்து அசத்திய ஒரு நடிகை தான் எஸ்.டி சுப்புலட்சுமி. சரித்திர படங்களில் பெரிய அளவில் நடித்து வந்த இவர், "நவீன சதாரராம்" என்ற படத்தில் ஆக்சன் ஹீரோயினாக நடித்திருக்கிறார். அதாவது ஒரு நாட்டின் இளவரசியாக நடித்த அவர், திருடர்களை கண்டுபிடிப்பதற்காக ஆண் வேடமிட்டு நகர வளம் செல்வார். அப்பொழுது சண்டை காட்சிகளிலும் அவர் தைரியமாக நடித்திருக்கிறார்.
அது மட்டும் அல்ல, கடந்த 1939ம் ஆண்டு வெளியான "தியாக பூமி" என்கின்ற திரைப்படத்தில் அந்த காலகட்டத்திலேயே பிரிட்டிஷாரை எதிர்த்து இந்திய விடுதலைக்காக படங்களில் நடித்தவர் சுப்புலட்சுமி என்பது குறிப்பிடத்தக்கது. 1934ம் ஆண்டு முதல் 1970ம் ஆண்டு வரை இவர் திரைப்படங்களில் நடித்து வந்தார். பிரபல தமிழ் திரையுலக நடிகர் கே. சுப்பிரமணியன் என்பவரை தான் அவர் திருமணம் செய்து கொண்டார். கடந்த 1970ம் ஆண்டு சிவாஜி கணேசன் நடிப்பில் வெளியான "எங்கிருந்தோ வந்தால்" என்கின்ற திரைப்படத்தில் தான் இவர் இறுதியாக நடித்திருந்தார்.
மீண்டும் கோலிவுட் ஹீரோவுக்கு வில்லனாகும் பாலிவுட் நடிகர்.. தளபதி 69 - வெளியான முதல் அப்டேட்!