மீண்டும் கோலிவுட் ஹீரோவுக்கு வில்லனாகும் பாலிவுட் நடிகர்.. தளபதி 69 - வெளியான முதல் அப்டேட்!

First Published Oct 1, 2024, 6:23 PM IST

Thalapathy 69 Update : தளபதி விஜயின் 69வது படத்தின் பூஜை வருகின்ற அக்டோபர் 4ம் தேதி நடைபெற உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

Thalapathy 69 poojai

தளபதி விஜயின் 69வது திரைப்பட அறிவிப்புகள் இன்று முதல் வெளியாக துவங்கியுள்ளது. வருகின்ற அக்டோபர் 4ம் தேதி இந்த திரைப்படத்தின் பூஜை நடைபெற்று, அக்டோபர் ஐந்தாம் தேதி முதல் படத்திற்கான முதற்கட்ட படப்பிடிப்பு பணிகள் துவங்க உள்ளதாகவும் கூறப்படுகிறது. தொடர்ச்சியாக இரண்டு வாரங்கள் இந்த படப்பிடிப்பு பணிகள் நடக்கும் நிலையில், அதன் பிறகு சுமார் 15 நாட்கள் தளபதி விஜய் தனது அரசியல் மாநாடு குறித்த பணிகளுக்காக ஓய்வு எடுக்க உள்ளதாகவும் கூறப்படுகிறது.

தளபதி 69.. யாரெல்லாம் நடிக்க போறாங்க தெரியுமா? 25 நொடி வீடியோவை De-Code செய்து முடித்த Fans!

Actor Vijay

வருகின்ற அக்டோபர் மாதம் 27ம் தேதி தன்னுடைய தமிழக வெற்றிக் கழகம் கட்சியின் முதல் மாநில மாநாட்டை விமர்சையாக விக்கிரவாண்டியில் தளபதி விஜய் நடத்த உள்ளது குறிப்பிடத்தக்கது. அதற்கான பணிகள் முழுவீச்சில் நடந்து வரும் நிலையில் தன்னுடைய இறுதி திரைப்பட பணிகளையும் மிகவும் சிறப்பாக கவனித்து வருகின்றார் தளபதி விஜய். கடந்த 2023 ஆம் ஆண்டு வெளியான லியோ திரைப்படம் தளபதி விஜய்க்கு மிகப்பெரிய வெற்றி திரைப்படமாக மாறியது.

Latest Videos


TVK Vijay

அந்த திரைப்படத்தை தொடர்ந்து தான் தன்னுடைய அரசியல் பயணம் குறித்தும், சினிமா வாழ்க்கைக்கு முற்றுப்புள்ளி வைக்க உள்ளது குறித்தும் அதிகாரப்பூர்வமாக அறிவித்தார் விஜய். அதைத் தொடர்ந்து மிகப்பெரிய எதிர்பார்ப்புகளோடு வெங்கட் பிரபு இயக்கத்தில் "தி கிரேட்டஸ்ட் ஆஃப் ஆல் டைம்" திரைப்படம் வெளியாகி உலக அளவில் நானூறு கோடி ரூபாயை தாண்டி மிகப் பெரிய வெற்றி திரைப்படமாக பயணித்து வருகின்றது. விரைவில் அந்த திரைப்படம் OTT தளத்தில் வெளியாகும் என்கின்ற அறிவிப்புகளும் இப்பொது வந்துள்ளத்து.

Bobby Deol

இந்த சூழலில் கோட் திரைப்படத்தின் கொண்டாட்டங்களே இன்னும் முடியாத நிலையில், தன்னுடைய அடுத்த பட அறிவிப்பை இப்போது வெளியிட்டு இருக்கிறார் விஜய். முதல் முறையாக தமிழ் சினிமாவில் கால் எடுத்து வைக்கும் பிரபல தெலுங்கு திரைப்பட தயாரிப்பு நிறுவனமான "கே.வி.என்" புரொடக்ஷன்ஸ் நிறுவனம் தளபதி 69 திரைப்படத்தை தயாரிக்கும் நிலையில், பிரபல இயக்குனர் வினோத் இந்த திரைப்படத்தை இயக்குகிறார். அனிருத் இசையில் இந்த திரைப்படம் உருவாகவுள்ள நிலையில் ஏற்கனவே சூர்யாவின் "கங்குவா" திரைப்படத்தின் மூலம் தமிழ் படங்களில் அறிமுகமாகவுள்ள பாலிவுட் நடிகர் பாபி தியோல், தளபதி 69 திரைப்படத்திலும் இணைந்திருப்பதாக அதிகாரப்பூர்வ தகவல்கள் வெளியாகி உள்ளது.

மெய்யழகனை காலி பண்ண இந்த வாரம் வெளியாகும் 8 படங்கள்!

click me!