தமிழ் திரை உலகில் பொருத்தவரை கடந்த 45 ஆண்டுகளுக்கும் மேலாக டாப் நடிகராக வலம் வந்து கொண்டிருப்பவர் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் என்பது அனைவரும் அறிந்ததே. கடந்த 2023 ஆம் ஆண்டு பிரபல இயக்குனர் நெல்சன் திலீப் குமார் இயக்கத்தில் வெளியான அவருடைய "ஜெயிலர்" திரைப்படம் உலக அளவில் சுமார் 640 கோடி ரூபாய் வசூல் செய்து சாதனை படைத்தது. அன்று தொடங்கி இந்த ஓராண்டில் அந்த சாதனையை எந்த தமிழ் திரைப்படமும் இன்னும் முறியடிக்க வில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது. இந்த சூழலில் தான் தனது "வேட்டையன்" திரைப்பட பணிகளை அவர் துவங்கினார்.
இப்போது அந்த திரைப்பட பணிகளையும் முடித்துள்ள அவர், தொடர்ச்சியாக லோகேஷ் கனகராஜின் இயக்கத்தில் உருவாகி வரும் "கூலி" என்கின்ற திரைப்படத்திலும் தனது பணிகளை மேற்கொண்டு வருகிறார். இந்த சூழலில் தான் அவருக்கு உடல்நலக்குறைவு ஏற்பட்டுள்ளது. இப்போது மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு இருக்கும் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், இதற்கு முன்னதாகவே பலமுறை, பல்வேறு காரணங்களுக்காக அறுவை சிகிச்சைகளை மேற்கொண்டுள்ளது குறிப்பிடத்தக்கது.