
பழம்பெரும் நடிகர் விஜய்குமாருக்கும் அவருடைய இரண்டாவது மனைவி நடிகை மஞ்சுளாவிற்கும் மூத்த மகளாக பிறந்தவர் வனிதா விஜயகுமார். தன்னுடைய 15 வயதிலேயே தமிழ் சினிமாவில் ஹீரோயினாக நடிக்கும் வாய்ப்பை பெற்றார். அந்த வகையில் தளபதி விஜய்க்கு ஜோடியாக வனிதா விஜயகுமார் 1995ஆம் ஆண்டு நடித்த சந்திரலேகா திரைப்படம், கலவையான விமர்சனங்களை பெற்று தோல்வியடைந்தது. இதைத்தொடர்ந்து ராஜ்கிரணுக்கு ஜோடியாக 'மாணிக்கம்' படத்தில் நடித்த வனிதா விஜயகுமார், தெலுங்கு மற்றும் மலையாளத்தில் தலா ஒரு படத்தில் மட்டுமே நடித்தார்.
பின்னர் தன்னுடன் நாடகத்தில் நடித்த ஆகாஷ் என்பவரை, 2000 ஆம் ஆண்டு திருமணம் செய்து கொண்ட வனிதா விஜயகுமார்... அவர் மூலம் விஜய ஹரி மற்றும் ஜோவிதா என்கிற இரண்டு குழந்தைகளுக்கு தாயானார். ஜோவிதா பிறந்த பின்னர், வனிதா - ஆகாஷ் இடையே ஏற்பட்ட கனகசப்பு, 2007 ஆம் ஆண்டு விவாகரத்தில் முடிந்தது.
முதல் கணவரை விவாகரத்து செய்த சில மாதங்களிலேயே, ஆனந்த் ஜெயராஜன் என்பவரை இரண்டாவது திருமணம் செய்து கொண்டார் வனிதா விஜயகுமார். இரண்டாவது கணவர் மூலம் ஜெயனித்தா என்கிற மகள் வனிதாவுக்கு பிறந்தார். பின்னர் 2012 ஆம் ஆண்டு அவரிடம் இருந்தும் விவாகரத்து பெற்றார். சினிமாவில் மீண்டும் நடிக்க போகிறேன் என கூறி.. அவரே தயாரிப்பாளராக களமிறங்கி மீண்டும் கம் பேக் கொடுத்த படம் தான் எம்.ஜி.ஆர், சிவாஜி, ரஜினி, கமல். இந்த படத்தை நடன இயக்குனர் ராபர்ட் மாஸ்டர் தயாரித்து ஹீரோவாக நடித்திருந்தார். ராபட்டுக்கு ஜோடியாக தான் வனிதா நடித்தார்.
விமர்சன ரீதியாகவும், வசூல் ரீதியாகவும் போட்ட பணத்தை கூட எடுக்காமல் போன இந்த படத்தின் படப்பிடிப்பு நடந்து கொண்டிருந்த போது ராபர்ட் மற்றும் வனிதா இருவரும் காதலித்ததாக கூறப்பட்டது. வனிதாவின் பெயரை ராபர்ட் பச்சை குத்தியது சர்ச்சையை கிளப்பியது. பின்னர் இந்த தகவலை மறுத்த ராபர்ட்... படத்தின் புரமோஷனுக்காகவே இப்படி செய்ததாக கூறினார்.
இந்த காதல் சர்ச்சை வனிதா வாழ்க்கையில் முடிவுக்கு வந்ததும், நிஜ வாழ்க்கையில்... தன்னுடைய குடும்பத்தினர் மூலம் ஏராளமான பிரச்சனைகளை சந்தித்தார். சொத்து விஷயமாக நடந்த பிரச்சனை வனிதா விஜயகுமாரை ஒரேயடியாக குடும்பத்தினரிடம் இருந்து பிரிந்தது. ஒரு கட்டத்தில் பொருளாதார ரீதியாக பல கஷ்டங்களை அனுபவித்து வந்த வனிதா விஜயகுமாருக்கு, மீண்டும் திரை உலகில் நுழைய வாய்ப்பை ஏற்படுத்திக் கொடுத்தது விஜய் டிவியில் ஒளிபரப்பான பிக் பாஸ் நிகழ்ச்சி தான்.
பிக்பாஸ் இரண்டாவது சீசனில் கலந்து கொண்ட வனிதா விஜயகுமார், சர்ச்சையான பிரபலம் என பெயர் எடுத்தாலும்... தனக்கென தனி ரசிகர்கள் வட்டத்தை உருவாக்கினார். பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு பின்னர் விஜய் டிவியில் ஒளிபரப்பான பல ரியாலிட்டி ஷோக்களில் கலந்து கொண்ட வனிதா, ஜீ தமிழில் ஒளிபரப்பான மாரி சீரியல் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். குறிப்பாக குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் கலந்துகொண்டு டைட்டில் பட்டதை கைப்பற்றிய வனிதா விஜயகுமார், சமையல் தொடர்பான வீடியோக்களை வெளியிட youtube சேனல் ஒன்றை தொடங்கினார்.
இந்த சேனல் தொடர்பாக பீட்டர் பால் என்பவருடன் பழகிய நிலையில், இருவருக்கும் இடையே ஏற்பட்ட காதல் 2020 ஆம் ஆண்டு திருமணத்தில் முடிந்தது. கிறிஸ்தவ முறைப்படி வீட்டிலேயே நடந்த இந்த திருமணம் முறையாக பதிவு செய்யப்படாமல் நடந்தது. மேலும் பீட்டர் பாலின் குடிப்பழக்கத்தால் மூன்றே மாதத்தில் வனிதா விஜயகுமார் அவரிடம் இருந்து பிரிந்தார். இதன் பின்னர் தன்னுடைய திரையுலக வாழ்க்கையில் முழுக்க முழுக்க கவனம் செலுத்தி வரும் வனிதா, அடுத்தடுத்து பல படங்களில் நடித்து வருகிறார். சமீபத்தில் பிரசாந்த் நடிப்பில் வெளியான அந்தகன் படத்திலும் இவருடைய நடிப்பு பாராட்டுகளை பெற்றது.
அச்சச்சோ.. ஒரு வேலை பயில்வான் சொன்னது உண்மை தான் போல! ஆர்த்தி சமாதான பேச்சுவார்த்தையின் பின்னணி!
சர்ச்சைக்கு பஞ்சம் இல்லாத பிரபலமாக வலம் வரும் வனிதா விஜயகுமார், தற்போது நான்காவது திருமணத்திற்கு தயாராகி விட்டாரா? என்கிற சந்தேகம் எழுந்துள்ளது. அதாவது 'எம்ஜிஆர் சிவாஜி ரஜினி கமல்' படத்தில் நடித்த போது தன்னுடன் காதல் கிசுகிசுவில் சிக்கிய பிக்பாஸ் பிரபலம் ராபர்ட் மாஸ்டருக்கு... கடற்கரையில், பிகினி உடையில் முட்டி போட்டு புரபோஸ் செய்துள்ளார். மேலும் இதுகுறித்து வரும் அக்டோபர் 5-ஆம் தேதி முக்கிய தகவல் வெளியாக உள்ளதாகவும் கூறப்படுகிறது.
வனிதாவின் 4-ஆவது திருமண சர்ச்சை ஒருபுறம் ஓடிக்கொண்டிருந்தாலும்.. சமீபத்தில் ராபர்ட் - வனிதா விஜயகுமார் இருவரும் இணைந்து, ஒரு படத்தில் நடிக்க கமிட் ஆனார்கள். அந்த படம் சம்மந்தமான அறிவிப்புக்காக தான் இந்த வித்தியாசமான புரோமோஷன் பாணியை படக்குழு கையாண்டு உள்ளதாக கூறப்படுகிறது. சரி என்ன அறிவிப்பு வரப்போகிறது என்பதை அக்டோபர் 5-ஆம் தேதி வரை காத்திருந்து தெரிந்து கொள்வோம்.