டிமிக்கி கொடுத்தாரா டிடிஎப்; மஞ்சள் வீரன் படத்தில் இருந்து தூக்கி எறியப்பட்டது ஏன்?

Published : Oct 01, 2024, 02:55 PM IST

மஞ்சள் வீரன் திரைப்படத்தில் ஹீரோவாக நடிக்க கமிட் ஆன யூடியூபர் டிடிஎப் வாசன் தற்போது அப்படத்தில் இருந்து நீக்கப்பட்டுள்ளதாக இயக்குனர் அறிவிப்பு.

PREV
14
டிமிக்கி கொடுத்தாரா டிடிஎப்; மஞ்சள் வீரன் படத்தில் இருந்து தூக்கி எறியப்பட்டது ஏன்?
Director Chellam, TTF

பைக் ஓட்டும் வீடியோகளை பதிவிட்டு 2கே கிட்ஸ் மத்தியில் மிகவும் பேமஸ் ஆக திகழ்பவர் டிடிஎப் வாசன். சர்ச்சைக்குரிய யூடியூபராக வலம் வரும் இவர் கடந்த ஆண்டு சாலையில் அதிவேகமாக பைக் ஓட்டி விபத்தை ஏற்படுத்தியதற்காக கைது செய்து சிறையில் அடைக்கப்பட்டார். சுமார் ஒரு மாத சிறைவாசத்துக்கு பின்னர் டிடிஎப் வாசன் ஜாமினில் வெளியே வந்தார். பின்னர் காரில் செல்போன் பேசியபடி ஓட்டிய குற்றத்திற்காக கடந்த சில மாதங்களுக்கு முன் மதுரையை அடுத்த திருமங்கலத்தில் போலீசார் அவரை கைது செய்தனர்.

24
TTF Vasan

இப்படி சர்ச்சைக்கு பஞ்சமில்லாதவராக வலம் வரும் டிடிஎப் வாசன், கடந்த ஆண்டு சினிமாவிலும் ஹீரோவாக நடிக்க கமிட் ஆனார். அவர் நடிக்க முதன்முதலில் கமிட்டான படம் மஞ்சள் வீரன். இப்படத்தை செல் அம் என்பவர் இயக்க இருந்தார். இப்படத்தில் நகைச்சுவை நடிகர் கூல் சுரேஷும் முக்கிய காதாபாத்திரத்தில் நடிக்க ஒப்பந்தமானார். இப்படத்தின் அறிவிப்புக்கு பின்னர் அதுகுறித்த எந்த ஒரு அப்டேட்டும் வெளியாகாமல் இருந்தது.

இதையும் படியுங்கள்... ரஜினிகாந்த் டிஸ்சார்ஜ் ஆக இத்தனை நாட்கள் ஆகுமா?

34
Manjal veeran TTF Vasan

இந்நிலையில், இன்று செய்தியாளர்களை சந்தித்த மஞ்சள் வீரன் படத்தின் இயக்குனர் செல் அம், மஞ்சள் வீரன் படத்தில் இருந்து டிடிஎப் வாசன் நீக்கப்படுவதாக அறிவித்தார். அடிக்கடி அவர் போலீஸ் கேஸில் சிக்குவதால் அவரை நீக்குகிறீர்களா என்கிற கேள்விக்கு மறுப்பு தெரிவித்த செல் அம். படத்தின் சூழலோடு ஒத்துப்போகாததால் அவரை தன் படத்தில் இருந்து நீக்க முடிவு செய்துள்ளதாக இயக்குனர் செல் அம் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில் கூறி உள்ளார்.

44
TTF vasan removed from Manjal Veeran

வாசன் இல்லை என்றால் படத்தை கைவிடப்போகிறீர்களா என்கிற கேள்விக்கு இல்லை என பதிலளித்த அவர், அடுத்த ஹீரோ யார் என்பது குறித்த அறிவிப்பை வருகிற அக்டோபர் 15-ந் தேதி வெளியிட உள்ளதாக செல் அம் தெரிவித்தார். மேலும் டிடிஎப் வாசன் இல்லாமலேயே தற்போது வரை மஞ்சள் வீரன் படத்தின் 35 சதவீத படப்பிடிப்பு முடிவடைந்துவிட்டதாக கூறிய செல் அம், புது ஹீரோ வந்த உடன் எஞ்சியுள்ள காட்சிகளை படமாக்க உள்ளதாக தெரிவித்துள்ளார்.

இதையும் படியுங்கள்... ஐசியூவில் அனுமதிக்கப்பட்டாரா ரஜினிகாந்த்? சூப்பர்ஸ்டார் உடல்நிலை பற்றி வந்த லேட்டஸ்ட் அப்டேட்

click me!

Recommended Stories