ஓடிடியில் 4 மணிநேர படமாக வருகிறதா கோட்? அதிகாரப்பூர்வ ரிலீஸ் தேதியை அறிவித்த நெட்பிளிக்ஸ்

First Published Oct 1, 2024, 12:58 PM IST

GOAT OTT Release : வெங்கட் பிரபு இயக்கத்தில் விஜய் ஹீரோவாக நடித்த கோட் திரைப்படம் ஓடிடியில் ரிலீஸ் ஆக உள்ள தேதியை நெட்பிளிக்ஸ் நிறுவனம் அறிவித்து உள்ளது.

GOAT Movie

சென்னை 28, மங்காத்தா, சரோஜா, மாநாடு போன்ற மாஸ் ஹிட் படங்களை கொடுத்த இயக்குனர் வெங்கட் பிரபு, நடிகர் விஜய்யுடன் இணைந்து முதன்முறையாக பணியாற்றிய திரைப்படம் கோட். இப்படத்தை ஏஜிஎஸ் எண்டர்டெயின்மெண்ட் நிறுவனம் தயாரித்தது. இப்படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைத்து இருந்தார். இப்படத்தில் நடிகர் விஜய், தந்தை, மகன் என இரட்டை வேடங்களில நடித்திருந்தார். அதில் விஜய்யின் இளம் வயது கதாபாத்திரத்தை டீ ஏஜிங் பயன்படுத்தி உருவாக்கி இருந்தனர்.

GOAT Movie OTT Release

கோட் திரைப்படத்தில் நடிகர் விஜய்க்கு ஜோடியாக மீனாட்சி செளத்ரி மற்றும் நடிகை சினேகா ஆகியோர் நடித்திருந்தனர். மேலும் பிரேம்ஜி, பிரசாந்த், பிரபுதேவா, வைபவ், மைக் மோகன், ஜெயராம், லைலா என மிகப்பெரிய நட்சத்திர பட்டாளமே நடித்திருந்த இப்படம் கடந்த செப்டம்பர் 5-ந் தேதி விநாயகர் சதுர்த்தி பண்டிகையையொட்டி திரையரங்குகளில் ரிலீஸ் ஆனது. தமிழ், தெலுங்கு, இந்தி என மூன்று மொழிகளிலும் கோட் படம் ரிலீஸ் செய்யப்பட்டது.

இதையும் படியுங்கள்... ஐசியூவில் அனுமதிக்கப்பட்டாரா ரஜினிகாந்த்? சூப்பர்ஸ்டார் உடல்நிலை பற்றி வந்த லேட்டஸ்ட் அப்டேட்

Latest Videos


GOAT Movie Box Office

இதில் தமிழ்நாட்டில் ரசிகர்கள் மத்தியில் அமோக வரவேற்பை பெற்ற கோட் திரைப்படம் இங்கு மட்டும ரூ.200 கோடிக்கு மேல் வசூலித்து மாஸ் காட்டியது. தெலுங்கு மற்றும் இந்தியில் கோட் படத்திற்கு எதிர்பார்த்த வரவேற்பு கிடைக்கவில்லை. இருப்பினும் வெளிநாடுகளிலும் இப்படம் வசூல் வேட்டை நடத்தியது. இதன் மூலம் உலகளவில் ரூ.450 கோடிக்கு மேல் வசூலித்து இருக்கிறது கோட் திரைப்படம். இந்த நிலையில் இப்படத்தின் ஓடிடி ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்டு உள்ளது.

GOAT Movie OTT Release Date

அதன்படி கோட் திரைப்படம் வருகிற அக்டோபர் 3ந் தேதி நெட்பிளிக்ஸ் ஓடிடி தளத்தில் தமிழ், தெலுங்கு, இந்தி, கன்னடம், மலையாளம் ஆகிய மொழிகளில் ரிலீஸ் ஆகும் என அறிவிக்கப்பட்டு உள்ளது. முன்னதாக அளித்த பேட்டிகளில் கோட் திரைப்படம் டைரக்டர்ஸ் கட் வெர்ஷனாக ஓடிடியில் வெளியிட திட்டமிட்டு இருப்பதாக இயக்குனர் வெங்கட் பிரபு கூறி இருந்தார். ஆனால் இதனை நெட்பிளிக்ஸ் உறுதிப்படுத்தவில்லை. ஒருவேளை வெங்கட் பிரபு சொன்னபடி ரிலீஸ் ஆனால் ஓடிடியில் சுமார் 4 மணிநேர படமாக கோட் வரும் என்பது குறிப்பிடத்தக்கது.

இதையும் படியுங்கள்... அச்சச்சோ.. ஒரு வேலை பயில்வான் சொன்னது உண்மை தான் போல! ஆர்த்தி சமாதான பேச்சுவார்த்தையின் பின்னணி!

click me!