மெய்யழகனை காலி பண்ண இந்த வாரம் வெளியாகும் 8 படங்கள்!

First Published Oct 1, 2024, 6:18 PM IST

ஓவ்வொரு வாரமும், 5 படங்களுக்கு மிகாமல் திரையரங்குகளில் ரிலீஸ் ஆகி வரும் நிலையில், இந்த வாரம்... அதாவது அக்டோபர் 4-ஆம் தேதி வெளியாக உள்ள 8 படங்கள் என்னென்ன என்பதை பார்ப்போம்.
 

Seeran:


சீரன்:

இயக்குனர் எம்.ராஜேஷிடம் உதவியாளராக இருந்த, துரை கே முருகன் இயக்குனராக அறிமுகமாகும் திரைப்படம் சீரன். பரியேறும் பெருமாள், வாழை, கர்ணன், போன்ற படங்களை போலவே இந்த படமும் சமூகத்தில் உள்ள ஏற்றத்தாழ்வுகளையும்... மனிதர்களுக்கு சம உரிமை கொடுக்க வேண்டும் என்கிற கருத்தை வலியுறுத்தியும் எடுக்கப்பட்டுள்ளது. இந்த படத்தில் நடிகை இனியா மூன்று வித்தியாசமான கெட்டப்பில் நடித்துள்ளார். இந்தத் திரைப்படம் அக்டோபர் 4-ஆம் தேதி வெளியாக உள்ளது.
 

Orey Pechu Orey Mudivu

ஒரே பேச்சு ஒரே முடிவு:

மலையாள இயக்குனர் வி ஆர் எழுத்தச்சன் என்பவர் இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம் 'ஒரே பேச்சு ஒரே முடிவு'. இந்த படத்தில் புரூஸ்லி ராஜேஷ் என்பவர் கதாநாயகனாக நடித்த ஸ்ரிதா சுஜிதரன் கதாநாயகியாக நடித்துள்ளார். பெரிய நட்சத்திர பட்டாளங்களை கொண்டு, ஸ்மால் பட்ஜெட்டில் எடுக்கப்பட்டு இந்த திரைப்படம் whatsapp குரூபால் ஏற்படும் பிரச்சனையை பற்றி பேச உள்ளது. கதாநாயகன் தன்னுடைய பள்ளியின் whatsapp குரூப்பில் இணையும்போது, அதில் பள்ளி பருவ காதலி இருப்பதை அறிந்து, அவரை சந்திக்க துடிக்கிறார். அவரை செல்லும்போது ஏற்படும் பிரச்சனைகள் மற்றும் அதில் இருந்து எப்படி கதாநாயகன் வெளியே வருகிறார்? என்பதை இப்படம் எதார்த்தமான கண்ணோட்டத்தில் பேசியுள்ளது.

சாவித்திரிக்கு காலையில் கணவனாகவும்.. மாலையில் மகனாகவும் நடித்த ஒரே நடிகர் யார் தெரியுமா?

Latest Videos


Satyabhama:

சத்தியபாமா:

தெலுங்கில் கடந்த ஜூன் மாதம் வெளியான சத்யபாமா திரைப்படத்தின் தமிழ் டப்பிங் அக்டோபர் 4-ஆம் தேதி வெளியாக உள்ளது. இந்த படத்தில் காஜல் அகர்வால் போலீஸ் அதிகாரியாக நடிக்க, நவீன் சந்திரா, பிரகாஷ்ராஜ், ஹர்ஷ வர்தன், ரவிவர்மா, உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். இந்த படத்தை சுமன் சிக்கலா இயக்கி உள்ளார். நடிகை காஜல் அகர்வாலுக்கு தமிழ் திரை உலகில் ஏராளமான ரசிகர்கள் உள்ளதால், இந்த படத்தின் டப்பிங்கை அக்டோபர் 4-ஆம் தேதி வெளியிட படக்குழு முடிவு செய்துள்ளது.

Appu VI Std

அப்பு VI Std:

இயக்குனர் வசீகரன் பாலாஜி இயக்கத்தில் உருவாகி உள்ள இந்த படத்தில், கல்லூரி வினோத், டார்லிங் மதன், உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். வீர வெங்கடேஸ்வரர் தயாரித்துள்ள இந்த படத்திற்கு.. பிரண்ட் ஆலன் இசை அமைத்துள்ளார். இந்தத் திரைப்படம் அக்டோபர் நான்காம் தேதி திரையரங்குகளில் ரிலீஸ் ஆக உள்ளது.

பிகினி உடையில் பிக்பாஸ் பிரபலத்துக்கு புரபோஸ்; வனிதாவின் 4வது கணவர் இவரா?

Chella Kutty:

செல்ல குட்டி:

96 திரைப்படம் போலவே , 90ஸ் கிட்ஸின் நினைவுகளை அசைபோடும் விதமாக எடுக்கப்பட்டுள்ள திரைப்படம்  செல்ல குட்டி. முழுக்க முழுக்க ஒரு ஃபீல் குட் மூவியாக இந்த படத்தை சகாயநாதன் என்பவர் இயக்கி உள்ளார். புதுமுக நாயகன் நாயகி இந்த படத்தில் நடித்துள்ள நிலையில். 90ஸ் கிட்ஸின் பள்ளிக்காலம், கல்லூரி வாழ்க்கை, நட்பு, காதல், என பல அம்சங்களை பேசியுள்ளார் இயக்குனர்.  இந்த படத்திற்கு சிப்பி இசையமைத்து உள்ள நிலையில், இப்படம் அக்டோபர் 4-ஆம் தேதி ரிலீஸ் ஆக உள்ளது.
 

Aaragan

ஆரகன்:

இயக்குனர் அருண் கே ஆர் இயக்கத்தில் மைக்கேல் தங்கதுரை ஹீரோவாக நடித்துள்ள திரைப்படம் ஆரகன். இந்த படத்தில் கவிப்பிரியா என்பவர் கதாநாயகியாக நடித்துள்ளார். காதலை மையமாக வைத்து எடுக்கப்பட்டுள்ள இந்த திரைப்படத்தில், ஸ்ரீரஞ்சனி, கலைராணி, யாசர், உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். இந்த திரைப்படத்தை ஹரிஹரன் பஞ்சலிங்கம் என்பவர் தயாரிக்,க விவேக் இசையமைத்துள்ளார். இப்படம் அக்டோபர் 4-ஆம் தேதி ரிலீஸ் ஆக உள்ளது.

அச்சச்சோ.. ஒருவேளை பயில்வான் சொன்னது உண்மை தான் போல! ஆர்த்தி சமாதான பேச்சுவார்த்தையின் பின்னணி!

Vettaikaari

வேட்டைக்காரி:

இயக்குனர் காளிமுத்து காத்தமுத்து இயக்கத்தில் உருவாக்கியுள்ள வேட்டைக்காரி திரைப்படத்தின் மூலம் வனப்பகுதியில் வாழும் மக்களின் போராட்டத்தை கண் முன் நிறுத்தி உள்ளார். மேலும் இந்த கதையுடன் ஒரு அழகான காதல் கதையும் பயணிக்க உள்ளது. இந்த படத்தில் ராகுல் கதாநாயகனாக நடிக்க, சஞ்சனா சிங் கதாநாயகியாக நடித்துள்ளார். இப்படத்தை ஸ்ரீ கருப்பர் ஃபிலிம் சார்பில் விஷ்ணு பிரியா வேலுச்சாமி என்பவர் தயாரிக்க, ஏ கே ராம்ஜி இப்படத்திற்கு இசையமைத்துள்ளார். இந்த படமும் அக்டோபர் 4-ஆம் தேதி ரிலீஸ் ஆக உள்ளது.

Neela Nira Sooriyan:

நீல நிற சூரியன்:

இந்தப் திரைப்படம் திரை உலகில் ஒரு புது முயற்சி என்னலாம். திருநங்கையான சம்யுக்தா விஜயன் இந்த படத்தை இயக்கி நடித்துள்ளார். இப்படத்திற்கு நீல நிற சூரியன் என பெயரிடப்பட்டுள்ளது. இப்படம் ஏற்கனவே பல திரைப்பட விருதுகளில் கலந்துகொண்டு பாராட்டுகளை பெற்ற நிலையில், அக்டோபர் 4-ஆம் தேதி வெளியாக உள்ளது. இப்படம் ஓர் ஆண் பெண்ணாக மாற விரும்புவது குறித்து பேசுவது மட்டுமல்லாமல், நம் சமுதாயம் எப்படி அவர்களை பார்க்கிறது? என இதுவரை கூறப்படாத ஒரு திருநங்கையின் பார்வையில் இருந்து எடுக்கப்பட்டுள்ளது.

ரஜினிகாந்த் டிஸ்சார்ஜ் ஆக இத்தனை நாட்கள் ஆகுமா?

click me!