12 வயது மகளின் குற்றச்சாட்டு; 'இனி உன் வாழ்க்கையில் வரமாட்டேன்' கூனி குறுகிய நடிகர் பாலா!

First Published | Oct 1, 2024, 7:12 PM IST

தன்னுடைய மகள் அவந்திகாவின் குற்றச்சாட்டுக்கு, பிரபல நடிகரும், இயக்குனர் சிறுத்தை சிவாவின் சகோதரருமான பாலா வேதனையோடு பதில் அளித்துள்ளார்.
 

Actor Bala

தமிழில் கடந்த 2003 ஆம் ஆண்டு வெளியான, 'அன்பு' திரைப்படத்தின் மூலம் ஹீரோவாக அறிமுகமானவர் பாலா. இந்த படத்தின் வெற்றியை தொடர்ந்து காதல் கிசுகிசு, அம்மா அப்பா செல்லம், கலிங்கா, மஞ்சள் வெயில், போன்ற படங்களில் ஹீரோவாக நடித்தார். அதே போல் தன்னுடைய அண்ணன் சிவா இயக்கத்தில் உருவான வீரம், அண்ணாத்த, போன்ற படங்களில் குணச்சித்திர வேடத்தில் நடித்திருந்தார்.

Bala Wife Amrutha

தமிழை விட மலையாள திரை உலகில் அதிக ரசிகர்களை கொண்ட பாலா, தற்போது 'பேட் பாய்ஸ்' என்கிற படத்தில் நடித்துள்ளார். இவர் கடந்த 2010-ஆம் ஆண்டு பிரபல பாடகி அம்ருதா சுரேஷ் என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார். பின்னர் கருத்து வேறுபாடு காரணமாக, இருவரும் 2019 ஆம் ஆண்டு விவாகரத்து பெற்று பிரிந்தனர். தற்போது இவர்களுக்கு 12 வயதில் அவந்திகா என்கிற மகள் உள்ளார். நடிகர் பாலா தன்னுடைய மனைவியிடம் இருந்து விவாகரத்து பெற்று பிரிந்தாலும், அவ்வபோது மகள் மீதான பாசத்தை வெளிப்படுத்தி வந்தார்.

மெய்யழகனை காலி பண்ண இந்த வாரம் வெளியாகும் 8 படங்கள்!

Tap to resize

Actor Bala second wif Elizabeth Udayan

மேலும் பாலா கடந்த 2021 ஆம் ஆண்டு, மருத்துவர் எலிசபெத் என்பவரை திருமணம் செய்து கொண்டார். பின்னர் அவரிடம் இருந்து விவாகரத்து பெற்று பிரிந்தார். இருவரும் மனம் ஒன்று பிரிவதாக தெரிவித்திருந்தனர். கணவன் - மனைவி என்கிற உறவில் இருந்து இருவரும் பிரிந்தாலும், தங்களுடைய நட்பு தொடரும் என தெரிவித்தனர். அதற்கு ஏற்ற போல், பாலா மருத்துவமனையில் இருந்தபோது பாலாவை எலிசபெத் தான் கவனித்து கொண்டார். அதே போல் பாலாவின் முதல் மனைவி அம்ருதாவும் முதல் ஆளாக மருத்துவமனைக்கு ஓடிவந்து தன்னுடைய முன்னாள் கணவர் குறித்து நலம் விசாரித்தார்.

Daughter allegation against father

இந்நிலையில் நடிகர் பாலாவின் மகள் அவந்திகா, வெளியிட்ட வீடியோ ஒன்றில்... "என் தந்தை என்னை அதிகம் நேசிப்பதாகவும், எனக்கு பல பரிசு பொருட்களை வாங்கி கொடுத்ததாகவும் கூறுகிறார். அதில் துளியும் உண்மை இல்லை. உண்மையை சொல்லப்போனால் என் தந்தையை நேசிக்க எனக்கு ஒரு சின்ன காரணம் கூட கிடையாது. அவர் என்னையும் என் அம்மாவையும் குடித்துவிட்டு டார்ச்சர் செய்தது இப்போதும் என் நினைவில் இருக்கிறது. அந்த நேரத்தில் நான் குழந்தையாக இருந்ததால், என்னால் என்னுடைய தாய்க்கு உதவி செய்ய முடியவில்லை. அப்பா உண்மையிலேயே என் மீது கொஞ்சமாவது உங்களுக்கு பாசம் இருந்தால் என்னுடைய வாழ்க்கையில் குறுக்கிடாதீர்கள் என கூறி கூறி இருந்தார்.

பிகினி உடையில் பிக்பாஸ் பிரபலத்துக்கு புரபோஸ்; வனிதாவின் 4வது கணவர் இவரா?

Bala Replay

இதற்கு பாலா தற்போது வீடியோ ஒன்றை வெளியிட்டு பதில் கொடுத்துள்ளார். அதில் "என் செல்ல மகளே அவந்திகா? நீ என்னை அப்பா என்று அழைத்ததற்கு நன்றி.  உன்னிடம் நான் வாக்குவாதம் செய்ய ஒருபோதும் நினைக்கவில்லை. ஒருவன் தன் குழந்தையோடு வாக்குவாதத்தில் ஈடுபட்டால் அவன் மனிதனே இல்லை. உனக்கு மூன்று வயது இருக்கும் போது, பாட்டிலை வீசினேன்.. ஐந்து நாட்கள் பட்டினி போட்டேன் என சொல்கிறாய். இதற்க்கு உன்னுடன் வாக்குவாதம் செய்து நான் வெல்லலாம்... ஆனால் அதை நான் செய்ய விரும்பவில்லை. நீ வெற்றி பெற வேண்டும் என்பதற்காக நான் உன்னிடம் சரணடைகிறேன். நீ 5 மாத கருவில் இருந்த போதே உனக்கு அவந்திகா என பெயர் சூட்டி அழகு பார்த்தவன் நான். நீ உன் வாழ்க்கையில் நன்றாக படித்து வலிமையானவளாக வர வாழ்த்துக்கள். இனி ஒருபோதும் உன் வாழ்க்கையில் நான் குறுக்கிட மாட்டேன் என... தன்னுடைய மகளின் குற்றச்சாட்டுக்கு கூனி குறுகி பதில் அளித்துள்ளார்.

Latest Videos

click me!