சென்னையில் பிறந்து வளர்ந்து, சினிமா ஆசியோடு வலம் வந்து கொண்டிருந்தவர் தான் சண்முகராஜா என்கின்ற மிஷ்கின். பிரபல நாவல் ஒன்றில் வரும் "இளவரசன் மிஷ்கினின்" கதாபாத்திரத்தின் மீது கொண்ட ஈடுபாட்டின் காரணமாக தன்னுடைய பெயரையும் "மிஷ்கின்" என்று மாற்றிக் கொண்டார் சண்முகராஜா. தொடக்க காலத்தில் புத்தகக் கடை ஒன்றில் வேலை பார்த்து வந்த அவர், பிரபல இயக்குனர் வின்சென்ட் சிவா இயக்கத்தில், தளபதி விஜய் நடிப்பில் கடந்த 2002ம் ஆண்டு வெளியான "யூத்" என்கின்ற திரைப்படத்தின் மூலம் தான் தனது கலை உலக பயணத்தை தொடங்கினார்.
அதன்பிறகு வின்சென்ட் செல்வா இயக்கிய "ஜித்தன்" என்கின்ற திரைப்படத்திலும் அவருக்கு உதவி இயக்குனராக பணியாற்றினார். "ஜித்தன்" திரைப்படம் 2005ம் ஆண்டு வெளியான நிலையில், 2006ம் ஆண்டு தமிழில் வெளியான "சித்திரம் பேசுதடி" என்கின்ற திரைப்படத்தின் மூலம் தனது கலை உலக பயணத்தை இயக்குனராக தொடங்கிய அவர், தன்னுடைய முதல் திரைப்படத்திலேயே முற்றிலும் மாறுபட்ட ஒரு கதை அம்சத்தை தமிழ் திரையுள்ளதற்கு கொடுத்து, ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய வரவேற்பை பெற்றவர்.
இரவின் நிழல் நாயகி பிரிகிடா சாகாவின் 'திமிருக்காரியே' வெளியிட்ட சுதா கொங்கரா !