தியேட்டரில் இருந்து ஓடிடிக்கு தாவும் ‘லப்பர் பந்து’; எப்போ ரிலீஸ் தெரியுமா?

Published : Oct 02, 2024, 02:44 PM ISTUpdated : Oct 02, 2024, 05:29 PM IST

தமிழரசன் பச்சைமுத்து இயக்கத்தில் ஹரிஷ் கல்யாண் நாயகனாக நடித்து தியேட்டரில் ஹிட் ஆன லப்பர் பந்து திரைப்படத்தின் ஓடிடி ரிலீஸ் குறித்த அப்டேட் கசிந்துள்ளது.

PREV
14
தியேட்டரில் இருந்து ஓடிடிக்கு தாவும் ‘லப்பர் பந்து’; எப்போ ரிலீஸ் தெரியுமா?
Lubber Pandhu

பொறியாளன் படம் மூலம் தமிழ் சினிமாவில் ஹீரோவாக அறிமுகமானவர் ஹரிஷ் கல்யாண். இதையடுத்து பிக்பாஸ் நிகழ்ச்சியில் வைல்டு கார்டு போட்டியாளராக பங்கேற்ற அவர் பைனல் வரை முன்னேறினார். பிக்பாஸ் நிகழ்ச்சி ஹரிஷ் கல்யாணின் திரையுலக வாழ்க்கையில் மிகப்பெரிய திருப்புமுனையாக அமைந்தது. பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு பின்னர் யுவன் சங்கர் ராஜா தயாரித்த பியார் பிரேமா காதல் படத்தில் நடித்தார் ஹரிஷ் கல்யாண்.

24
Lubber Pandhu Movie

அப்படத்தின் வெற்றியை தொடர்ந்து இஸ்பேட் ராஜாவும் இதய ராணியும், தாராள பிரபு, ஓமணப்பெண்ணே, பார்க்கிங் என வரிசையாக வித்தியாசமான கதையம்சம் கொண்ட படங்களை தேர்ந்தெடுத்து நடித்தார். அவர் நடிப்பில் அண்மையில் ரிலீஸ் ஆன படம் லப்பர் பந்து. கிரிக்கெட்டை மையமாக வைத்து உருவான இப்படத்தை தமிழரசன் பச்சைமுத்து என்கிற புதுமுக இயக்குனர் இயக்கி இருந்தார். இப்படத்திற்கு ஷான் ரோல்டன் இசையமைத்து இருந்தார்.

இதையும் படியுங்கள்... OTT யில் அதிகம் பார்க்கப்பட்ட டாப் 10 படங்கள் & வெப் தொடர்கள் லிஸ்ட் இதோ

34
Lubber Pandhu Movie Collection

லப்பர் பந்து திரைப்படத்தில் ஹரிஷ் கல்யாண் உடன் அட்டகத்தி தினேஷ், சஞ்சனா, சுவாசிகா, காளி வெங்கட், டிஎஸ்கே, பால சரவணன் என மிகப்பெரிய நட்சத்திர பட்டாளமே நடித்திருந்தது. கடந்த செப்டம்பர் 20-ந் தேதி திரையரங்குகளில் ரிலீஸ் ஆன இப்படம் பாக்ஸ் ஆபிஸிலும் சக்கைப்போடு போட்டு வருகிறது. அதன்படி ரிலீஸ் ஆகி மூன்று வாரங்களை கடந்து வெற்றிநடைபோட்டு வரும் லப்பர் பந்து திரைப்படம் ரூ.20 கோடிக்கு மேல் வசூலையும் வாரிக்குவித்து உள்ளது.

44
Lubber Pandhu OTT Release

லப்பர் பந்து ஓடிடி ரிலீஸ்

இந்த நிலையில், லப்பர் பந்து திரைப்படத்தின் ஓடிடி ரிலீஸ் குறித்த அப்டேட் இணையத்தில் கசிந்துள்ளது. அதன்படி இப்படம் வருகிற அக்டோபர் மாத இறுதியில் தீபாவளி பண்டிகையையொட்டி டிஸ்னி ப்ளஸ் ஹாட்ஸ்டார் ஓடிடி தளத்தில் ரிலீஸ் ஆக உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. லப்பர் பந்து படத்தின் ஓடிடி ரிலீஸ் பற்றிய அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. இப்படம் தமிழ் மட்டுமின்றி தெலுங்கு, இந்தி, கன்னடம் ஆகிய மொழிகளிலும் டப்பிங் செய்யப்பட்டு ஓடிடியில் ரிலீஸ் செய்யப்பட உள்ளது குறிப்பிடத்தக்கது.

இதையும் படியுங்கள்... ஒரு படம் கூட ஹிட் கொடுக்காத நாயகியை ‘தளபதி 69’ல் விஜய்க்கு ஜோடியாக்கிய எச்.வினோத்!!

click me!

Recommended Stories