Vettaiyan: வேட்டையன் - தர்பார், ஜெயிலர் படங்களின் மிக்ஸிங்கா? 3 படமே போலீஸ் கதை, அனிருத் இசை!

First Published | Oct 2, 2024, 7:11 PM IST

Vettaiyan Trailer: ரஜினிகாந்தின் வேட்டையன் டிரைலர், தர்பார் மற்றும் ஜெயிலர் படங்களின் கலவையாக இருப்பதாக விமர்சனங்கள் எழுந்துள்ளன. கதை, காட்சிகள், வசனங்கள் முந்தைய படங்களை நினைவுபடுத்துவதாக ரசிகர்கள் கருத்து தெரிவிக்கின்றனர்.

Rajinikanth Vettaiyan Movie Trailer

ரஜினிகாந்த் நடிப்பில் திரைக்கு வர இருக்கும் வேட்டையன் படத்தின் டிரைலர் சற்று முன் வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பு பெற்று வருகிறது. ஆனால், இந்த டிரைலரை வைத்து பார்க்கும் போது வேட்டையன் படமானது முழுக்க முழுக்க தர்பார் மற்றும் ஜெயிலர் இரண்டு படங்களின் கலவையாக இருக்கும் என்று எண்ணத் தோன்றுகிறது.

இதற்கு என்ன காரணம் என்று கேட்டால் ஜெயிலர் படத்தில் ரஜின்காந்த் பயன்படுத்தியிருக்கும் காஸ்டியூம், வில்லன்களுடன் சண்டை காட்சிகள், சண்டைக்கு பயன்படுத்திய லோகேஷன்ஸ் என்று எல்லாவற்றையும் பார்க்கும் போது படம் முழுக்க முழுக்க தர்பார் மற்றும் ஜெயிலர் படங்களின் ஒட்டு மொத்த கலவையாக இருக்கும் என்று தெரிகிறது.

Darbar and Jailer is Vettaiyan

மேலும், வேட்டையன், ஜெயிலர் மற்றும் தர்பார் ஆகிய 3 படங்களும் போலீஸ் கதையை மையப்படுத்தியே எடுக்கப்பட்டிருக்கிறது. இந்த 3 படங்களுக்கும் அனிருத் தான் இசையமைத்திருக்கிறார். வசனங்களும் கிட்டத்தட்ட ஒரே மாதிரியாக இருப்பது போன்று தெரிகிறது. அப்படியிருக்கும் போது வேட்டையன் படத்தில் பெரிதாக வித்தியாசம் ஒன்றும் இருக்காது. வழக்கம் போன்று பெண்களுக்கு எதிராக நடக்கும் சம்பங்களும், குற்றவாளிகளை கண்டுபிடிக்கும் காட்சிகளும் தான் இருக்கும். தர்பார் படத்தில் ஐபிஎஸ் அதிகாரியாக வலம் வருவார். அதே போன்று தான் வேட்டையன் படத்திலும் ஐபிஎஸ் அதிகாரியாக காவல் கண்காணிப்பாளராக நடித்திருக்கிறார்.

Latest Videos


Rajinikanth Vettaiyan Movie Trailer

தர்பார் படத்தில் எப்போதும் தன்னை சுற்றி போலீஸ் பட்டாளங்கள் இருக்கும். குற்றவாளிகளை என்கவுண்டர் செய்வார். மேலிடத்திலிருந்து ரஜினிகாந்திற்கு அழுத்தம் கொடுக்கப்படும். அதையெல்லாம் தாண்டி, கடைசியில் வில்லனை காலி செய்வார். அதே போன்று தான் வேட்டையன் டிரைலரிலும் குற்றவாளியை பிடிக்க போராடுகிறார். மேலிடத்திலிருந்து அழுத்தம் கொடுக்கப்படுகிறது. நீங்கள் என்னை எந்த போஸ்ட்ல தூக்கி அடித்தாலும் நான் அதே போலீஸ் காரன்தான். எங்கிட்ட இருந்து அவங்கள யாராலும் காப்பாத்த முடியாது என்று வேட்டையன் படத்தில் வசனம் பேசுகிறார்.

Vettaiyan Movie Trailer

இதுவே தர்பார் படத்தில் சார் அவிங்கிட்ட சொல்லி வச்சுகோங்க, போலீஸ லெப்ட்ல வச்சுக்க, ரைட்டுல வச்சுக்க, ஸ்டிரைட்டா வச்சுக்கோன்னு டயலாக் பேசுவார். மேலும், ரயில்வே பிளாட்பார்ம சில ஆக்‌ஷன் காட்சிகள் வரும். ஆனால், வேட்டையனில் ரயில்வே சப்வே வருகிறது. முழுக்க முழுக்க ஆக்சன் கதையை மையப்படுத்திய வேட்டையன் படத்தில் ரஜினிகாந்த் உடன் இணைந்து அமிதாப் பச்சன், பகத் பாசில், ராணா டகுபதி, மஞ்சு வாரியர், அபிராமி, துஷாரா விஜயன், ரோகினி, ராவ் ரமேஷ், ரித்திகா சிங், கிஷோர், ரக்‌ஷன், ஜி எம் சுந்தர், சுப்ரீத் ரெட்டி, ஷாஜி சென் என்று ஏராளமான நட்சத்திரங்கள் நடித்துள்ளனர்.

Rajinikanth Vettaiyan Trailer

ரஜினிகாந்த் காவல் கண்காணிப்பாளராகவும், ரித்திகா சிங் துணை காவல் கண்காணிப்பாளராகவும் நடித்துள்ளனர். ராவ் ரமேஷ் டிஜிபியாகவும், கிஷோர் எஸ்பியாகவும்,அமிதாப் பச்சன் வழக்கறிஞராகவும் நடித்துள்ளனர். அனிருத் இசையமைத்துள்ளார். லைகா புரோடக்‌ஷன்ஸ் நிறுவனம் தயாரித்துள்ளது. அண்மையில் இந்தப் படத்தில் இடம் பெற்றுள்ள மனசிலாயோ பாடல் வெளியாகி பட்டிதொட்டியெங்கும் ஹிட் கொடுத்தது.

அதோடு ரீல்ஸ் உருவாக காரணமாகவும் அமைந்தது. சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரையில் அனைவருமே மனசிலாயோ பாடலை கொண்டாடி வருகின்றனர். வரும் 11 ஆம் தேதி சரஸ்வதி பூஜை மற்றும் ஆயுத பூஜை தின விடுமுறையை முன்னிட்டு வேட்டையன் படமானது 10ஆம் தேதி திரைக்கு வருகிறது.

click me!