விவாகரத்தை வில்லங்கமாக்கிய அமைச்சர்; லெப்ட் ரைட் வாங்கிய சமந்தா; சப்போர்ட்டுக்கு வந்த நாக சைதன்யா!

First Published Oct 3, 2024, 9:02 AM IST

நடிகை சமந்தாவின் விவாகரத்துக்கு கேடிஆர் காரணம் என புது குண்டை தூக்கிப்போட்ட தெலங்கானா அமைச்சர் சுரேகாவுக்கு நாக சைதன்யா பதிலடி கொடுத்துள்ளார்.

Konda Surekha, Samantha, Naga Chaitanya, KTR

நடிகை சமந்தாவும் நடிகர் நாக சைதன்யாவும் கடந்த 2017-ம் ஆண்டு காதலித்து திருமணம் செய்துகொண்டார்கள். இவர்களது திருமண வாழ்க்கை நான்கே ஆண்டுகளில் முடிவுக்கு வந்தது. இருவருக்கும் இடையே ஏற்பட்ட மனக்கசப்பு காரணமாக கடந்த 2021-ம் ஆண்டு சமந்தாவும், நாக சைதன்யாவும் விவாகரத்து பெற்று பிரிந்தனர். விவாகரத்துக்கு பின்னர் நடிகர் நாக சைதன்யா இரண்டாவது திருமணத்துக்கு தயாராகிவிட்டார்.

அவருக்கும் நடிகை ஷோபிதா துலிபாலாவுக்கும் விரைவில் திருமணம் நடைபெற உள்ளது. அண்மையில் இவர்களுக்கு நிச்சயதார்த்தமும் நடந்து முடிந்தது. இதனிடையே தெலுங்கானாவில் வனத்துறை அமைச்சராக இருக்கும் கொண்டா சுரேகா, அண்மையில் அளித்த பேட்டியில், நடிகை சமந்தாவின் விவாகரத்துக்கு தெலங்கானா முன்னாள் முதல்வர் சந்திரசேகர் ராவின் மகன் கே.டி.ராமாராவ் காரணம் என புது குண்டை தூக்கிப்போட்டிருந்தார்.

Konda Surekha, Samantha

கே.டி.ராமாராவின் அராஜகத்தால் தான் பல நடிகைகள் சினிமாவை விட்டு விலகுகிறார்கள் என்றும், கே.டி.ஆர் நடத்தும் போதை பார்ட்டியில் நடிகைகள் தவறாக பயன்படுத்தப்படுவதாகவும், அவரால் தான் சமந்தாவுக்கு விவாகரத்தே ஆனது எனவும், இது அவரின் குடும்பத்தினருக்கு தெரியும் என்றும் சர்ச்சைக்குரிய வகையில் பேசி இருந்தார். அவரின் பேச்சு பூதாகரமானதை அடுத்து நடிகை சமந்தா மற்றும் நாக சைதன்யா ஆகியோர் பதிலடி கொடுத்துள்ளனர்.

இதையும் படியுங்கள்... 'சமந்தாவின் விவாகரத்துக்கு இது தான் காரணம்' கொளுத்தி போட்ட அமைச்சர்: கொந்தளித்த நாகார்ஜூனா

Latest Videos


Saamntha Statement

இதுகுறித்து சமந்தா போட்டுள்ள பதிவில், கவர்ச்சிகரமான இந்த சினிமா துறையில் ஒரு பெண் தனது இடத்தை தக்கவைப்பது எவ்வளவு கஷ்டம் என்பது உங்களுக்கு தெரியுமா? காதலில் விழுவதும், அதில் இருந்து வெளியே வந்து தனித்து போராடுவது சாதாரண விஷயமில்லை. அதற்கு நிறைய தைரியமும், தன்னம்பிக்கையும் வேண்டும். 

கொண்டா சுரேகா அவர்களே, நான் இந்த பயணத்தில் என்னவாக இருக்கிறேன் என்பதை நினைத்து நான் பெருமைப்படுகிறேன். தயவு செய்து அதை கொச்சைப்படுத்தாதீர்கள். ஒரு அமைச்சராக நீங்கள் கூறிய வார்த்தைகளின் கணம் உங்களுக்கு புரிந்திருக்கும் என நம்புகிறேன். ஒருவரின் தனிப்பட்ட வாழ்க்கை மரியாதை உடனும், பொறுப்புடனும் அனுகுமாறு கேட்டுக்கொள்கிறேன்.

விவாகரத்து எனது தனிப்பட்ட விஷயம், அதில் எங்கள் இருவர் சம்மதத்துடன் தான் நடந்தது. அதில் எந்தவித அரசியலும் இல்லை. உங்கள் அரசியலில் என் பெயரை இழுக்காதீர்கள். நான் எப்போதுமே அரசியலுக்கு அப்பாற்பட்டவர். அதையே தொடர விரும்புகிறேன் என சமந்தா பதிலடி கொடுத்துள்ளார்.

Naga Chaitanya Statement

அதேபோல் நடிகர் நாக சைதன்யா போட்டுள்ள பதிவில், வாழ்க்கையில் விவாகரத்து என்பது மிக வேதனையான மற்றும் துரதிர்ஷ்டவசமான முடிவுகளில் ஒன்றாகும். பல யோசனைகளுக்குப் பிறகு, நானும் எனது முன்னாள் மனைவியும் பிரிந்து செல்லலாம் என ஒரு பரஸ்பர முடிவை எடுத்தோம். மரியாதையுடனும் கண்ணியத்துடனும் முன்னேற வேண்டும் என்பதற்காக நாங்கள் அமைதியான முறையில் எடுத்த முடிவு அது.

இருப்பினும், இந்த விஷயத்தில் பல்வேறு ஆதாரமற்ற கிசுகிசுக்கள் இதுவரை பல வந்துள்ளன. எனது முன்னாள் மனைவி மற்றும் எனது குடும்பத்தினர் மீதுள்ள மரியாதை காரணமாக நான் இதையெல்லாம் பற்றி பேசாமல் அமைதியாக இருந்தேன். அமைச்சர் கொண்டா சுரேகாவின் குற்றச்சாட்டு பொய்யானது மட்டுமல்ல, அது முற்றிலும் கேலிக்குரியது மற்றும் ஏற்றுக்கொள்ள முடியாதது. ஊடக தலைப்புச் செய்திகளுக்காக பிரபலங்களின் தனிப்பட்ட வாழ்க்கை முடிவுகளை சாதகமாக்கி கொள்வதும், அவர்களை சுரண்டுவதும் வெட்கக்கேடானது என சாடி உள்ளார் நாக சைதன்யா.

இதையும் படியுங்கள்... என்னது இந்தியன் 3 தியேட்டரில் ரிலீஸ் ஆகாதா? கமல் படத்தை வைத்து கபடி ஆடும் லைகா!!

click me!