சமந்தாவுக்காக சண்டைக்கு வந்த சைதன்யா! விவாகரத்து விஷயத்தில் அந்தர் பல்டி அடித்த அமைச்சர் கொண்டா சுரேகா!

First Published Oct 3, 2024, 11:33 AM IST

நடிகை சமந்தா மற்றும் நாக சைதன்யா விவாகரத்துக்கு காரணம் கே.டி.ஆர் தான் என அமைச்சர் கொண்டா சுரேகா கூறிய தகவல் பரபரப்பை ஏற்படுத்தியதை தொடர்ந்து, தற்போது அந்தர்பல்டி அடித்துள்ளார்.
 

Samantha And Naga Chaitanya:

தென்னிந்திய திரை உலகில் முன்னணி நடிகையாக இருக்கும் பல்லாவரத்து பெண்ணான சமந்தா, பிரபல தெலுங்கு நடிகர் நாகார்ஜுனாவின் மூத்த மகன் நாக சைதன்யாவை கடந்த 2017 ஆம் ஆண்டு காதலித்து திருமணம் செய்து கொண்டார். திரை உலகமே மெச்சும் அளவுக்கு மிகவும் அந்நியோன்னியமான் ஜோடியாக வலம் வந்த சமந்தா - நாக சைதன்யா ஜோடி மீது... யார் கண் பட்டதோ, இவர்களின் திருமண வாழ்க்கை நான்கே வருடத்தில் முடிவுக்கு வந்தது. இருவரும் பரஸ்பர புரிதலுடன் விவாகரத்து பெற உள்ளதாக கடந்த 2021 ஆம் ஆண்டு, சமூக வலைதளத்தின் மூலம் தெரிவித்தனர்.

சமந்தா - சைதன்யா ஆகிய இருவருமே இதுவரை தங்களுடைய விவாகரத்துக்கான பிரச்சனை குறித்து ஒருமுறை கூட மனம் திறந்து பேசியதே இல்லை. அதேபோல் நாகார்ஜுனா - அமலா ஆகியோர் சமந்தா தங்களின் குடும்பத்தை விட்டு வெளியேறி இருந்தாலும், அவரை தங்களுடைய மகள் போல் பார்ப்பதாக பல பேட்டிகளில் உணர்வு பூர்வமாக பேசியுள்ளனர். 

Samantha And Naga Chaitanya Divorce

சமந்தா விவாகரத்துக்கு பின்னர் மன உளைச்சலில் இருந்து வெளியே வர, ஆன்மீக பயணம் மேற்கொண்ட, சில மாதங்களில் மயோசிட்டிஸ் பிரச்சனையால் பாதிக்கப்பட்டார். கிட்டத்தட்ட ஒரு வருடத்திற்கு மேல் எழுந்து கூட நிற்க முடியாமல் கஷ்டப்பட்ட சமந்தா, பின்னர் மெல்ல மெல்ல மயோசிட்டிஸ் பிரச்சனையை எதிர்கொண்டு... அதை வென்று.  மீண்டும் படபிடிப்புகளில் கவனம் செலுத்த துவங்கினார். தென் இந்திய திரையுலகை  தாண்டி, ஹாலிவுட் வெப் சீரியஸ் மற்றும் சில பாலிவுட் படங்களிலும் நடிக்க முயற்சி செய்து வருகிறார்.

சமந்தாவின் முன்னாள் கணவரான சைதன்யா, தற்போது தனது இரண்டாவது திருமணத்திற்கு தயாராகி உள்ளார். அதன்படி இவர் கடந்த இரண்டு வருடமாகவே பொன்னியின் செல்வன் பட நடிகை சோபிதா துலிபாலாவுடன் டேட்டிங் செய்து வந்த நிலையில், ஓரிரு மாதத்திற்கு முன் இவர்களுக்கு எளிமையான முறையில் திருமண நிச்சயதார்த்தம் நடந்து முடிந்தது. மேலும் இவர்களுடைய திருமணம் அடுத்த ஆண்டு மார்ச் மாதம் நடைபெற உள்ளதாக கூறப்படுகிறது.

விவாகரத்தை வில்லங்கமாக்கிய அமைச்சர்; லெப்ட் ரைட் வாங்கிய சமந்தா; சப்போர்ட்டுக்கு வந்த நாக சைதன்யா!

Latest Videos


Konda Surekha

இந்நிலையில் சமந்தா மற்றும் நாக சைதன்யா விவாகரத்து குறித்து பேட்டி ஒன்றில் பேசிய தெலுங்கானாவின் வனத்துறை அமைச்சர் பொண்டா சுரேகா, இவர்களின் விவாகரத்து காரணம் முன்னாள் முதல்வர் சந்திரசேகர் ராவின் மகன் கே டி ராமராவ் என கூறி பரபரப்பை ஏற்படுத்தினார். இந்த தகவல் தீயாக பரவிய நிலையில், திரையுலகினர் மத்தியிலும் பேசு பொருளாக மாறியது. சமூக வலைதளங்களில் தங்களைப் பற்றிய வதந்திகள் வந்தால் கடந்து போகும் சமந்தா - சைதன்யா ஜோடி அமைச்சரின் இந்த கருத்துக்கு ஒன்றாக சேர்ந்து தங்களுடைய எதிர்ப்பை தெரிவித்தனர்.  சமந்தா தன்னுடைய பதிவில்.. "கவர்ச்சிகரமான இந்த திரைத்துறையில், ஒரு பெண் அவளுக்கான இடத்தை தக்க வைத்துக் கொள்வது மிகவும் கடினமான ஒன்று என்பது உங்களுக்கு தெரியும் என நம்புகிறேன். காதலில் விழுவதும் அதில் இருந்து வெளியேறி போராடுவது என்பது சாதாரண விஷயம் அல்ல, அதற்கு நிறைய தைரியமும் தன்னம்பிக்கையும் வேண்டும்.
 

Naga Chaitanya Support Samantha

என்னுடைய இந்த பயணத்தில் நான் எப்படி இருக்கிறேன் என்பதை நினைத்து பெருமைப்படுகிறேன். தயவு செய்து அதை கொச்சை படுத்தாதீர்கள் கொண்டா சுரேஷ் அவர்களே, நீங்கள் கூறிய வார்த்தையின் கணம் உங்களுக்கு புரிந்திருக்கும் என நம்புகிறேன்.  அதே போல் என்னுடைய விவாகரத்து என்னுடைய தனிப்பட்ட விஷயம். அது எங்கள் இருவரின் சம்மதத்தோடு நடந்தது. உங்கள் அரசியலில் எங்களுடைய பெயர்களை  இழுக்க வேண்டாம் என கூறி பதிலடி கொடுத்தார்.

சமந்தாவுக்கு ஆதரவாக இந்த விஷயத்தில் வரிந்து கட்டிய சைதன்யா, "தங்களுடைய விவாகரத்து என்பது துரதிஷ்டவசமான ஒரு முடிவு. இது எங்களுடைய தனிப்பட்ட முடிவு. எனது முன்னாள் மனைவி மற்றும் என் குடும்பத்தினர் மீதுள்ள மரியாதை காரணமாக நான் இதைப் பற்றி பேசாமல் அமைதியாக இருந்தேன். ஆனால் அமைச்சர் கொண்டா சுரேகாவின் குற்றச்சாட்டு உண்மைக்கு புறம்பானது மற்றும் கேலிக்குரியது. இதை ஒருபோதும் ஏற்றுக் கொள்ள முடியாது. ஊடகத்தின் தலைப்புச் செய்திக்காக பிரபலங்களின் தனிப்பட்ட வாழ்க்கை பற்றி பேசுவது வெட்கக்கேடானது என கூறினார்.

குக் வித் கோமாளியை இழுத்து மூடிவிட்டு விஜய் டிவி தொடங்கும் புது குக்கிங் ஷோ

Konda Surekha Apologies

இந்த விவகாரம் தற்போது பற்றி எரிந்து வரும் நிலையில், தற்போது கொண்டா சுரேஷ் தன்னுடைய கருத்துக்கு பகிரங்கமாக மன்னிப்பு கேட்டுள்ளார். மேலும் இந்த சம்பவம் குறித்து, அவர் கூறியுள்ளதாவது .. "என்னுடைய நோக்கம் ஒரு தலைவர் பெண்களை இழிவு படுத்துவதை தட்டிக் கேட்பதை தவிர, பிறருடைய உணர்வுகளை புண்படும் படி பேச வேண்டும் என்பது கிடையாது. சமந்தா நீங்கள் தன்னம்பிக்கையுடன் வளர்ந்த விதம் குறித்து நான் அறிவேன். நான் பேசிய கருத்துக்களை எவ்வித நிபந்தனையும் இன்றி வாபஸ் பெறுகிறேன் என அப்படியே அந்தர் பல்டி அடித்துள்ளார்.

click me!