கோட் முதல் போட் வரை; ஓடிடியில் இந்த வாரம் ஸ்பெஷல் ரிலீஸ் என்னென்ன? முழு லிஸ்ட் இதோ

First Published | Oct 3, 2024, 1:32 PM IST

This Week OTT release Tamil Movies : விஜய்யின் கோட் முதல் யோகிப்பாபு நடித்த போட் வரை அக்டோபர் 4ந் தேதி ஓடிடியில் ரிலீசாகும் தமிழ் படங்கள் லிஸ்ட் இதோ.

OTT Release Movies

ரஜினிகாந்த் நடித்துள்ள வேட்டையன் திரைப்படம் வருகிற அக்டோபர் 10-ந் தேதி ரிலீஸ் ஆவதால் இந்த வாரம் பெரிய படங்கள் எதுவும் ரிலீஸ் ஆகவில்லை. தியேட்டரில் தான் இந்த நிலைமை, ஆனால் ஓடிடியில் இந்த வாரம் தளபதி விஜய் நடித்த கோட் திரைப்படம் ரிலீஸ் ஆகி உள்ளது. அதுதவிர என்னென்ன படங்களெல்லாம் ஓடிடியில் ரிலீஸ் ஆகிறது என்பதை இந்த தொகுப்பில் பார்க்கலாம்.

GOAT

கோட்

வெங்கட் பிரபு இயக்கத்தில் விஜய், பிரபுதேவா, பிரசாந்த், சினேகா, லைலா, மீனாட்சி செளத்ரி, வைபவ், பிரேம்ஜி நடிப்பில் கடந்த செப்டம்பர் 5ந் தேதி தியேட்டரில் ரிலீஸ் ஆன படம் கோட், திரையரங்குகளில் சக்கைப்போடு போட்ட இப்படம் பாக்ஸ் ஆபிஸில் ரூ.450 கோடிக்கு மேல் வசூலித்து மாஸ் காட்டியது. இந்த நிலையில், கோட் திரைப்படம் தற்போது ஓடிடிக்கு வந்துள்ளது. அதன்படி அப்படம் இன்று (அக்டோபர் 3) நெட்பிளிக்ஸ் ஓடிடி தளத்தில் ரிலீஸ் ஆகி உள்ளது.

Tap to resize

BOAT

போட்

யோகிபாபு கதையின் நாயகனாக நடித்து கடந்த ஆகஸ்ட் மாதம் தியேட்டரில் ரிலீஸ் ஆன திரைப்படம் போட். சரித்திர கதையம்சம் கொண்ட இப்படத்தை ஒரே படகில் நடக்கும்படியாக எடுத்திருந்தார் இயக்குனர் சிம்புதேவன். இப்படத்தில் யோகிபாபு உடன் கெளரி கிஷான், பிக்பாஸ் மதுமிதா, எம்.எஸ்.பாஸ்கர், சின்னி ஜெயந்த் ஆகியோர் நடித்திருந்தனர். இப்படம் அக்டோபர் 1-ந் தேதி முதல் அமேசான் பிரைம் ஓடிடி தளத்தில் ஒளிபரப்பாகி வருகிறது.

இதையும் படியுங்கள்... மங்களகரமா மஞ்சள்ல ஆரம்பித்த அனிதா விஜயகுமார்! கண்ணைகவரும் நவராத்திரி கிளிக்ஸ் இதோ

Deadpool and wolverine

ஆங்கிலப் படங்கள்

டெட்பூல் மற்றும் வால்வரின் திரைப்படம் இந்த வாரம் அமேசான் பிரைம் மற்றும் ஆப்பிள் டிவி தளங்களில் ரிலீஸ் ஆகி உள்ளது. இதுதவிர நெட்பிளிக்ஸில் Love Is Blind  வெப் தொடரின் 7வது சீசன் வெளியாகி இருக்கிறது. மேலும் Heart stopper என்கிற வெப்தொடரின் மூன்றாவது சீசன் இன்று நெட்பிளிக்ஸில் ரிலீஸ் ஆகி உள்ளது. இதுமட்டுமின்றி House Of Spoils என்கிற படம் அமேசான் பிரைமிலும், Hold Your Breath திரைப்படம் ஹுலுவிலும், SalemsLot HBO மேக்ஸிலும் இன்று ரிலீஸ் ஆகி உள்ளது. அக்டோபர் 4ந் தேதி Finally Dawn திரைப்படம் Lion Gate Play ஓடிடி தளத்திலும், Its Whats Inside நெட்பிளிக்ஸிலும், The Tribe அமேசான் பிரைமிலும் ரிலீசாகிறது.

The Signature

மற்ற மொழி படங்கள்

தெலுங்கில் நிவேதா தாமஸ் நடித்த 35 திரைப்படம் ஆஹா ஓடிடி தளத்தில் ரிலீஸ் ஆகி உள்ளது. அதோடு கலிங்கா, பாலு கானி டாக்கீஸ் ஆகிய தெலுங்கு படங்களும் ஆஹா ஓடிடி தளத்தில் அக்டோபர் 4ந் தேதி ரிலீஸ் ஆக உள்ளன. இந்தியில் Ctrl நெட்பிளிக்ஸிலும், கூகி அமேசான் பிரைமிலும், தி சிக்னேச்சர் ஜீ5 ஓடிடி தளத்திலும் ரிலீஸ் ஆக உள்ளது. 

இதையும் படியுங்கள்... சமந்தாவுக்காக சண்டைக்கு வந்த சைதன்யா! விவாகரத்து விஷயத்தில் அந்தர் பல்டி அடித்த அமைச்சர் கொண்டா சுரேகா!

Latest Videos

click me!