விபத்தில் சிக்கி காயங்களுடன் உயிர் தப்பிய பிரியங்கா மோகன்! என்ன ஆச்சு?

Published : Oct 03, 2024, 05:05 PM IST

நடிகை பிரியங்கா மோகன், தொரூரில் கலந்து கொண்ட நிகழ்ச்சியின் போது விபத்தில் சிக்கியதாக சமூக வலைத்தளத்தில் பரபரப்பு பதிவு ஒன்றை போட்டுள்ளார்.  

PREV
15
விபத்தில் சிக்கி காயங்களுடன் உயிர் தப்பிய பிரியங்கா மோகன்! என்ன ஆச்சு?
Priyanka Mohan

தமிழ் சினிமாவில் தொடந்து முன்னணி நடிகர்களுக்கு ஜோடியாக நடித்து வரும் பிரியங்கா மோகன், முதலில் அறிமுகமானது தெலுங்கு மொழி படங்களில் தான். நடிகர் நானி நடிப்பில் வெளிவந்த கேங் லீடர் படத்தில் ஹீரோயினாக அறிமுகமான பிரியங்கா மோகனை, தமிழ் திரையுலகின் பக்கம் கொண்டு வந்தவர் இயக்குனர் நெல்சன் திலீப் குமார்.

25
Priyanka Mohan Movies

2021-ஆம் ஆண்டு சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக, நெல்சன் இயக்கிய 'டாக்டர்' படத்தில் ஹீரோயினாக நடித்தார் பிரியங்கா. முதல் படத்திலேயே தன்னுடைய துள்ளலான ஆட்டத்தாலும், கியூட் நடிப்பாலும் தமிழ் ரசிகர்கள் மனதை கொள்ளை கொண்ட, பிரியங்கா மோகன்.. டாக்டர் படத்தின் வெற்றியை தொடர்ந்து மீண்டும் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக, டான் படத்தில் நடித்தார். இந்த இரண்டு படங்களுமே அடுத்தடுத்து வெற்றி வாகை சூடியது.

அஜித்தின் 'குட் பேட் அக்லி' படத்தில் தல-க்கு வில்லனாகும் பிரபல ஹீரோ!
 

35
Priyanka Mohan upcoming movies

இதை தொடர்ந்து,. சூர்யாவுக்கு ஜோடியாக நடித்த 'எதற்கும் துணிந்தவன்' திரைப்படம், மிகப்பெரிய எதிர்பார்ப்புக்கு மத்தியில் வெளியான போதிலும், மோசமான தோல்வியை சந்தித்தது. தெலுங்கில் மாடர்ன் உடையில் மயக்கும் ஹீரோயினாக பிரியங்கா மோகன் நடித்தாலும், தமிழில் தொடர்ந்து ஹோம்லி ரோல்களில் நடித்து வருகிறார். அதே போல் முன்னணி படங்களில் நடிகர்கள் படங்களில் மட்டுமே இவர் நடிக்க சம்மதிப்பதாக கூறப்படுகிறது.

45
Priyanka Mohan next tamil release is brother

கடைசியாக, தனுஷுக்கு ஜோடியாக இவர் நடித்த கேப்டன் மில்லர் திரைப்படம் வெளியான நிலையில், வரும் தீபாவளிக்கு பிரியங்கா  மோகன் - ஜெயம் ரவிக்கு ஜோடியாக நடித்துள்ள பிரதர் திரைப்படம் வெளியாக உள்ளது. இதை தவிர பவன் கல்யாணுக்கு ஜோடியாக ஓஜி என்கிற படத்திலும் பிரியங்கா மோகன் நடித்துள்ளார். 

எதிர்நீச்சல் நாயகி மதுமிதாவுக்கு திருமணமா? சோகமான விஷயத்துடன்.. அவரே கூறிய ஹாப்பி நியூஸ்!
 

55
Priyanka Mohan met accident

இந்நிலையில் இவர் விபத்தில் சிக்கியதாக, சமூக வலைதளத்தில் போட்டுள்ள பதிவு அவரது ரசிகர்கள் மத்தியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதுகுறித்து அவர் கூறியுள்ளதாவது, "இன்று தொரூரில் பிரியங்கா மோகன் கலந்து கொண்ட ஒரு நிகழ்வில், நடந்த விபத்தில், நான் நலமாக இருக்கிறேன். சிறு காயங்களுடன் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பியுள்ளேன் என்பதை எனது நலம் விரும்பிகளுக்கு தெரிவிக்க விரும்பினேன். என கூறியுள்ளார். இதை தொடர்ந்து ரசிகர்கள் மாறி மாறி... பிரியங்காவின் நலனை விசாரித்து வருகிறார்கள்.
 

Read more Photos on
click me!

Recommended Stories