
இணை பிரியாமல் வாழ கூடிய அன்றில் பறவை பற்றி கேள்வி பட்டிருக்கிறீர்களா? இந்த பறவை தன்னுடைய பருவ வயதில் தனக்கான இணையை கண்டு பிடித்து... எப்போதும் தன்னுடைய இணையுடன் மட்டுமே இருக்கும். எனவே இந்த பறவையை காதல் பறவை என சங்க கால பாடல்களில் வர்ணித்து கூறுவது உண்டு. இந்த அன்றில் பறவையின் பெயரை வாலி, கண்ணதாசன், வைரமுத்து, நா முத்துகுமார் என 10 பாடலாசிரியர்கள் போட்டி போட்டு பயன்படுத்தியுள்ளனர்.
1990- ஆம் ஆண்டு, இயக்குனர் அமிர்தம் இயக்கத்தில் வெளியான திரைப்படம் 'சிறையில் பூத்த சின்ன மலர்'. விஜயகாந்த் நடித்திருந்த இந்த படத்தில், அவருக்கு ஜோடியாக பானுபிரியா நடித்திருந்தார். இந்த படத்தில் வாலியின் வரிகளில், இளையராஜா இசையில் "அதிசய நடனமிடும் அபிநய சரஸ்வதியோ.." என்கிற பாடலில் . "அன்றில் ரெண்டு ஒன்றை ஒன்று அட்டைப்போல ஒட்டிக்கொண்டு.. இன்று காணும் இன்பம் நிறம் மாறாதது.. என்கிற வரிகள் இடம்பெற்றிருக்கும்.
அதே போல் 1997-ஆம் ஆண்டு, இயக்குனர் ஷங்கர் இயக்கத்தில் பிரஷாந்த் இரட்டை வேடங்களில் நடித்து வெளியான திரைப்படம், ஜீன்ஸ். இந்த படத்தில் வைரமுத்து வரிகளில், ஏ.ஆர்.ரகுமான் இசையில் இடம்பெற்ற "கண்ணோடு காண்பதெல்லாம்.." பாடலில் "அன்றில் பறவை இரட்டைப் பிறவி... ஒன்றில் ஒன்றாய் வாழும் பிறவி... பிரியாதே விட்டுப் பிரியாதே.." என்கிற வரிகள் இடம்பெற்றிருக்கும்.
இயக்குனர் ஜோதி கிருஷ்ணா இயக்கத்தில் , 2003-ஆம் ஆண்டு வெளியான திரைப்படம் 'எனக்கு 20 உனக்கு 18'. தருண் ஹீரோவாக நடித்திருந்த இந்த படத்தில், திரிஷா ஹீரோயினாக நடிக்க, ஸ்ரேயா சரண் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். இந்த படத்தில் பா.விஜய் வரிகளில், ஏ.ஆர்.ரகுமான் இசையில் இடம்பெற்ற, "அழகினா அழகி.." என தொடங்கும் பாடலில், .. அற்றை திங்களில் அன்றில் பறவையாய் ஓடிப் போக நீயும்.. என்கிற வரிகளை எழுதி இருப்பர்.
விபத்தில் சிக்கி காயங்களுடன் உயிர் தப்பிய பிரியங்கா மோகன்! என்ன ஆச்சு?
அதே போல் இயக்குனர் கெளதம் மேனன் இயக்கத்தில், 2007-ஆம் ஆண்டு வெளியான பச்சைக்கிளி முத்துச்சரம் படத்தில், கவிஞர் தாமரை, ஹாரிஸ் ஜெயராஜ் இசையில் எழுதிய "கரு கரு விழிகளால்.." என துவங்கும் பாடலில் "தாமரை இலை நீர் நீ தானா.. தனி ஒரு அன்றில் நீ தானா... புயல் தரும் தென்றல் நீ தானா.. புதையல் நீ தானா.." என்கிற வரிகளை எழுதி இருப்பார்.
இதை தொடர்ந்து இயக்குனர் ஷங்கர் இயக்கத்தில், சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் 2007-ஆம் ஆண்டு வெளியான சிவாஜி படத்தில், வைரமுத்து வரிகளில்.. ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்த "அதிரடிக்காரன் மச்சான்.." என தொடங்கும் பாடலில். தில் திக் தில் தென்றல் நெஞ்சில் தித்திக்கிற அன்றில் குஞ்சில்.. என்கிற வரிகளை எழுதி இருப்பார்.
அஜித்தின் 'குட் பேட் அக்லி' படத்தில் தல-க்கு வில்லனாகும் பிரபல ஹீரோ!
இயக்குனர் ஜீவா இயக்கத்தில், 2008-ஆம் ஆண்டு வெளியான திரைப்படம் தாம் தூம். ஜெயம் ரவி நடிப்பில் வெளியான இந்த படத்தில், கவிஞர் நா. முத்துக்குமார் எழுதி ஹாரிஸ் ஜயராஜ் இசையில் "அன்பே என் அன்பே.." துவங்கும் பாடலில், .. அன்றில் அடை மழைக்காலம் இனி அருகினில் வசப்படும் சுகம் சுகம்.. என்கிற வரிகளை எழுதி இருப்பர்.
இயக்குனர் கோகுல் இயக்கத்தில், ஜீவா நடிப்பில் 2011-ஆம் ஆண்டு வெளியான திரைப்படம் ரௌத்திரம். இந்த படத்தில், லலிதா ஆனந்த் எழுதி, பிரகாஷ் நிக்கி இசையமைத்த... "அடியே உன் கண்கள்.." என துவங்கும் பாடலில், .. அடியோடு எனை சாய்த்த அன்றில் பெண்ணே வா.. ஆசை மெய்யா பொய்யா நீ சோதிக்க.. என்கிற வரிகளை எழுதி இருப்பார்.
அதே போல், இயக்குனர் ராஜா இயக்கத்தில்... 2012 ஆம் ஆண்டு வெளியான திரைப்படம் உயிர்மொழி. இந்த படத்தில் அருண்ராஜா காமராஜ் பாடல் வரிகளில், சந்தோஷ் நாராயணன் இசையில் இடம்பெற்ற "அன்றில் பறவை நானடி.." என் துவனும் பாடலில் .. அன்றில் பறவை நானடி.. அண்டம் அதிரும் தானடி.. என்கிற வார்திகள் பாடலின் துவக்கத்திலேயே இடம்பெற்றிருக்கும்.
இயக்குனர் யுவராஜ் போஸ் இயக்கத்தில், அதர்வா நடித்திருந்த திரைப்படம் இரும்பு குதிரை, 2014-ஆம் ஆண்டு வெளியான இந்த படத்தில், தாமரை பாடல் வரிகளில்... ஜிவி பிரகாஷ் குமார் இசையில் இடம்பெற்ற... "பெண்ணே பெண்ணே.." என துவங்கும் பாடலில், "பெண்ணே பெண்ணே அலைகிறேன் அன்றிலாகி அழுகிறேன்.." என்கிற வார்த்தையை பயன்படுத்தி இருப்பர்.
எதிர்நீச்சல் நாயகி மதுமிதாவுக்கு திருமணமா? சோகமான விஷயத்துடன்.. அவரே கூறிய ஹாப்பி நியூஸ்!
மேலும் இயக்குனர் செல்வராகவன் இயக்கத்தில், சூர்யா நடிப்பில் 2019-ஆம் ஆண்டு வெளியான என்.ஜி.கே. படத்தில் உமா தேவி பாடல் வரிகளில், யுவன் ஷங்கர் ராஜா இசையில் இடம்பெற சூப்பர் ஹிட் பாடலான "அன்பே பேரன்பே.." என துவங்கும் பாடலில் "உறவே நம் உறவே ஒரு அனுவின் பிரிவில் அன்றில் ஆகுதே ஆகுதே.." என குறிப்பிட்டிருப்பார். இதன் மூலம் அன்றில் என்கிற அந்த அபூர்வ பறவையை நம் கவிஞர்கள் எப்படி பாடல்களில் பயன்படுத்தி உள்ளார்கள் என்பதை புரிந்து கொள்ள முடிகிறது.