தென்னிந்திய திரையுலகில், தன்னுடைய எதார்த்தமான நடிப்பால் பல ரசிகர்கள் மனதை மயக்கியவர் நடிகை சௌந்தர்யா. பெங்களூரை சேர்ந்த நடிகை சொந்தர்யா தன்னுடைய 20 வயதில், அதாவது 1992-ஆம் ஆண்டு Gandharva என்கிற படத்தின் மூலம் அறிமுகமானவர். இந்த படத்தின் வெற்றியை தொடர்ந்து, அடுத்தடுத்து, தமிழ், தெலுங்கு ஆகிய மொழிகளில் நடிக்க துவங்கினார்.
குறிப்பாக தமிழில் இயக்குனர் ஆர்.வி.உதயகுமார் இயக்கத்தில் 1993-ஆம் ஆண்டு வெளியான, பொன்னுமணி படத்தில் நவரச நாயகன் கார்த்திக்கிற்கு ஜோடியாக நடித்தார். முதல் படத்திலேயே தமிழ் ரசிகர்களின் ஃபேவரட் நாயகியாக மாறிய சௌந்தர்யா, இதை தொடர்ந்து முத்து காளை, சேனாதிபதி, அருணாச்சலம், காதலா காதலா, மன்னவரு சின்னவரு, சொக்க தங்கம், படையப்பா உள்ளிட்ட பல படங்களில் முன்னணி நடிகர்களுக்கு ஜோடியாக நடித்தார்.