பிக்பாஸ் வருகையால் அதிரடியாக மாற்றப்படும் 5 விஜய் டிவி சீரியல் டைமிங்!

First Published | Oct 4, 2024, 8:45 AM IST

பிக்பாஸ் நிகழ்ச்சியின் 8வது சீசன் வருகிற அக்டோபர் 6-ந் தேதி தொடங்கப்பட உள்ள நிலையில், 5 விஜய் டிவி சீரியல்களின் நேரம் மாற்றப்பட்டு உள்ளது.

Vijay tv serial Timing Changed

விஜய் டிவியில் டிஆர்பி-யில் சக்கைபோடு போடும் ரியாலிட்டி ஷோ என்றால் அது பிக்பாஸ் தான். இந்நிகழ்ச்சி கடந்த 7 ஆண்டுகளாக நடத்தப்பட்டு வருகிறது. இதுவரை 7 சீசன்கள் முடிவடைந்து உள்ள பிக்பாஸ் நிகழ்ச்சியின் 8-வது சீசன் வருகிற அக்டோபர் 6-ந் தேதி ஒளிபரப்பாக உள்ளது. இதுவரை நடந்து முடிந்த 7 சீசன்களை கமல்ஹாசன் தொகுத்து வழங்கி வந்த நிலையில், இந்த சீசனில் இருந்து அவர் விலகியதால் அவருக்கு பதில் விஜய் சேதுபதி தொகுப்பாளராக களமிறங்கி உள்ளார்.

Bigg Boss Tamil season 8

பிக்பாஸ் நிகழ்ச்சி வழக்கமாக தினந்தோறும் இரவு 9.30 மணிக்கு ஒளிபரப்பாகும். பிக்பாஸ் நிகழ்ச்சியின் வருகையால் தற்போது விஜய் டிவி சீரியல்களின் நேரம் அதிரடியாக மாற்றப்பட்டு உள்ளது. அந்த வகையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் மகாநதி, சின்ன மருமகள், நீ நான் காதல், பனிவிழும் மலர்வனம், வீட்டுக்கு வீடு வாசப்படி போன்ற சீரியல்களின் ஒளிபரப்பு நேரம் அதிரடியாக மாற்றப்பட்டு இருக்கிறது. அதன் புது ஒளிபரப்பு நேரம் என்ன என்பதை பார்க்கலாம்.

இதையும் படியுங்கள்... மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ் ஆனார் ரஜினிகாந்த்! கூலி ஷூட்டிங்கில் கலந்துகொள்வது எப்போது?

Tap to resize

mahanadhi serial timing changed

விஜய் டிவியில் மாலை நேரத்தில் ஒளிபரப்பாகி வந்த பனி விழும் மலர்வனம் மற்றும் வீட்டுக்கு வீடு வாசப்படி ஆகிய சீரியல்கள் தற்போது மதியநேரத்துக்கு மாற்றப்பட்டு உள்ளது. அதன்படி பனி விழும் மலர்வனம் சீரியல் மாலை 6 மணியில் இருந்து மதியம் 1 மணிக்கு மாற்றப்பட்டு இருக்கிறது. அதேபோல் மாலை 6.30 மணிக்கு ஒளிபரப்பாகி வந்த வீட்டுக்கு வீடு வாசப்படி சீரியல் வருகிற அக்டோபர் 7-ந் தேதியில் இருந்து மதியம் 3.30 மணிக்கு ஒளிபரப்பாகும் என அறிவிக்கப்பட்டு உள்ளது.

chinna marumagal serial timing

இரவு 9.30 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் சின்னமருமகள் தொடர் இனி மாலை 7 மணிக்கும், 7 மணிக்கு ஒளிபரப்பாகி வந்த மகாநதி சீரியல் இனி மாலை 6.30 மணிக்கும், இரவு 10 மணிக்கு ஒளிபரப்பாகி வந்த நீ நான் காதல் சீரியல் இனி மாலை 6 மணிக்கும் ஒளிபரப்பாகும் என அறிவிக்கப்பட்டு உள்ளது. பிக்பாஸ் வருகையால் இந்த 5 சீரியல்களும் வருகிற அக்டோபர் 7-ந் தேதி திங்கட்கிழமை முதல் புதிய நேரத்தில் ஒளிபரப்பாகும் என அறிவிக்கப்பட்டு உள்ளது. 

இதையும் படியுங்கள்... கூலி படத்தால் தாமதமாகுமா கைதி 2? இடையில் உதயநிதி பட இயக்குனருடன் கைகோர்க்கும் கார்த்தி!

Latest Videos

click me!