அது தான் ஏற்கனவே அவர் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ள இரண்டு திரைப்பட பணிகளை முடித்த பிறகு, தன்னுடைய கலை பயணத்திலிருந்து முற்றிலும் விலகி, முழு நேர அரசியல் தலைவராக பயணிக்க உள்ளதாக அவர் வெளியிட்ட அறிவிப்பு. அவரை அரசியல் ரீதியாக பின் தொடரும் பலருக்கும் மிகப்பெரிய உத்வேகம் அளித்த ஒரே விஷயம் இதுவென்றால் அது மிகையல்ல. உண்மையில் தமிழ் சினிமாவை பொறுத்தவரை 150 கோடி ரூபாய்க்கு மேல் சம்பளம் வாங்கும் உச்ச நடிகராக அவர் பயணித்து வந்த இந்த நேரத்தில், சினிமாவை விட்டு விலகுவது உண்மையில் மிகப்பெரிய முன்னெடுப்பாக பார்க்கப்படுகிறது.
தனது த.வெ.க கட்சியின் பொதுச் செயலாளராக, தனக்கு வலதுகரமாக செயல்பட்டு வந்த புஷி ஆனந்தை தளபதி விஜய் நியமித்துள்ள நிலையில், இன்று மாநாட்டிற்கான பந்தக்கால் நடும் விழா, 3 மதங்களையும் ஒன்றிணைத்து சம்பிரதாயங்களை கடைபிடித்து நடத்தப்பட்டது. ஏற்கனவே இந்த மாநாட்டில் பங்கேற்க வரும் தங்களுடைய கட்சியினருக்கு தேவையான அறிவுரைகளை தொடர்ச்சியாக அக்கட்சி வழங்கி வருவதும் குறிப்பிடத்தக்கது. இது குறித்த ஒரு அறிவிப்பு ஒன்றையும் நேற்று அக்கட்சிய தலைவர் தளபதி விஜய் வெளியிட்டு இருந்தார்.