தளபதி விஜயின் "மாஸ்டர்" பட வெற்றிக்கு பிறகு, உலகநாயகன் கமல்ஹாசனோடு இணைந்து மிகப்பெரிய கமர்சியல் வெற்றி திரைப்படத்தை கொடுத்தார் லோகேஷ் கனகராஜ். அதை தொடர்ந்து மீண்டும் "லியோ" என்கின்ற திரைப்படத்தில் தளபதியின் விஜயுடன் அவர் இணைந்தார். அதுவே தளபதி விஜய்யோடு அவர் இணைந்து பயணித்த இறுதி படமாக தற்பொழுது மாறி உள்ளது குறிப்பிடத்தக்கது. "லியோ" திரைப்பட பணிகளை முடித்த லோகேஷ் கனகராஜ், அடுத்தபடியாக சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தை "கூலி" என்ற திரைப்படத்தில் இயக்க தயாரானார்.
அண்மையில் தான் இந்த திரைப்படத்தில் நடிக்கின்ற கதாபாத்திரங்கள் குறித்த அறிவிப்பும் வெளியானது. கன்னட திரை உலகிற்கிலிருந்து உபேந்திரா, மலையாள திரை உலகில் இருந்து சௌபின் சாஹிர், தெலுங்கு திரை உலகில் இருந்து நாகர்ஜுன், தமிழ் திரை உலகில் இருந்து சத்யராஜ் என்று பல முன்னணி நடிகர்கள் இந்த திரைப்படத்தில் நடித்து வருகின்றனர். முக்கியமான கதாபாத்திரத்தில் நடிகை சுருதிகாசனும் இந்த திரைப்படத்தில் இணைந்திருப்பது குறிப்பிடத்தக்கது.