Dare Devil : அஜித்தின் டேர் டெவில் படத்தில் இருந்து விலகிய மோகன்லால்... அவருக்கு பதில் இவரா?

Published : Sep 18, 2026, 01:09 PM IST

Dare Devil Movie update : ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் அஜித் குமார் நடிக்க உள்ள டேர் டெவில் திரைப்படத்தில் இருந்து நடிகர் மோகன்லால் விலகி உள்ளாராம். அதைப்பற்றி பார்க்கலாம்.

PREV
14
Ajith Next Movie Dare Devil

சினிமாவுக்கு இணையாக கார் பந்தயத்திலும் ஆர்வம் கொண்ட அஜித், ‘குட் பேட் அக்லி’ படத்துக்குப் பிறகு சர்வதேச மோட்டார் ஸ்போர்ட்ஸ் போட்டிகளில் மீண்டும் கவனம் செலுத்தி வருகிறார். தனது ‘அஜித்குமார் ரேசிங்’ அணியின் மூலம் சர்வதேச போட்டிகளில் பங்கேற்று வரும் அவர், தற்போது லண்டனில் நடைபெறும் கார் பந்தயப் போட்டிகளிலும் கவனம் செலுத்தி வருகிறார். இந்தப் போட்டிகள் நிறைவடைந்த பிறகு, திரைப்பட பணிகளில் அஜித் தீவிரமாக ஈடுபடுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.

இதனிடையே, அஜித்தின் கார் பந்தயப் பயணத்தை மையமாகக் கொண்டு உருவாகியுள்ள ‘கிளாடியேட்டர்ஸ்’ என்ற ஆவணப்படமும் விரைவில் வெளியாக உள்ளது. இந்த ஆவணப்படத்தை இயக்குநர் ஏ.எல். விஜய் இயக்கியுள்ள நிலையில், ஜி.வி. பிரகாஷ் இசையமைத்துள்ளார்.

Vijay - Ajith : லண்டனை ஸ்தம்பிக்க வைத்த தல - தளபதி... அஜித்தை பார்த்ததும் ஓடோடி வந்து கட்டிப்பிடித்த விஜய் - வைரலாகும் வீடியோ

24
ஆதிக் ரவிச்சந்திரனுடன் மீண்டும் இணையும் அஜித்

‘குட் பேட் அக்லி’ திரைப்படத்தைத் தொடர்ந்து இயக்குநர் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் அஜித் மீண்டும் நடிக்கிறார். அஜித்தின் 64-வது படமாக உருவாகும் இந்தப் படத்திற்கு ‘டேர் டெவில்’ என தலைப்பு வைக்கப்பட்டுள்ளது. பிரேவ் ஹார்ட்ஸ் புரொடக்‌ஷன்ஸ் என்ற தயாரிப்பு நிறுவனத்தின் கீழ் ஷாலினி அஜித்குமார் இப்படத்தைத் தயாரிக்கிறார். படத்திற்கு அனிருத் இசையமைக்கிறார். பல மாதங்களாக ரசிகர்கள் எதிர்பார்த்து வந்த நிலையில், ‘டேர் டெவில்’ படத்தின் அதிகாரப்பூர்வ அறிவிப்பு சமீபத்தில் வெளியானது. இது அஜித் ரசிகர்களிடம் பெரும் உற்சாகத்தை ஏற்படுத்தியிருந்தாலும், படப்பிடிப்பு எப்போது தொடங்கும் என்பது குறித்து இதுவரை தெளிவான தகவல் வெளியாகாமல் இருந்தது.

34
படப்பிடிப்பு எப்போ தொடங்கும்?

இந்த நிலையில், இயக்குநர் ஆதிக் ரவிச்சந்திரன் படத்தின் படப்பிடிப்பு தொடர்பான முக்கிய அப்டேட்டை வெளியிட்டுள்ளார். அதன்படி, ‘டேர் டெவில்’ படத்தின் படப்பிடிப்பு நவம்பர் 2-ம் தேதி தொடங்கவுள்ளது. மேலும், இந்தப் படப்பிடிப்பு தொடக்கம் தனக்கு நடிகர் அஜித்குமார் வழங்கிய பிறந்தநாள் பரிசு போன்றது என்றும் ஆதிக் ரவிச்சந்திரன் தெரிவித்துள்ளார். இதனால் அஜித் ரசிகர்கள் மத்தியில் படத்தின் மீதான எதிர்பார்ப்பு மேலும் அதிகரித்துள்ளது. அஜித் – ஆதிக் ரவிச்சந்திரன் கூட்டணியில் உருவாகும் ‘டேர் டெவில்’ திரைப்படத்தின் படப்பிடிப்பு தொடங்கியதும், படத்தின் கதைக்களம், நடிகர்கள் மற்றும் படப்பிடிப்பு தளங்கள் குறித்த அடுத்தடுத்த அப்டேட்கள் வெளியாகும் என ரசிகர்கள் எதிர்பார்த்து வருகின்றனர்.

44
விலகிய மோகன்லால்?

டேர் டெவில் திரைப்படத்தில் அஜித் உடன் மலையாள சூப்பர் ஸ்டார் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க உள்ளதாக பேச்சு அடிபட்டது. ஆனால் தற்போது அவர் அப்படத்தின் ஷூட்டிங் தொடங்கும் முன்பே அதிலிருந்து விலகிவிட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. அவருக்கு பதிலாக கன்னட நடிகர் கிச்சா சுதீப் நடிக்க இருப்பதாக கூறப்படுகிறது. இதுகுறித்த அறிவிப்பு விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. கிச்சா சுதீப் ஏற்கனவே விஜய்க்கு வில்லனாக புலி படத்தில் நடித்திருந்தார். அவர் முதன்முறையாக அஜித் உடன் இணைந்துள்ளதால், டேர் டெவில் திரைப்படத்திற்கு கன்னட ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய எதிர்பார்ப்பு உருவாகி உள்ளது.

Ajith : ஷங்கர் இயக்கத்தில் அஜித்? முதன்முறையாக இணையும் பிரம்மாண்ட கூட்டணி

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

Read more Photos on
click me!

Recommended Stories