பிங்க் நிற பிகினியில் கவர்ச்சி ததும்ப போஸ் கொடுத்த கேஜிஎஃப் நடிகை.... காட்டுத்தீ போல் பரவும் போட்டோஸ் இதோ

First Published Feb 2, 2023, 2:23 PM IST

பிங்க் நிற பிகினி உடையில் கேஜிஎஃப் பட நடிகை மவுனி ராய் நடத்தியுள்ள போட்டோஷூட் புகைப்படங்கள் வெளியாகி சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

பாலிவுட்டில் சின்னத்திரை தொடர்களில் நடித்து பேமஸ் ஆனவர் மவுனி ராய். இவர் நடித்த நாகினி எனும் இந்தி தொடர் மிகப்பெரிய அளவில் வரவேற்பை பெற்றது. அந்த தொடர் தமிழிலும் டப் செய்யப்பட்டு ஹிட் ஆனது.

நாகினி தொடரின் வெற்றிக்கு பின்னர் சினிமாவில் நடிக்க ஆர்வம் காட்டிய மவுனி ராய், கவர்ச்சியிலும் தாராளம் காட்டினார். அதன் பலனாக யாஷ் நடிப்பில் வெளியான கேஜிஎஃப் படத்தின் முதல் பாகத்தில் ஒரு பாடலுக்கு கவர்ச்சி நடனம் ஆடும் வாய்ப்பும் அவருக்கு கிடைத்தது.

இதையடுத்து பாலிவுட்டில் அவருக்கு தொடர்ந்து பட வாய்ப்புகள் குவிந்து வருகின்றன. இந்தியில் கடந்தாண்டு வெளியான பிரம்மாஸ்திரா படத்திலும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து அசத்தி இருந்தார் மவுனி ராய்.

இதையும் படியுங்கள்... ஒரே சீசனில் ஓஹோனு வாழ்க்கை..! புகழோடு சென்று கார் வாங்கிய 'குக் வித் கோமாளி' பிரபலம்.! குவியும் வாழ்த்து!

இவருக்கு கடந்தாண்டு திருமணம் நடந்தது. துபாயை சேர்ந்த தொழிலதிபர் ஒருவரை கடந்தாண்டு ஜனவரி மாதம் திருமணம் செய்துகொண்டார். திருமணத்துக்கு பின்னரும் கவர்ச்சியை கைவிடாத இவர், தொடர்ந்து பல்வேறு போட்டோஷூட்களை நடத்தி வருகிறார்.

அந்த வகையில் தற்போது பிங்க் நிற பிகினி உடையில் மவுனி ராய் நடத்தியுள்ள போட்டோஷூட் புகைப்படங்கள் வெளியாகி இணையத்தில் காட்டுத்தீ போல் பரவி வருகிறது. அதற்கு லைக்குகளும் குவிந்த வண்ணம் உள்ளன.

மவுனி ராயின் இந்த பிங்க் நிற பிகினி போட்டோஷூட் புகைப்படங்களுக்கு 10 லட்சத்துக்கு அதிகமான லைக்குகள் கிடைத்துள்ளன. அவரை இன்ஸ்டாகிராமில் 2.6 கோடி பேர் பின் தொடர்ந்து வருவது குறிப்பிடத்தக்கது.

இதையும் படியுங்கள்... விஜய்யுடன் துபாய்க்கு சீக்ரெட் டிரிப் போன ராஷ்மிகா... புகைப்படம் லீக் ஆனதால் ஷாக் ஆன வாரிசு நடிகை

click me!