புகாரின் அடிப்படையில் மும்பை போலீசார் அடையாளம் தெரியாத அந்த நம்பர் மீது மிரட்டல் மற்றும் பின் தொடர்வது ஆகிய பிரிவுகளின் கீழ் எஃப் ஐ ஆர் பதிவு செய்துள்ளனர்.
நட்சத்திர தம்பதிகளாக வலம் வருபவர்கள் கத்ரீனா கைஃப் மற்றும் அவரது கணவர் விக்கி கவுஷல் இவர்களுக்கு சமூக ஊடகம் வழியாக ஒரு நபர் மிரட்டல் விடுத்துள்ளார். அடையாளம் தெரியாத நபர் ஒருவர் தங்களுக்கு கொலை மிரட்டல் விடுத்ததாக விக்கி புகார் அளித்துள்ளார்.
புகாரின் அடிப்படையில் மும்பை போலீசார் அடையாளம் தெரியாத அந்த நம்பர் மீது மிரட்டல் மற்றும் பின் தொடர்வது ஆகிய பிரிவுகளின் கீழ் எஃப் ஐ ஆர் பதிவு செய்துள்ளனர். இது தொடர்பாக ஊடகங்களிடம் பேசிய அதிகாரி ஒருவர், இதுவரை யாரும் கைது செய்யப்படவில்லை என்றும் எஃப் ஐ ஆர் பதிவு செய்துள்ளோம் அந்த நபரை பற்றி கூடுதல் விவரங்களை பெற முயற்சிக்கிறோம் எனவும் தெரிவித்துள்ளார்.
24
salman khan
முன்னதாக பாலிவுட் பிரபலம் சல்மான் கானுக்கும் அவரது தந்தை சலீம் கானுக்கும் ஒரு மிரட்டல் கடிதம் வந்திருந்தது. அதில் இந்த ஆண்டு மே மாதம் சுட்டுக் கொல்லப்பட்ட பஞ்சாபி பாடகர் சித்து மூஸ்வாலாவின் கதியை தந்தை, மகன் இருவரும் சந்திக்க நேரிடும் என குறிப்பிடப்பட்டிருந்தது. இதையடுத்து சல்மான்கான் மற்றும் அவரது குடும்பத்தினருக்கு கூடுதல் பாதுகாப்பு போடப்பட்டது. பிஷ்னோய் கும்பலிடம் இருந்து மிரட்டல் விடுக்கப்பட்டதாக கூறப்பட்டது. இது குறித்து மும்பை போலீசில் கமிஷனரை நேரில் சென்று சந்தித்த சல்மான் கான், தனிப்படை பாதுகாப்புக்காக ஆயுத உரிமம் பெற விண்ணப்பத்தி இருந்தார்.
கத்ரீனா கைஃப் விக்கி கடந்த ஆண்டு கோலாகலமாக திருமணம் செய்து கொண்டனர். இவர்களது போட்டோக்கள் அடிக்கடி சமூக ஊடகங்களில் வைரலாவது வழக்கமான ஒன்றாகிவிட்டது. அதற்கு முன்பு கத்ரீனா மாலத்தீவில் பிறந்த நாளை கொண்டாடிய வீடியோக்கள் வைரலாகின. தங்கள் நண்பர்கள் மற்றும் உடன் பிறந்தவர்களுடன் அவர்கள் இருந்த விடுமுறை நாட்கள் படங்கள் இணையதளத்தில் வைரலாகின.
அதேபோல ஸ்வாரா பாஸ்கருக்கும் மிரட்டல் கடிதம் வந்திருந்தது. அடையாளம் தெரியாத நபர் மீது நடிகை காவல் நிலையத்தில் புகார் அளித்திருந்தார். ஹிந்தியில் எழுதப்பட்ட கடிதத்தில் ஸ்வாராகவுக்கு எதிராக துஷ்பிரயோகங்கள் மற்றும் அச்சுறுத்தல் கருத்துக்கள் இருந்தன. வீர் சாவர்க்கரை இழிவுபடுத்தியதை நாட்டு இளைஞர்கள் பொறுத்துக் கொள்ள மாட்டார்கள் என்று அந்த கடிதத்தில் குறிப்பிடப்பட்டிருந்தது. இந்நிலைகள் கத்ரீனா கைஃப் மற்றும் விக்கிக்கு கொலை மிரட்டல் வந்திருப்பது பாலிவுட் வட்டாரத்தில் மிகுந்த பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
கத்ரீனா கைஃப் விக்கி கடந்த ஆண்டு கோலாகலமாக திருமணம் செய்து கொண்டனர். இவர்களது போட்டோக்கள் அடிக்கடி சமூக ஊடகங்களில் வைரலாவது வழக்கமான ஒன்றாகிவிட்டது. அதற்கு முன்பு கத்ரீனா மாலத்தீவில் பிறந்த நாளை கொண்டாடிய வீடியோக்கள் வைரலாகின. தங்கள் நண்பர்கள் மற்றும் உடன் பிறந்தவர்களுடன் அவர்கள் இருந்த விடுமுறை நாட்கள் படங்கள் இணையதளத்தில் வைரலாகின.