நயன்தாராவின் கோலமாவு கோகிலா படத்தை இயக்கியதன் மூலம் பிரபலமானவர் இயக்குனர் நெல்சன். இந்த படத்தை தொடர்ந்து சிவகார்த்திகேயனின் டாக்டர் படத்தை இயக்கியிருந்தார். டார்க் காமெடி படமாக வெளியான டாக்டர் வெற்றி இவருக்கு விஜயை வைத்து இயக்கும் வாய்ப்பை பெற்றுக் கொடுத்தது. அதன்படி பீஸ்ட் உருவானது. சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் உருவான இந்த படம் விமர்சனரீதிகள் மோசமான வெற்றிகளை பெற்றிருந்தாலும் வசூலில் நல்ல கல்லா கட்டி இருந்தது. விஜயின் பீஸ்ட் படப்பிடிப்பின் போது ரஜினியுடன் ஒப்பந்தம் ஆகிவிட்டார் நெல்சன்.
மேலும் செய்திகளுக்கு...Dosa King : ஜெய்பீம் இயக்குனரின் அடுத்த அதிரடி... சரவணபவன் ராஜகோபால் - ஜீவஜோதி கதையை படமாக்குகிறார் TJ ஞானவேல்
இந்த படத்திற்கு முதலில் தலைவர் 169 என தலைப்பு வைக்கப்பட்டது. சன் பிக்சர்ஸ் தயாரிக்கும் இதில் அனிருத் தான் இசையமைப்பாளர். நெல்சனின் முந்தைய வெற்றிகளில் கைகோர்த்த அனிரூத் இந்த படத்திலும் மாஸ் ஹிட் பாடல்களை கொடுப்பர் என ரசிகர்கள் காத்திருக்கின்றனர். பின்னர் தலைவர் 169 படத்திற்கான ப்ரோமோவை வெளியிட்டிருந்தது தயாரிப்பு நிறுவனம். அதில் சூப்பர் ஸ்டார், அனிருத், நெல்சன் மூவரும் கருப்பு நிற கோட் சூட் அணிந்து மிகவும் ஸ்டைலாக இருந்தனர்.