சினிமாவில் நடிக்க சென்ற பாக்யா... அதுவும் பிரபுதேவா உடன் - என்ன ரோல்னு தெரிஞ்சா ஷாக் ஆகிடுவீங்க!

Published : Jul 25, 2022, 12:12 PM IST

பாக்யலட்சுமி சீரியலில் நடித்ததன் மூலம் பிரபலமான நடிகை சுசித்ரா, தற்போது பிரபுதேவா உடன் இணைந்து திரைப்படம் ஒன்றில் நடித்து வருகிறார்.

PREV
14
சினிமாவில் நடிக்க சென்ற பாக்யா... அதுவும் பிரபுதேவா உடன் - என்ன ரோல்னு தெரிஞ்சா ஷாக் ஆகிடுவீங்க!

சீரியல் நடிகைகளுக்கு மக்கள் மத்தியில் எப்போதுமே வரவேற்பு இருக்கும். அந்த வகையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பாக்யலட்சுமி தொடரில் மூலம் மக்கள் மத்தியில் பேமஸ் ஆனவர் சுசித்ரா. கன்னட நடிகையான இவர் தமிழில் நடிக்கும் முதல் சிரியல் இதுவாகும். இதில் அவர் பாக்யலட்சுமி என்கிற லீட் ரோலில் நடித்து வருகிறார்.

24

கடந்த சில மாதங்களாக இந்த நிகழ்ச்சி விறுவிறுப்பு குறையாமல் சென்று கொண்டிருப்பதனால் இதன் டிஆர்பி-யில் எகிறியபடி உள்ளது. டிஆர்பி-யில் டாப் 3 பட்டியலில் பாக்யலட்சுமி சீரியல் இடம்பெற்று உள்ளது. இதில் பாக்யலட்சுமியாக நடிக்கும் சுசித்ராவின் நடிப்புக்கு மக்கள் மத்தியில் பாராட்டுக்கள் கிடைத்து வருகின்றன.

இதையும் படியுங்கள்...ரஜினியுடன் ‘முள்ளும் மலரும்’ தொடங்கி விஜய்யின் ‘தெறி’ மூலம் வில்லனாக மிரட்டியது வரை! மகேந்திரனை மறக்க முடியுமா

34

இந்நிலையில், நடிகை சுசித்ரா தற்போது சினிமாவிலும் எண்ட்ரி கொடுத்துள்ளார். இவர் கன்னடம் மற்றும் தமிழில் தயாராகும் புதிய படம் ஒன்றில் பிரபுதேவா உடன் சேர்ந்து நடிக்கிறார். ஆனால் அவர் பிரபுதேவாவுக்கு ஜோடியாக நடிக்கவில்லையாம். இப்படத்தில் அவர் பிரபுதேவாவுக்கு அம்மாவாக நடிக்க ஒப்பந்தமாகி உள்ளாராம்.

44

பாக்யலட்சுமி சீரியலில் அம்மா வேடத்தில் நடித்து அசத்தியதால் அவருக்கு இந்த வாய்ப்பு வழங்கப்பட்டு உள்ளதாக கூறப்படுகிறது. அவர் பிரபுதேவா உடன் எடுத்துக் கொண்ட புகைப்படங்கள் வெளியாகி சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. சின்னத்திரையை போல் சினிமாவிலும் அவர் சாதிக்க வேண்டும் என ரசிகர்கள் பலரும் அவருக்கு வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

இதையும் படியுங்கள்...10 மொழிகளில் பான் வேர்ல்ட் படமாக தயாராகும் புஷ்பா 2... மாஸ் லுக்கில் அல்லு அர்ஜுன் வெளியிட்ட போட்டோ வைரல்

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

click me!

Recommended Stories