தெலுங்கு திரையுலகில் மாஸ் நடிகராக வலம் வருபவர் அல்லு அர்ஜுன். இவர் நடிப்பில் கடந்த ஆண்டு இறுதியில் வெளியான புஷ்பா திரைப்படம் பட்டிதொட்டியெங்கு பட்டைய கிளப்பி பிரம்மாண்ட வெற்றியை ருசித்தது. சுகுமார் இயக்கியிருந்த இப்படத்தில் நடிகர் அல்லு அர்ஜுன் செம்மரம் கடத்தும் நபராக நடித்திருந்தார். அவருக்கு ஜோடியாக ஸ்ரீவள்ளி என்கிற கதாபாத்திரத்தில் ராஷ்மிகா மந்தனா நடித்திருந்தார்.
24
புஷ்பா படத்தின் பிரம்மாண்ட வெற்றிக்கு பெரிதும் உதவியாக இருந்தது அப்படத்தின் பாடல்கள் தான். இப்படத்திற்கு தேவி ஸ்ரீ பிரசாத் இசையமைத்து இருந்தார். இதில் இடம்பெற்ற சாமி சாமி, ஸ்ரீவள்ளி மற்றும் ஊ சொல்றியா மாமா ஆகிய பாடல் வைரல் ஹிட் ஆகின. அதுமட்டுமின்றி அப்பாடல்கள் படமாக்கப்பட்ட விதமும் வேறலெவலில் இருந்ததால் அது படத்திற்கு கூடுதல் பலமாக அமைந்தது.
புஷ்பா படத்தின் வெற்றியைத் தொடர்ந்து அதன் இரண்டாம் பாகம் விரைவில் தயாராக உள்ளது. முதல் பாகத்தை விட இரண்டாம் பாகத்தை மிகவும் பிரம்மாண்டமாக படமாக்க படக்குழு திட்டமிட்டு உள்ளது. அதேபோல் இப்படத்தில் கூடுதலாக ஒரு வில்லன் கதாபாத்திரம் சேர்க்கப்பட்டு அதில் விஜய் சேதுபதி நடிக்க உள்ளதாகவும் கூறப்படுகிறது.
44
இந்நிலையில், சமீபத்திய தகவல்படி புஷ்பா 2 படத்தை பான் வேர்ல்ட் படமாக உருவாக்க படக்குழு திட்டமிட்டுள்ளதாகவும், இதனால் இந்திய மொழிகள் மட்டுமின்றி உலகின் பல்வேறு மொழிகளில் டப்பிங் செய்யப்பட்டு மொத்தம் 10 மொழிகளில் இப்படத்தை வெளியிட உள்ளார்களாம். அதுமட்டுமின்றி இப்படத்தின் நாயகன் அல்லு அர்ஜுன் புது கெட் அப்பில் வெளியிட்டுள்ள புகைப்படம் ஒன்றும் சமூக வலைதளங்களில் செம்ம வைரல் ஆகி வருகின்றன.
தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.