நடிகர் சிவகுமாரின் இளைய மகனான கார்த்தி, சினிமாவின் மீது கொண்ட ஆர்வம் காரணமாக முதலில் இயக்குனர் மணிரத்னத்திடம் உதவி இயக்குனராக சேர்ந்தார். இதையடுத்து அமீர் இயக்கத்தில் கடந்த 2007-ம் ஆண்டு ரிலீசான பருத்திவீரன் படம் மூலம் ஹீரோவாக அறிமுகமானார். அவர் நடித்த முதல் படமே பிளாக்பஸ்டர் ஹிட் ஆனதோடு, தேசிய விருதையும் வென்றது.
இதையடுத்து நடிப்பில் கவனம், செலுத்த ஆரம்பித்த கார்த்தி பையா, ஆயிரத்தில் ஒருவன், நான் மகான் அல்ல, தீரன் அதிகாரம் ஒன்று, சிறுத்தை என தொடர்ந்து வித்தியாசமான கதையம்சம் கொண்ட படங்களில் நடித்தார். இவர் நடித்த படங்களும் அடுத்தடுத்து ஹிட் ஆனதால் குறுகிய காலத்திலேயே தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக உயர்ந்தார் கார்த்தி.
இந்நிலையில், நடிகர் கார்த்தி தான் காதலிக்காதது ஏன் என்பது குறித்து பேட்டி ஒன்றில் மனம்விட்டு பேசியுள்ளார். அதன்படி தனது அண்ணன் சூர்யா, ஜோதிகாவை காதலித்து கல்யாணம் பண்ணியதால், லவ் எதுவும் பண்ணிடாத டானு அம்மா சொல்லிட்டே இருப்பாங்க. அதனாலயே காதல் என்பது என் வாழ்க்கையில் இல்லாமலே போய்விட்டது.