தெலுங்கு திரையுலகில் முன்னணி இயக்குனர்களில் ஒருவரான, பூரி ஜெகன்நாத் இயக்கத்தில், நடிகர் விஜய் தேவரகொண்டா பைட்டராக நடித்துள்ள திரைப்படம் 'லிகர்'.
இப்படம் ஒரே நேரத்தில் தெலுங்கு மற்றும் இந்தி ஆகிய இரண்டு மொழிகளிலும் படமாக்கப்பட்டு உள்ளது. இதை தவிர தமிழ், கன்னடம், மலையாளம் உள்ளிட்ட மொழிகளிலும் இப்படம் டப்பிங் செய்து இதனை பான் இந்தியா படமாக வெளியிட படக்குழுவினர் தயாராகி உள்ளனர்.
இந்நிலையில் இந்த படம் அடுத்த மாதம் சுதந்திர தினத்தை முன்னிட்டு வெளியாக உள்ள நிலையில், படத்தின் புரோமோஷன் பணிகளில் படக்குழு தீவிர கவனம் செலுத்தி வருகிறது.
ஆனால் அனன்யா பாண்டே எல்லை மீறும் அளவிற்கு கவர்ச்சி உடையில் வந்து ஷாக் கொடுத்தார். வரும் அவசரத்தில் ஒரு துப்பட்டாவை எடுத்து உடலில் சுற்றி கொண்டது போன்றே இந்த ஆண்டை இருந்தது. தற்போது இவர் அணிந்திருந்த உடை, சமூக வலைதளத்தில் வெளியாக, நெட்டிசன்கள் தாறுமாறாக கமெண்ட் செய்து வருகிறார்கள்.