அடேங்கப்பா... முதல் நாளிலேயே அந்த படத்தை விட மூன்று மடங்கு அதிக வசூல் - பாக்ஸ் ஆபிஸில் கெத்து காட்டும் விருமன்

First Published | Aug 13, 2022, 7:26 AM IST

Viruman Boxoffice collection : சூர்யா தயாரிப்பில் கார்த்தி நடிப்பில் வெளியாகி இருக்கும் விருமன் திரைப்படத்தின் முதல் நாள் பாக்ஸ் ஆபிஸ் வசூல் நிலவரம் வெளியாகி உள்ளது.

நடிகர் கார்த்தி நடிக்கும் கிராமத்து படங்களுக்கு மக்கள் மத்தியில் எப்போதுமே தனி மவுசு உண்டு இதற்கு காரணம் இவர் நடித்த முதல் படமான பருத்திவீரன் தான். இப்படத்தில் கிராமத்து இளைஞனாகவே வாழ்ந்திருப்பார் கார்த்தி. இதையடுத்து இவர் நடித்த கிராமத்து கதையம்சம் கொண்ட படமான கொம்பனும் மக்களிடையே அமோக வரவேற்பை பெற்றது.

பின்னர் பாண்டிராஜ் இயக்கத்தில் கடைக்குட்டி சிங்கம் எனும் படத்தில் நடித்த கார்த்தி, கிராமத்து நாயகனாக ஹாட்ரிக் வெற்றியை ருசித்தார். இதையடுத்து 4 ஆண்டு இடைவெளிக்கு பின் அவர் கிராமத்து ஹீரோவாக நடித்துள்ள திரைப்படம் விருமன். இப்படத்தை இயக்குனர் முத்தையா இயக்கி உள்ளார். கொம்பன் வெற்றிக்குக்கு பின் கார்த்தியும் முத்தையாவும் இணையும் இரண்டாவது படம் இதுவாகும்.

இதையும் படியுங்கள்... அதிதி ‘ஐ லவ் யூ’... இயக்குனர் ஷங்கர் மகளை காதலிப்பதாக கூறி பரபரப்பை ஏற்படுத்திய நடிகர்

Tap to resize

இப்படத்திற்கு மக்கள் மத்தியில் மிகுந்த எதிர்பார்ப்பு இருந்தது, இதற்கு காரணம் இயக்குனர் ஷங்கரின் மகள் அதிதி இப்படம் மூலம் ஹீரோயினாக அறிமுகமாகி உள்ளார். அதுமட்டுமின்றி இப்படத்தில் யுவனுடன் சேர்ந்து ஒரு பாடலையும் பாடி அசத்தி உள்ளார் அதிதி. இவ்வாறு மிகுந்த எதிர்பார்ப்புக்கு மத்தியில் நேற்று ரிலீசானது விருமன்.

இதையும் படியுங்கள்... கார்த்தி - முத்தையா காம்போவின் ‘கொம்பன்’ மேஜிக் மீண்டும் ஒர்க் அவுட் ஆனதா? - விருமன் படத்தின் முழு விமர்சனம்

இப்படத்திற்கு ஏ செண்டர் ஆடியன்ஸிடம், சற்று கலவையான விமர்சனங்களே கிடைத்தாலும், பி மற்றும் சி செண்டரில் படம் பட்டைய கிளப்பியது. ஷங்கர் மகள் அதிதியின் நடிப்புக்கும் பாராட்டுக்கள் கிடைத்தது. இந்நிலையில், விருமன் படத்தின் பாக்ஸ் ஆபிஸ் நிலவரம் குறித்த தகவல் வெளியாகி கோலிவுட்டையே ஆச்சர்யத்தில் ஆழ்த்தி உள்ளது.

இதையும் படியுங்கள்...  இயக்குனர் ஷங்கரின் குடும்பத்தினரோடு ‘விருமன்’ பர்ஸ்ட் ஷோ பார்க்க வந்த நடிகர் விஜய்யின் மனைவி சங்கீதா

அதன்படி கார்த்தி நடிப்பில் கடைசியாக வெளிவந்த கிராமத்து படமான கடைக்குட்டி சிங்கம் படத்தைவிட விருமன் திரைப்படம் முதல்நாளில் 3 மடங்கு அதிக வசூல் ஈட்டி உள்ளதாக சினிமா வட்டாரத்தில் கூறப்படுகிறது. அதுமட்டுமின்றி கார்த்தியின் கெரியரில் முதல் நாளில் அதிக வசூல் ஈட்டிய படமாகவும் விருமன் இருக்கும் என்றும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இதையும் படியுங்கள்... ஹீரோயினாக ஜொலித்தாரா ஷங்கர் மகள்?... விருமன் நாயகி அதிதி நடிப்பை பார்த்து எல்லாரும் சொல்லும் ‘அந்த’ ஒரு விஷயம்

Latest Videos

click me!