விஜய்யின் தந்தையும் இயக்குனருமான எஸ்.ஏ.சந்திரசேகர், கடந்த 1981 ஆம் ஆண்டு வெளியான 'சட்டம் ஒரு இருட்டறை' என்கிற படத்தின் மூலம் திரையுலகில் இயக்குனராக அறிமுகமானார். இதைத் தொடர்ந்து சுமார் 50க்கும் மேற்பட்ட படங்களை தற்போது வரை இயக்கியுள்ளார். இவர் இயக்குனர் என்பதையும் தாண்டி, தயாரிப்பாளர், எழுத்தாளர், என பன்முக திறமைகளோடு விளங்கி வருகிறார்.
இதுகுறித்து அவர் கூறுகையில், நான் ஒரு கிறிஸ்தவ குடும்பத்தில் பிறந்தவன். சோபா இந்து குடும்பத்தில் பிறந்தவர். எங்களுக்கு சிவாஜி அவர்கள் மனைவி கமலாம்பால் தான் தாலி எடுத்துக் கொடுத்து, திருமணம் செய்து வைத்தார். திருமணத்திற்கு பிறகு சர்ச்சுக்கு சென்றாலும் இருவரும் செல்வோம். கோயிலுக்கு சென்றாலும் இருவரும் செல்வோம். அப்போது ஒருமுறை சோபா தன்னிடம் ஏன் இருவரும் கிறிஸ்தவ முறைப்படி இரண்டாவது முறையாக திருமணம் செய்து கொள்ளக் கூடாது என கேட்டார்.
இருவரும் வெவ்வேறு படகில் பயணம் செய்து கொண்டிருக்கிறோம். இதில் பெரிய அலையோ அல்லது சுழற்சியை வந்தால் இருவரும் ஒரே இடத்தில் கரை ஒதுங்க முடியாது வெவ்வேறு திசையில் தான் இருப்போம் என சோபா சொன்னார். அதில் ஆயிரம் அர்த்தங்கள் நிறைந்தது. எனவே தன்னுடைய 6 வயது இருக்கும் போது, இரண்டாவது முறையாக திருமணம் செய்து கொள்ள முடிவு செய்தோம். அதன்படி எங்களது திருமணம் கிறிஸ்தவ முறைப்படி நுங்கம்பாக்கம் சர்ச்சில் 1980ல் நடந்தது. இதில் தங்களுடைய குடும்பத்தினர் யாரும் கலந்து கொள்ளவில்லை. தங்களுடைய மகன் மட்டுமே கலந்து கொண்டதாக கூறியுள்ளார். மேலும் தங்களுடைய இரண்டாவது திருமணம் நடந்தபோது சோபா கர்ப்பமாக இருந்ததாகவும் தங்களுடைய மகன் விஜய்யின் தலைமையிலேயே இந்த திருமணம் நடந்ததாக கூறியுள்ளார். இது குறித்த புகைப்படம் ஒன்று தற்போது சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது.
மேலும் செய்திகள்: எல்லை மீறிய கவர்ச்சி... பேன்ட் போடாமல் ஷர்ட் மட்டும் அணிந்து... பப்பி ஷேமாக போஸ் கொடுத்த ஐஸ்வர்யா தத்தா!