hansika Motwani
தென்னிந்திய திரை உலகில் மிகவும் பிரபலமான நடிகையாக இருப்பவர் ஹன்சிகா மோத்வானி. அவரது சமீபத்தியப்படமான மஹா மூலம் அவர் தனது ஐம்பதாவது மைல்களை எட்டி உள்ளார். இந்த படத்தில் சிம்பு சிறப்பு தோற்றத்தில் நடித்திருந்தார்.
hansika Motwani
இதற்கிடையே தனது 31வது பிறந்த நாளை கொண்டாடினார் ஹன்சிகா. இந்த புகைப்படங்களை இன்ஸ்டாவில் பகிர்ந்த நடிகைக்கு ரசிகர்கள் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். அதோடு இவரது வெள்ளை நிற கிளாமர் உடை இளசுகளை கவர்ந்திருந்தது.
hansika Motwani
தமிழில் முன்னணி நடிகர்களான தனுஷ், விஜய், சூர்யா உள்ளிட்டோர் உடன் நடித்ததன் மூலம் ரசிகர் பட்டாளத்தை பெற்றவர். பாலிவுட் வாய்ப்புகள் கிடைத்தவுடன் தனது கொழுகொழு உடலை ஒல்லி பெல்லியாக மாற்றி அவ்வப்போது கவர்ச்சி போஸ் கொடுத்து வருகிறார். இதற்கிடையே ஹாரர் மூவிகளை தேர்ந்தெடுத்த ஹன்சிகா அரண்மனை சீரிஸ் மூலம் புகழ்பெற்றார். தற்போது இவர் தெலுங்கு, ஹிந்தி, தமிழ் உள்ளிட்ட மொழிகளில் பிஸியாக உள்ளார்.