Published : Aug 12, 2022, 09:13 PM ISTUpdated : Aug 12, 2022, 09:46 PM IST
120க்கும் மேற்பட்ட திரைப்படங்கள் திரையிடப்படுவதை தவிர வரிசைப்படுத்தப்பட்ட மற்ற நிகழ்வுகள், இந்தியாவின் சுதந்திர தின கொண்டாட்டங்கள் மற்றும் சிறப்பாக தொகுக்கப்பட்ட பிற நிகழ்ச்சிகள் வரிசை உள்ளது.
13வது மெல்போர்னின் இந்திய திரைப்பட விழாநடைபெற்று வருகிறது. இந்த நிகழ்ச்சி பாடகி சோனா பாலிவுட் பிரபலங்களான அபிஷேக் பச்சன், டாப்ஸி பண்ணு, வாணி கபூர், தமன்னா பாட்டியா, ஷெபாலி ஷா, மற்றும் பலர் பங்கேற்றனர்.
24
Indian Film Festival of Melbourne
இன்று (ஆகஸ்ட் 12) -ம் தேதி துவங்கியுள்ள இந்த விழா ஆகஸ்ட் 20ஆம் தேதி வரை நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்நிகழ்வின் பாடகி சோனா மொஹபத்ரா, முன்னாள் கிரிக்கெட் வீரரும், இந்திய அணியின் முன்னாள் கேப்டனுமான கபில் தேவ் மற்றும் திரைப்பட தயாரிப்பாளர்களான அனுராக் காஷ்யப், கபீர் கான், அபர்ணா சென், நிகில் அத்வானி மற்றும் ஷூஜித் சிர்கார் ஆகியோரும் இதில் பங்கு பெற்றனர்.
அபிஷேக் பச்சன் மன்மர்சியான்' திரையிடலைப் பார்க்க உற்சாகமாக இருக்கிறார். அதேபோல நடிகை டாப்ஸி பண்ணு நடிக்கும் 'டோபரா' வும் திரையிடப்படவுள்ளது.. இது குறித்து பேசிய டாப்ஸி பண்ணு, 'நான் டோபராவை பார்க்க ஆவலுடன் காத்திருக்கிறேன். எனது முழு குடும்பமும் இங்கு இந்தியாவை பிரதிநிதிப்படுத்துவதற்காக நான் மிகவும் பெருமைப்படுகிறேன். அனைத்து கொண்டாட்டங்களிலும் பங்கெற்பதற்கு ஆவலுடன் காத்திருக்கிறேன். சினிமாவில் லீடர்ஷிப் விருது வழங்கப்படுவது மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறது என கூறியிருந்தார்.
நான் வெளிநாடு செல்லும் போதெல்லாம் மக்கள் வேறுபடுத்தி கேட்பதில்லை. அவர்கள் அதை இந்திய சினிமா என்று அழைக்கிறார்கள் என கூறினார். இது போன்ற உள்ளடங்குகள் அதிகம் தயாரிக்கப்பட்ட அனைவராலும் பாராட்டப்படுவதால் பார்வையாளர்கள் பான் இந்தியா திரைப்படங்களை பார்க்க விரும்புகிறார்கள் என்றும் கூறியுள்ளார்.