நடிகையும் மாடலும் ஆன ஜானகி சுதிர் மலையாள ரசிகர்கள் மத்தியில் மிகவும் பிரபலமானவர். பிக் பாஸ் சீசன் 4 மூலம் புகழ்பெற்ற நடிகையான இவர் தற்போது ஹோலி வுண்ட் என்கிற படத்தில் நடித்துள்ளார். முன்னதாக துல்கர் சல்மானின் ஒரு ஏமாண்டம் பிரேம கதா மற்றும் சன்ஸ் போன்ற திரைப்படங்களில் இவரின் நடிப்பு ரசிகர்களை வெகுவாக கவர்ந்து இருந்தது.