Priya Bhavani Shankar : மெல்லிய குட்டை உடையில் வெளிநாட்டு சூரியனோடு விளையாடும் பிரியா பவானி சங்கர்!

First Published | Aug 12, 2022, 6:16 PM IST

பெல்ஜியம் சூரியனை மறைத்தபடி ப்ரியா பவானி சங்கர் அவிழ்த்துவிட்ட கூந்தலுடன் கொடுத்திருக்கும் தேவதை போஸ் பேன்ஸ் மனதை அலைக்கழித்து வருகிறது.

சமீபத்தில் வெளியான யானை படத்தில் நாயகியாக நடித்திருந்தார் பிரியா பவானி சங்கர். ஹரி இயக்கிய  இந்த படத்தில் இவருக்கு முக்கிய கதாபாத்திரம் கொடுக்கப்பட்டிருந்தது. ஹிட் படங்களில் நடித்ததன் மூலம் பிரியா பவானி சங்கர் டாப் டென் நாயகளில் ஒருவராக குறுகிய காலத்தில் இடம்பிடித்து விட்டார்.

priya bhavani shankar

விஜய் டிவியில் ஒளிபரப்பான கல்யாண முதல் காதல் வரை தொடரின் மூலம் ரசிகர்களுக்கு அறிமுகமான பிரியா பவானி மேயாத மான் படத்தின் மூலம் சினிமாவிற்குள் என்ட்ரி கொடுத்தார். முதல் படத்திலேயே சிறந்த பெண் அறிமுகத்திற்கான விருதுகளைப் பெற்ற இவர் எஸ் ஜே சூர்யாவின் மான்ஸ்டர் படத்தில் நாயகியானர்.

மேலும் செய்திகளுக்கு...யாஷிகாவை ஏமாற்றிய நிரூப்.. முதல் முறையாக பிரேக் அப் குறித்து மனம் திறந்த பிரபலம் !

Tap to resize

priya bhavani shankar

பின்னர் கார்த்தியின் கடைக்குட்டி சிங்கத்தில் மூன்று நாயகிகளில் ஒருவராக வந்த பிரியா பவானி, மாஃபியா அத்தியாயம் மற்றும் டைம் என்ன பாஸ் வெப்தொடர்களிலும் தோன்றி இருந்தார். பின்னர் ஜீவா மற்றும் அருள்நிதியுடன் களத்தில் சந்திப்போம் உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார்.

மேலும் செய்திகளுக்கு...nayanthara Vignesh Shivan second honeymoon : மீண்டும் வெளிநாடு !விமானத்தில் ரோமன்ஸ் செய்யும் விக்கி-நயன்

Priya bhavani shankar

தற்போது யானை படத்தை தொடர்ந்து தனுஷின் திருச்சிற்றம்பலம் படத்தில் நடித்து முடித்துள்ள ப்ரியா பவானி தற்போது எஸ் ஜே சூர்யாவுடன் பொம்மை, அசோக் செல்வனுக்கு ஜோடியாக ஹாஸ்டல், ஜெயம் ரவியுடன் அகிலன்,  உள்ளிட்ட படங்களில் நாயகியாக நடித்து வருகிறார்.

மேலும் செய்திகளுக்கு....JR 29 shooting spot accident : ஜெயம் ரவி, நயன்தாரா சூட்டிங்கில் விபத்து...சினிமா தொழிலாளி கவலைக்கிடம்!

priya bhavani shankar

மேலும் லாரன்ஸின் ருத்ரன், சிம்புவின் பத்து தல, உலகநாயகன் கமலஹாசனின் இந்தியன் 2 உள்ளிட்ட படங்களுக்காக காத்திருக்கிறார் பிரியா பவானி.  தற்போது பிரபல நாயகிகள் போலவே இவரும் தனது  விடுமுறையை வெளிநாட்டில் கழித்து வருகிறார்.அதன் பொருட்டு வெளிநாடு பறந்து உள்ள ப்ரியா பவானி அங்கு விதவிதமான போட்டோ சூட் நடத்தி அதனை வெளியிடுகிறார். 

priya bhavani shankar

மார்க்கெட் ஏறியதால் உடையை குறைத்து கொண்ட இவர் குட்டை உடை, டைட் ஜீன்ஸ் போன்ற கவர்ச்சி உடை அணிந்து கொடுக்கும்  புகைப்படங்கள் ரசிகர்களை வெகுவாக கவர்ந்து வருகிறது. அந்த வகையில் தற்போது பிங்க் நிற மெல்லிய குட்டை கவுனுடன் இவர் கொடுத்துள்ள போஸ் இளசுகள் மத்தியில் பிரபலமாகி வருகிறது.

priya bhavani shankar

மற்றொரு புகைப்படத்தில் பெல்ஜியம் சூரியனை மறைத்தபடி ப்ரியா பவானி சங்கர் அவிழ்த்துவிட்ட கூந்தலுடன் கொடுத்திருக்கும்  தேவதை போஸ்  பேன்ஸ் மனதை அலைக்கழித்து வருகிறது.

Latest Videos

click me!