யாஷிகாவை ஏமாற்றிய நிரூப்.. முதல் முறையாக பிரேக் அப் குறித்து மனம் திறந்த பிரபலம் !

First Published | Aug 12, 2022, 5:03 PM IST

முன்னதாக பிக் பாஸ் சீசன் 5 போட்டியாளராக கலந்து கொண்ட நிரூப்புடன் இவர் காதல் வயப்பட்டதாகவும் பின்னர் இருவருக்கும் இடையே பிரேக் அப் ஏற்பட்டதாகவும் இவரின் சிபாரிசில் தான் நிரூப் பிக்பாஸிற்குள் என்ட்ரி கொடுத்தார் என்றும் தகவல் பரவியிருந்தது.

yashika aannand

சமீபத்தில் தனது இருபத்தி மூன்றாவது பிறந்த நாளை கொண்டாடிய யாஷிகா. அதோடு சேர்த்து உள்ளாடை அணியாமல் வெளியிட்ட புகைப்படங்கள் ரசிகர்களின் மனதை கொள்ளையடித்தன. அவ்வப்போது கவர்ச்சி கொஞ்சும் குட்டை பாவாடை பிகினி என சமூக வலைதளத்தை கலங்கடித்து வருகிறார் யாஷிகா. 

yashika aannand

யாஷிகா தமிழில் இருட்டு அறையில் முரட்டு குத்து படத்தின் மூலம் ஹீரோயினியாக அறியப்படுகிறார். அந்த படத்தில் கவர்ச்சி கடலில் நீந்திய யாஷிகா ரசிகர்களை வெகுவாக கவர்ந்தார். பின்னர் இவர் பிக் பாஸ் நிகழ்ச்சியின் மூலம் பட்டி தொட்டி எல்லாம் அறிமுகமானார்.  அந்த நிகழ்ச்சியிலும் குட்டை டவுசருடன் அங்குமிங்கும் திரியும் இவருக்கு ரசிகர்கள் ஏகபோக ஆதரவு அளித்திருந்தனர். அதோடு அந்த நிகழ்ச்சிகள் பல சர்ச்சைகளில் சிக்கி உள்ளார்.

Tap to resize

yashika aannand

பின்னர் பிக்பாஸில் இருந்து வெளியில் வந்த யாஷிகா 'ஜோம்பி' உள்ளிட்ட படங்களில் கமிட் ஆகி இருந்தார். அதோடு தொலைக்காட்சியிலும் தோன்றியவர் சென்னை டைம்ஸ்காக பாராட்டுகளை பெற்றிருந்தார். இதற்கிடையே அவ்வப்போது கவர்ச்சி புகைப்படங்களை வெளியிட்டு வரும் யாஷிகா. கடந்த ஜூலை மாதத்தில் மிகப்பெரிய விபத்தில் சிக்கிக் கொண்டார்.

மேலும் செய்திகளுக்கு...nayanthara Vignesh Shivan second honeymoon : மீண்டும் வெளிநாடு !விமானத்தில் ரோமன்ஸ் செய்யும் விக்கி-நயன்

yashika aannand

மகாபலிபுரத்திலிருந்து இரவு விருந்தை முடித்துக் கொண்டு தன் நண்பர்களுடன் காரில் புறப்பட்ட யாஷிகா வரும் வழியில் பாலத்தின் மீது மோதி காரை விபத்துக்கு உள்ளாக்கினார். இந்த விபத்தில் இவருடைய தோழி சம்பவ இடத்திலேயே உயிர் இழக்க, யாசிக்காவிற்கு இடுப்பு எலும்பு மற்றும் கால்களில் எலும்பு முறிவு ஏற்பட்டது.

yashika aannand

இதற்காக பல மாதங்கள் சிகிச்சையில் இருந்த யாஷிகாவை பார்த்த ரசிகர்கள் மிகுந்த மன வருத்தத்திற்கு ஆளாகினர். சுமார் எட்டு மாத சிகிச்சைக்குப் பிறகு மெல்ல மெல்ல உடல் தேறிய யாஷிகா மீண்டும் தனது பழைய தோற்றத்திற்கு வந்து பழைய முன்பை விட அதிக கிளாமரை கொட்டி வருகிறார்.

மேலும் செய்திகளுக்கு....JR 29 shooting spot accident : ஜெயம் ரவி, நயன்தாரா சூட்டிங்கில் விபத்து...சினிமா தொழிலாளி கவலைக்கிடம்!

niroop - yashika

முன்னதாக பிக் பாஸ் சீசன் 5 போட்டியாளராக கலந்து கொண்ட நிரூப்புடன் இவர் காதல் வயப்பட்டதாகவும் பின்னர் இருவருக்கும் இடையே பிரேக் அப் ஏற்பட்டதாகவும் இவரின் சிபாரிசில் தான் நிரூப் பிக்பாஸிற்குள் என்ட்ரி கொடுத்தார் என்றும் தகவல் பரவியிருந்தது. அதற்கேற்ப பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு வருகி தந்த யாஷிகாவுடன் நிரூப் உருகி தீர்த்திருந்தார்.  பின்னர் பிக் பாஸ் அல்டிமேட்டிலும் கலந்து கொண்டஇவர் ரன்னர் அப்பாக வந்தார். 

niroop - yashika

சமீபத்தில் நிரூப்  யாஷிகாவுடன் பிரேக் அப் செய்தது குறித்து வீடியோவை வெளியிட்டு இருந்தார். அதில் "இருவரும் ஒருவரை ஒருவர் விரும்பினோம், காதலர்களாக இருந்தோம், பிரண்ட்ஸாகவும் இருந்தோம், நமது உறவு பற்றி சொல்லி ஸ்டேட்டஸ் வைத்துக்கொள்ள முடியவில்லை என்றாலும் எப்போதும் போல் தான் நாம் பேசிக் கொண்டிருக்கிறோம் என தெரிவித்திருந்தார்.

மேலும் செய்திகளுக்கு...ஆகஸ்ட் 31க்கு ரெடியான விக்ரமின் கோப்ரா! அடுத்தடுத்த தகவலை வெளியிடும் படக்குழு

niroop - yaashika

இது குறித்து சமீபத்திய செய்தியாளர் சந்திப்பு யாஷிகாவிடம் கேட்கப்பட்டது. அதற்கு பதில் அளித்த யாஷிகா நல்ல டயலாக் டெலிவரி நான் சொன்ன டயலாக்கை அப்படியே அவனுடைய டயலாக் போல் பேசியுள்ளான்.  என்றார் அவர்,  தங்களது காதல் முறிவு குறித்து முதல் முறையாக மனம் திறந்தார். பிரேக் அப் குறித்து பேசிய யாஷிகா,  ஒரு பாய்பிரண்ட் அல்லது கேர்ள் பிரண்ட் இருப்பது லவ் கிடையாது. அதை லவ் என்றே சொல்ல முடியாது. முதுகில் குத்தினாலும் அவர்களுக்கு நல்லது செய்துவிட்டு போக வேண்டும். கிரேக்கப்பிற்கு நிறைய காரணங்கள் இருக்கு. அதில் முக்கியமானது மனது காயப்பட்டு உடைந்து போனது தான் என ஓப்பனாக தெரிவித்துள்ளார்.

Latest Videos

click me!